முகப்பு // Personal // Savings Accounts
விஷ்ராம சேமிப்பு கணக்கு
011 7 640 640
அறிமுகம்

கார்கில்ஸ் வங்கியின் விஷ்ராம சேமிப்புக் கணக்கானது ஓய்வூதியம் பெறுபவர்களுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கணக்கு வைத்திருப்பவருக்கு அவர்களின் ஓய்வூதியத்தை அனுப்பும் போது வசதியான முறையில் வடிவமைக்கப்பட்ட விசேட அம்சங்களையூம் நன்மைகளையூம் இக்கணக்கு வழங்குகிறது.

தகைமை

– இலங்கை குடியிருப்பாளராக இருத்தல்
– அரச ஓய்வூதியம் பெறுபவர் அல்லது விதவைஃதபுதாரர் (ஓய்வூதியத் திணைக்களத்தின் மூலம் மனைவியின் ஓய்வூதியத்தைப் பெறுபவர்)
– செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டையை (தே.அ.அ) வைத்திருக்கும் 75 வயதிற்குட்பட்டவராக இருத்தல்

முக்கிய சிறப்பம்சங்கள்

– ஓய்வூதியதாரரின் சிறப்பு பற்று அட்டையை பயன்படுத்தும் போது பரிந்துரைக்கப்படும் மருந்துகளுக்கு கார்கில்ஸ் ஃட் சிட்டி மருந்தகத்தில் இருந்து 7.5% வரை மருந்தக விலைக் கழிவூ
– “விஷ்ராம” எனும் அடையாளமிடப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட வாழ்நாள் முழுவதுக்குமான இலவச பற்று அட்டை

– முன்-அங்கீகரிக்கப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட கடன் அட்டை

– புதிய சிறுவர் சேமிப்புக்; கணக்கிற்கான பாராட்டுப் பரிசு

வட்டி விகிதம்

– நிலையான சேமிப்பு விகிதம் + 2% மேலதிக வட்டி

தேவையான ஆவணங்கள்

– முறையாக பூர்த்தி செய்யப்பட்ட சேமிப்பு கணக்கு விண்ணப்பம்

– தேசிய அடையாள அட்டை (தே.அ.அ)

– ஓய்வூதிய அடையாள அட்டை அல்லது வேறு ஏதேனும் சான்றாவணம்

– குடியிருப்பு முகவரி பதியப்பட்ட சமீபத்திய பாவனைக் கட்டணப் பற்றுச்சீட்டு ஃ வங்கி அறிக்கையின் பிரதி (முகவரி தே.அ.அ லிருந்து வேறுபட்டால்)

நியதிகள் மற்றும் நிபந்தனைகள்

– குறைந்தபட்ச ஆரம்ப வைப்புத்தொகை ரூ.500
– புதிதாகத் திறக்கப்படும் கணக்குகள் 2மூ மேலதிக வட்டி விகிதத்திற்குத் தகுதியுடையவை.
– கூட்டு கணக்குகள் அனுமதிக்கப்படவில்லை.

– ஒரு நபரை கணக்கு வைத்திருப்பவர் நியமிக்கலாம். எவ்வாறாயினும்இ எந்தச் சு+ழ்நிலையிலும் அந்நபர் மற்ற நன்மைகளுக்கு உரிமையூடையவராக இருக்கமாட்டார்இ

– அரச ஓய்வூதியம் மாதந்தோறும் ஒதுக்கப்பட்டு கணக்கில் வரவூ வைக்கப்பட வேண்டும். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மாதாந்திர ஓய்வூ+தியம் பெறப்படாவிட்டால்இ கணக்கானது சாதாரண சேமிப்புக் கணக்காக மாற்றப்படும் மற்றும் “விஷ்ராம” சேமிப்புக் கணக்கிற்கு வடிமைக்கப்பட்ட அனைத்து நன்மைகளையூம் அதற்கு பயன்படுத்தல் தடைசெய்யப்படும்.

– கார்கில்ஸ் பல்பொருள் அங்காடியில் கார்கில்ஸ் ஃட் சிட்டி சலுகைகளுடன் இணைத்து பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுக்கு மருந்தக பற்றுச்சீட்டுகளுக்கான விலைக்கழிவூ வழங்கப்படும்.

– அவ்வப்போது வங்கியால் மதிப்பாய்வூ செய்யப்படக்கூடிய மருந்தக விலைக்கழிவூ மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே வழங்கப்படும் (ஓய்வூதிய நாட்கள்). அதிகபட்ச தள்ளுபடி ஒரு நாளைக்கு ரூ.1000 ஆகும்.

– பருவமடையாதவருக்கான பாராட்டு பரிசுக்கு தகுதி பெறஇ ஓய்வூதியம் பெறுபவர் அவர்களின் விஷ்ராம சேமிப்புக் கணக்கிலிருந்து ஒரு நிலையியல் அறிவூறுத்தலை அமைக்க வேண்டும். 12 தவணைக் கட்டணங்களை வெற்றிகரமாகப் பெற்ற பின்னர் பருவமடையாதவர்களுக்கு 5வது பிறந்தநாளில் தரமான பாடாசாலைப் பை பரிசு வழங்கப்படும்;.

– கார்கில்ஸ் வங்கி எந்த நேரத்திலும் கார்கில்ஸ் வங்கி “விஷ்ராம” சேமிப்புக் கணக்கு தொடர்பான உற்பத்தி அம்சங்கள்ஃசலுகைகள்இ நியதி மற்றும் நிபந்தனைகளை மாற்ற சேர்க்க அல்லது திருத்துவதற்கான அதிகாரத்தை கொண்டுள்ளது.

– வழமையான சேமிப்பு தொடர்பான ஏனைய அனைத்து பொது நியதிகள்
நிபந்தனைகள் மற்றும் இயக்க செயல்முறைகள் “விஷ்ராம” சேமிப்புக் கணக்கிற்கும் ஏற்புடையது.

கார்கில்ஸ் வங்கி உங்களை வரவேற்கின்றது!
கார்கில்ஸ் வங்கி வழங்கும் வியக்கவைக்கும் வங்கிச்சேவைகளை அனுபவியுங்கள்
உங்களை நாமும் அறிந்துகொள்வோம்!
cargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.
OR
Inquiry Form