முகப்பு // Treasury
திறைசேரி உற்பத்திகள்
மூலோபாய முதலீடுகள்,
சிறந்த வருமானம்!
011 7 640 640
நேரடி ஒப்பந்தங்கள்

 

நேரடி ஒப்பந்தங்கள் என்றால் என்ன?

நேரடி ஒப்பந்தம் என்பது மிகவும் சாதாரணமான மற்றும் பிரபலமான அந்நியச் செலாவணி உற்பத்தியாகும். ஒரு நாணயத்திற்கு பதிலாக மற்றொரு நாணயத்தை வாங்குவதற்கு அல்லது விற்பதற்கான ஒப்பந்தமே இதுவாகும். ஒரு நாணயத்தை மற்றொரு நாணயத்துடன் ஒப்பிடுகையில் அதன் தற்போதைய பெறுமதியில் “நேரடி நாணய மாற்று விகிதம்” என்ற விலை அடிப்படையில் அதே தினத்திலேயே நீங்கள் இந்த ஒப்பந்தத்தை முடிவுறுத்திக் கொள்ளலாம்.

 

இதன் மூலமான நன்மைகள்/ஆபத்துக்கள் என்ன?

உங்களுடைய நிறுவனத்தின் தேவைகளுக்கு ஏற்ப நாணயத்தை வாங்குவதற்கு அல்லது விற்பதற்கு நேரடி சந்தை உங்களுக்கு இடமளிக்கின்ற போதிலும், தனியொரு வர்த்தக நடவடிக்கைத் தினத்தில் கூட நேரடி ஒப்பந்த விகிதத்தின் ஏற்றத்தாழ்வுகள் பெருமளவில் எதிர்வுகூற முடியாதவையாகவே காணப்படுகின்றன. எதிர்கால வெளிநாட்டு நாணய தேவைப்பாடுகளுக்காக நேரடி சந்தையை நம்பியிருப்பது பெரும்பாலும் ஒரு ஊகத்தின் அடிப்படையில் மட்டுமே. வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதிகள் பாதகமான மாற்றங்களுக்கு உள்ளாகக்கூடிய ஆபத்து காரணமாக உங்களது நிறுவனத்தின் நிதிப்பாய்ச்சலை அது பாதிக்கக்கூடும்.

 

உதாரணம்

அமெரிக்காவிலுள்ள நிறுவனம் ஒன்றிடமிருந்து நீங்கள் இருப்புகளைக் கொள்வனவு செய்து அதற்கான கொடுப்பனவு மூன்று மாதங்களில் கிடைக்கவுள்ளது என வைத்துக் கொள்வோம். தற்போதைய நேரடி நாணய மாற்று விகிதத்தில் அமெரிக்க நிதியைக் கொள்வனவு செய்வதற்கு நீங்கள் முடிவுத் திகதி வரை காத்திருப்பதற்கு தீர்மானிக்க முடியும்.

முன்னோக்கிய ஒப்பந்தங்கள்

 

முன்னோக்கிய ஒப்பந்தங்கள் என்றால் என்ன?

ஒரு நாணயத்திற்குப் பதிலாக மற்றுமொரு நாணயத்தை வாங்கி அல்லது விற்பனை செய்து எதிர்காலத்தில் அதனை முற்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விகிதம் மற்றும் திகதியில் முடிவுறுத்திக் கொள்வதற்கு முன்னோக்கிய ஒப்பந்தம் உங்களுக்கு இடமளிக்கின்றது.

 

நேரடி ஒப்பந்தங்களைப் போலன்றி, எதிர்காலத்தில் நிகழவுள்ள கொடுக்கல்வாங்கல் நடவடிக்கை ஒன்றுக்கு தற்போதே விலையை நிர்ணயித்து நாணய மாற்று விகிதங்களின் ஏற்றத்தாழ்வினால் நிகழக்கூடிய ஆபத்துக்களை முன்னோக்கிய ஒப்பந்தங்கள் நீக்குகின்றன.

 

இதன் மூலமான நன்மைகள்/ஆபத்துக்கள் என்ன?

உங்களுடைய எதிர்கால நிதிப்பாய்ச்சலை முற்கூட்டியே தீர்மானிப்பதும், பாதுகாப்பதும் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படுகின்ற வர்த்தக நடவடிக்கைகளில் காணப்படும் சில ஐயப்பாடுகளைப் போக்குகின்றது. அந்நியச் செலாவணிச் சந்தையில் ஏற்படும் பாதகமான ஏற்றங்களுக்கு எதிராக இது உங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கின்றது. எனினும் நாணய மாற்று விகிதங்களில் சாதகமான நிலைமைகள் காணப்படும் போது உங்களுக்கான வாய்ப்புக்கள் இங்கு இழக்கப்படுகின்றன.

