Home // About Us
நிறுவன முகாமைத்துவம்
Driven by passion.
Committed to success.
சேனாரத் பண்டார
நிர்வாக இயக்குனர் / தலைமை நிர்வாக அதிகாரி
சேனாரத் பண்டார
நிர்வாக இயக்குனர் / தலைமை நிர்வாக அதிகாரி

திரு. செனரத் பண்டார அவர்கள் ஒரு வங்கித் தொழில்சார நிபுணர் என்பதோடு, இலங்கை வங்கியில் 30 வருடங்களுக்கும் மேலாக சேவை புரிந்து ஓய்வூபெற்ற, ஒரு புகழ்பெற்ற பொது முகாமையாளர்/பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளராவார்.  

இவர் லங்கா கிளியர் (தனியார்) வரையறுக்கப்பட்ட கம்பனி, கடன் தகவல் பணியகம், மற்றும் வரையறுக்கப்பட்ட லங்கா நிதி சேவைகள் பணிகம் உள்ளிட்ட இலங்கை வங்கியின் பல்வேறு ணை நிறுவனங்கள் மற்றும் துணை வாரியங்களில் சேவையாற்றியுள்ளார்.

இவர் இலங்கையின் வங்கியாளர்கள் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும்: இலங்கை வயம்ப பல்கலைகழக பேரவையின் உறுப்பினராகவும்: தாய்லந்து பாங்கொக் எனும் இடத்தினை தளமாக கொண்டு இயங்குகின்ற ஒரு பிராந்திய அமைப்பான ஆசியபசுபிக் கிராமிய விவசாய சங்கத்தின் (APRACA) தலைவராகவம்: இலங்கை வங்கியாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவராகவும்: இலங்கை தொழில்முறை வங்கியாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.  

திரு. பண்டார அவர்கள் களனி பல்கலைகழகத்தில் இருந்து இளங்கலை அறிவியல் பட்டமும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் முகாமைத்துவ பட்டப்படிப்பின் பின்னரான கற்கைநெறிக்கான நிறுவனத்தில் முதுகலை வணிக நிர்வாகப் பட்டமும் பெற்றுள்ளார் அத்தோடு இலங்கை வங்கியாளர்களின் வங்கி முகாமைத்துவ நிறுவனத்தில் முதுகலை நிர்வாக டிப்ளோமா கற்கை நெறியையும் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள ஹாவரர்ட் பிசினஸ் ஸ்கூலில் இருந்து மேம்படுத்தப்பட்ட முகாமைத்துவ கற்கைநெறியையும் நிறைவு செய்துள்ளார். இவர் இலங்கையின் வங்கியாளர்கள் நிறுவனத்தின் ஒரு உறுப்பினராகவும் உள்ளார்.    

 

பீ எஸ் மாதவன்
தலைமை நடவடிக்கை அதிகாரி
பீ எஸ் மாதவன்
தலைமை நடவடிக்கை அதிகாரி

பட்டய முகாமைத்துவக் கணக்காளர்கள் கற்கை நிலையத்தின் (ஐக்கிய இராச்சியம்) மற்றும் இலங்கை பட்டய கணக்காளர்கள் கற்கை நிலையம் ஆகியவற்றின் ஒரு இணை உறுப்பினரான திரு. பிரபு மாதவன் அவர்கள், வர்த்தகத்துறையில் கலைமாணி பட்டத்தையும் பெற்றுள்ளார். நிதி, கணக்காய்வு, கணக்கியல் மற்றும் வரிவிதிப்பு துறைகளில் அவர் 19 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

அவர் கார்கில்ஸ் சிலோன் பீஎல்சி நிறுவனத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.

 

தலால் மருசூக்
தலைமை மூலோபாய அதிகாரி
தலால் மருசூக்
தலைமை மூலோபாய அதிகாரி

 

தலால் மருசூக் பட்டய முகாமைத்துவக் கணக்காளர்களின் (UK) ஒரு இணை உறுப்பினர் மற்றும் ஒரு பட்டய உலகளாவிய முகாமைத்துவக் கணக்காளர் ஆவார். ஈக்விட்டி ஆய்வு, பெருநிறுவன நிதியிடல், முதலீட்டு மதிப்பீடு, முதலீட்டாளர் உறவுகள், திட்டமிடல் மற்றும் வியூகம் ஆகிய துறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். 2012 இல் கார்கில்ஸ் குழுமத்தில் சேர்வதற்கு முன்பு, CT CLSA Securities (Pvt) Ltd இல் ஆராய்ச்சிக் குழுவை தலால் வழிநடத்தினார். சில்லறை மற்றும் நுகர்வோர் பொருட்கள், உற்பத்தி, வங்கி மற்றும் நிதி, விவசாயம் மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுபவம் பெற்றவர்.