 

உதாரணம்

அமெரிக்காவிலுள்ள நிறுவனம் ஒன்றிடமிருந்து நீங்கள் இருப்புகளைக் கொள்வனவு செய்து அதற்கான கொடுப்பனவு மூன்று மாதங்களில் கொடுக்க வேண்டியுள்ளது என வைத்துக் கொள்வோம். மூன்று மாதத்தில் அதனை முடிவுறுத்திக் கொள்வதற்கு நீங்கள் தற்போதைய நாணய மாற்று விகிதத்தில் அதனை உத்தரவாதப்படுத்திக் கொள்ள முடியும்.

திறைசேரி முறி

 

திறைசேரி முறிகள் எனப்படுவது யாது?

நிலையான ஒரு காலப்பகுதியில் நிலையான வட்டி விகிதத்தை வழங்கும் வகையில் இலங்கை மத்திய வங்கியால் விநியோகிக்கப்படுகின்ற ஒரு முதலீட்டுக் கருவியாக இது உள்ளது. இதற்கு வருமான வரி விலக்களிக்கப்பட்டுள்ளமையால் அனேகமாக மக்கள் முறிகள் பால் ஈர்க்கப்படுகின்றனர்.

 

இதன் மூலமான நன்மைகள்/ஆபத்துக்கள் என்ன?

முதலீட்டுத் தொகையின் அளவு வேறுபாடின்றி, முதலீட்டின் அனைத்து அம்சங்களுக்கும் அரசாங்கத்தின் உத்தரவாதம் கிடைக்கின்றமையால் திறைசேரி முறிகள் எவ்விதமான ஆபத்தும் அற்றவை.

 

வேண்டிய தகைமைகள்

அ. இலங்கையில் வசிக்கும் தனிநபர்கள்

ஆ. இலங்கையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள்

இ. வெளிநாட்டு நிதிகள், பிராந்திய நிதிகள் அல்லது பரஸ்பர நிதிகள் அடங்கலாக வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்

உ. இலங்கைக்கு வெளியில் பதிவு செய்யப்பட்ட நிறுவன அமைப்புக்கள்

ஊ. இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியில் வசிக்கும் வெளிநாட்டுப் பிரஜைகள்

எ. இலங்கையில் வதியாத இலங்கையர்களும் திறைசேரி முறிகளுக்கு விண்ணப்பிக்கும் தகைமையைக் கொண்டுள்ளனர்

 

நீங்கள் மேற்குறிப்பிட்டவாறு இ முதல் எ வரையான பிரிவினுள் அடங்கியிருப்பின் பிணைய முதலீட்டுக் கணக்கொன்றின் மூலமாக முதலீட்டை மேற்கொள்ள வேண்டி இருப்பதுடன், மத்திய வங்கியில் கிடைக்கப்பெறுவது தொடர்பான விசாரணையின் பின்னர் பிணையங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

 

திறைசேரி முறியை எவ்வாறு பெற்றுக்கொள்வது

நீங்கள் விரும்புகின்ற கிளை ஒன்றுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள அதிகாரி ஒருவருடன் உங்களது தேவை தொடர்பில் கலந்தாலோசிக்க முடியும்.

 

இந்த இணையத்தளத்தில் உள்ள கட்டணங்கள் மற்றும் அறவீடுகள் பக்கத்தைப் பார்ப்பதன் மூலமாக திறைசேரி முறிகளுக்கான வட்டி விகிதங்களை அறிந்து கொள்ள முடியும். தயவுசெய்து உரிய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கிளையில் கையளிக்கவும். உங்களது தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டை கொண்டு செல்வதற்கு மறக்க வேண்டாம். உங்களது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு அது அவசியம்.

 

மீளப்பெறுதல்

திறைசேரித் திணைக்களத்திற்கு முறையான கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்ட பின்னர் சந்தை விலை விகிதங்களின் அடிப்படையில் உங்களுடைய திறைசேரி முறிகள் கழிவுப் பெறுமதியில் திரும்ப செலுத்தப்படும்.

 

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது

சேவை தொடர்பான தகவல் விபரங்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஆகியன காலத்திற்கு காலம் மாற்றத்திற்கு உட்படக்கூடியவை.

ஆகவே பிந்திய தகவல் விபரங்கள், தற்போதைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அறிந்து கொள்ள உங்களுக்கு அருகாமையில் உள்ள கிளையை தொடர்புகொள்ளுமாறு ஆலோசிக்கப்படுகின்றது.

திறைசேரி உண்டியல்

 

திறைசேரி உண்டியல்கள் எனப்படுவது யாது?

ஒரு வருடத்திற்கும் குறைந்த முதிர்ச்சிக் காலத்துடன் நிலையான வட்டி விகிதம் ஒன்றை வழங்கும் வகையில்; இலங்கை மத்திய வங்கியின் ஆதரவுடன் வழங்கப்படுகின்ற ஒரு குறுகியகால கடன் பொறுப்பாகும். இதற்கு வருமான வரி விலக்களிக்கப்பட்டுள்ளமையால் அனேகமாக மக்கள் உண்டியல்கள் பால் ஈர்க்கப்படுகின்றனர்.

 

இதன் மூலமான நன்மைகள்/ஆபத்துக்கள் என்ன?

முதலீட்டுத் தொகையின் அளவு வேறுபாடின்றி, முதலீட்டின் அனைத்து அம்சங்களுக்கும் அரசாங்கத்தின் உத்தரவாதம் கிடைக்கின்றமையால் திறைசேரி முறிகள் எவ்விதமான ஆபத்தும் அற்றவை.

 

வேண்டிய தகைமைகள்

அ. இலங்கையில் வசிக்கும் தனிநபர்கள்

ஆ. இலங்கையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள்

இ. வெளிநாட்டு நிதிகள், பிராந்திய நிதிகள் அல்லது பரஸ்பர நிதிகள் அடங்கலாக வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்

உ. இலங்கைக்கு வெளியில் பதிவு செய்யப்பட்ட நிறுவன அமைப்புக்கள்

ஊ. இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியில் வசிக்கும் வெளிநாட்டுப் பிரஜைகள்

எ. இலங்கையில் வதியாத இலங்கையர்களும் திறைசேரி உண்டியல்களுக்கு விண்ணப்பிக்கும் தகைமையைக் கொண்டுள்ளனர்

 

நீங்கள் மேற்குறிப்பிட்டவாறு இ முதல் எ வரையான பிரிவினுள் அடங்கியிருப்பின் பிணைய முதலீட்டுக் கணக்கொன்றின் மூலமாக முதலீட்டை மேற்கொள்ள வேண்டி இருப்பதுடன், மத்திய வங்கியில் கிடைக்கப்பெறுவது தொடர்பான விசாரணையின் பின்னர் பிணையங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

 

திறைசேரி உண்டியலை எவ்வாறு பெற்றுக்கொள்வது

நீங்கள் விரும்புகின்ற கிளை ஒன்றுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள அதிகாரி ஒருவருடன் உங்களது தேவை தொடர்பில் கலந்தாலோசிக்க முடியும்.

இந்த இணையத்தளத்தில் உள்ள கட்டணங்கள் மற்றும் அறவீடுகள் பக்கத்தைப் பார்ப்பதன் மூலமாக திறைசேரி உண்டியல்களுக்கான வட்டி வீதங்களை அறிந்து கொள்ள முடியும். தயவுசெய்து உரிய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கிளையில் கையளிக்கவும். உங்களது தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டை கொண்டு செல்வதற்கு மறக்க வேண்டாம். உங்களது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு அது அவசியம்.

 

மீளப்பெறுதல்

திறைசேரித் திணைக்களத்திற்கு முறையான கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்ட பின்னர் சந்தை விலை விகிதங்களின் அடிப்படையில் உங்களுடைய திறைசேரி உண்டியல்கள் கழிவுப் பெறுமதியில் திரும்ப செலுத்தப்படும்.

 

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது

சேவை தொடர்பான தகவல் விபரங்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஆகியன காலத்திற்கு காலம் மாற்றத்திற்கு உட்படக்கூடியவை.

ஆகவே பிந்திய தகவல் விபரங்கள், தற்போதைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அறிந்து கொள்ள உங்களுக்கு அருகாமையில் உள்ள கிளையை தொடர்புகொள்ளுமாறு ஆலோசிக்கப்படுகின்றது.

 

​மீள்வாங்கல்​ & ​​மீள்கொள்வனவு

 

மீள்கொள்வனவு உடன்படிக்கையின் கீழான கடன் வழங்கல் மற்றும் மீள்கொள்வனவு உடன்படிக்கையின் கீழான கடன் பெறுதல் எனப்படுபவை யாது?

ஏற்றுக்கொள்ளப்பட்ட வட்டி விகிதத்தின் கீழ் குறிப்பிட்ட காலப்பகுதியொன்றில் வாடிக்கையாளரிடமிருந்து திறைசேரி உண்டியல்கள் அல்லது முறிகளுக்கு எதிராக வங்கி நிதியை கடனாகப் பெற்றுக்கொள்ளும் ஒரு குறுகிய கால கடனாகும். முகவர் அரசாங்க பிணையங்களை முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்து, முதிர்ச்சியின் போது அவற்றை மீளக் கொள்வனவு செய்கின்றார்.

பிணையத்தை விற்பனை செய்யும் தரப்பினைப் பொறுத்தவரையில் (எதிர்காலத்தில் அதனை மீளக்கொள்வனவு செய்யும் உடன்பாட்டுடன்) இது மீள்கொள்வனவு உடன்படிக்கையின் கீழான கடன் வழங்கலாக அமைவதுடன், கொடுக்கல்வாங்கல் நடவடிக்கையின் மறு தரப்பைப் பொறுத்தவரையில் (பிணையத்தை கொள்வனவு செய்து எதிர்காலத்தின் அதனை விற்பனை செய்வதற்கு உடன்படுகின்ற) மீள்கொள்வனவு உடன்படிக்கையின் மாற்று மீள்கொள்வனவாகும்.

 

இதன் மூலமான நன்மைகள்/ஆபத்துக்கள் என்ன?

பணப்புழக்கம் – ஒரே இரவில் பணத்தை முதலீடு செய்யும் ஆற்றலை மீள்கொள்வனவு உடன்படிக்கையின் கீழான கடன் வழங்கல் எமக்கு வழங்குவதுடன், பணப்புழக்கத்தை நிர்வகிக்கும் முயற்சியில் ஒரு முக்கியமான பாகமாகவும் காணப்படுகின்றது.

வருவாய் அனுகூலம் – பாரம்பரிய பணச் சந்தை மார்க்கங்களுடன் ஒப்பிடுகையில் மீள்கொள்வனவு உடன்படிக்கையின் கீழான கடன் வழங்கல் பொதுவாக மேலதிக வருவாயை ஈட்டித்தருகின்றன.

நெகிழ்வுப்போக்கு – பணப்புழக்கத்தின் நிலவரத்திற்கு ஏற்ப மீள்கொள்வனவு உடன்படிக்கையின் கீழான கடன் வழங்கல் முதல் தொகையை அதிகரித்தோ அல்லது குறைத்தோ சரிசெய்து கொள்ள முடியும்.

 

வேண்டிய தகைமைகள்

கார்கில்ஸ் வங்கியில் சேமிப்பு அல்லது நடைமுறைக் கணக்கினைக் கொண்டுள்ள தனிநபர் வாடிக்கையாளர்கள் அல்லது இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வர்த்தக நிறுவனங்கள் மீள்கொள்வனவு உடன்படிக்கையின் கீழான கடன் வழங்கலை கொள்வனவு செய்ய முடியும்.

 

மீள்கொள்வனவு உடன்படிக்கையின் கீழான கடன் வழங்கல் மற்றும் மீள்கொள்வனவு உடன்படிக்கையின் கீழான கடன் பெறுதல் ஆகியவற்றை எவ்வாறு பெற்றுக்கொள்வது

நீங்கள் விரும்புகின்ற கிளை ஒன்றுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள அதிகாரி ஒருவருடன் உங்களது தேவை தொடர்பில் கலந்தாலோசிக்க முடியும்.

இந்த இணையத்தளத்தில் உள்ள கட்டணங்கள் மற்றும் அறவீடுகள் பக்கத்தைப் பார்ப்பதன் மூலமாக மீள்கொள்வனவு உடன்படிக்கையின் கீழான கடன் வழங்கல் மற்றும் மீள்கொள்வனவு உடன்படிக்கையின் கீழான கடன் பெறுதல்களுக்கான வட்டி விகிதங்களை அறிந்து கொள்ள முடியும். தயவுசெய்து உரிய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கிளையில் கையளிக்கவும். உங்களது தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டை கொண்டு செல்வதற்கு மறக்க வேண்டாம். உங்களது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு அது அவசியம்.

 

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது

உற்பத்தி தொடர்பான தகவல் விபரங்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஆகியன காலத்திற்கு காலம் மாற்றத்திற்கு உட்படக்கூடியவை.

ஆகவே பிந்திய தகவல் விபரங்கள், தற்போதைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அறிந்து கொள்ள உங்களுக்கு அருகாமையில் உள்ள கிளையை தொடர்புகொள்ளுமாறு ஆலோசிக்கப்படுகின்றது.

 

 

கார்கில்ஸ் வங்கி உங்களை வரவேற்கின்றது!
கார்கில்ஸ் வங்கி வழங்கும் வியக்கவைக்கும் வங்கிச்சேவைகளை அனுபவியுங்கள்

“Yesterday is a cancelled cheque, tomorrow is a promissory note, today is the only cash you have, so spend it wisely” – Kay Lyons

உங்களை நாமும் அறிந்துகொள்வோம்!
cargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.
OR
Inquiry Form