சந்திரதாச அமரசிங்கே
துணை பொது முகாமையாளர்- சில்லறை வணிகம் மற்றும் வணிக வங்கி
சந்திரதாச அமரசிங்கே
துணை பொது முகாமையாளர்- சில்லறை வணிகம் மற்றும் வணிக வங்கி

திரு. சந்திரதாச அமரசிங்க, அபிவிருத்தி வங்கியியல், கிளை வங்கியியல், சில்லறை வங்கியியல், பெருநிறுவன மற்றும் கடல்சார் வங்கியியல் ஆகியவற்றில் 30 வருடங்களுக்கும் மேலான அனுபவமுள்ள ஒரு தொழில் வங்கியாளராக உள்ளார். அவர் கார்கில்ஸ் வங்கியில் இணைவதற்கு முன்னர் சில்லறை விற்பனை, விற்பனை மற்றும் சேனல் முகாமைத்துவத்தை கவனிக்கும் வகையில் பிரதிப் பொது முகாமையாளர் பதவியில் இலங்கை வங்கிக்கு சேவையாற்றினார். அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் தனது BSc மற்றும் Msc ஐப் பெற்றுள்ளார். அவர் இலங்கையின் வங்கியாளர்கள் நிறுவகத்தின் (AIB) உறுப்பினராகவும், இலங்கையில் உள்ள நிபுணத்துவ வங்கியாளர்கள் சங்கத்தின் உடனடித் தலைவராகவும் இருந்தார்.

அமெந்ரா டி சில்வா
கம்பனி செயலாளர்
அமெந்ரா டி சில்வா
கம்பனி செயலாளர்

2018 மே 1 ஆம் திகதியன்று கம்பனி செயலாளராக நியமிக்கப்பட்ட அவர், வங்கித் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளார். சட்டத்தரணியான அவர், International Compliance Association இடமிருந்து இணக்கப்பாட்டு (Compliance) துறையில் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுள்ளார். இலங்கை தேசிய அபிவிருத்தி வங்கியில் சட்ட அதிகாரியாகவும், ஹற்றன் நஷனல் வங்கியில் சட்டத் துறை (நிறுவன) முகாமையாளராகவும் அவர் கடமையாற்றியுள்ளார். வங்கியில் இணைந்து கொள்வதற்கு முன்பாக தேசிய அபிவிருத்தி வங்கியில் இணக்க தொழிற்பாடுகளுக்கான தலைமை அதிகாரியாக அவர் கடமையாற்றியுள்ளார்.

சஜீவனி சொலாங்காராச்சி
சட்டப் பிரிவு- உதவிப் பொது முகாமையாளர்
சஜீவனி சொலாங்காராச்சி
சட்டப் பிரிவு- உதவிப் பொது முகாமையாளர்

தொழில்ரீதியாக ஒரு சட்டத்தரணியான சஜீவனி சொலாங்காராச்சிஅவர்கள் வர்த்தகம், உணவு உற்பத்திகளின் சில்லறை வியாபாரம், உணவுச் சேவைகள், உற்பத்தி மற்றும் உடமை மாற்றம் தொடர்பான சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றுள்ளதுடன், சட்டத்துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் கலைமாணிப் பட்டத்தையும் அவர் பெற்றுள்ளார்.

 

1999 ஆம் ஆண்டு ஜனாதிபதி சட்டத்தரணியான திரு. டபிள்யூ. தயாரத்ன அவர்களிடம் ஒரு கனிஷ்ட வழக்கறிஞராக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த அவர், 2003 ஆம் ஆண்டில் ஒரு சட்ட அதிகாரியாக கார்கில்ஸ் (சிலோன்) பீஎல்சி நிறுவனத்தில் இணைந்து கொண்டார். 2012 ஆம் ஆண்டில் அவர் கார்கில்ஸ் வங்கியில் இணைந்த சமயத்தில் கார்கில்ஸ் குழுமத்தின் சட்டப் பிரிவிற்கு தலைமை வகித்திருந்தார்.

அஜித் அல்லிராஜா
வர்த்தகத்துறை -உதவிப் பொது முகாமையாளர்
அஜித் அல்லிராஜா
வர்த்தகத்துறை -உதவிப் பொது முகாமையாளர்

அஜித் அல்லிராஜா அவர்கள் 1989 இல் ஏஎன்இஸட் கிறின்லேஸ் வங்கியில் வர்த்தகத் தொழிற்பாடுகளுக்கான தலைமை அதிகாரியான தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்ததுடன், அதன் பின்னர் 2001 ஆம் ஆண்டில் ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கியுடன் இணைந்திருந்தார். சர்வதேச மற்றும் உள்நாட்டு வங்கிகளில் பணியாற்றி 28 ஆண்டுகளுக்கும் மேலான வங்கிச்சேவை அனுபவத்தைக் கொண்டுள்ள அவர் அத்துறையில் ஆழமான அறிவைக் கொண்டுள்ளார். வங்கிச்சேவையில் தனது தொழில் வாழ்க்கையில் வர்த்தகம், ஆபத்து, கணக்காய்வு, தொழிற்பாடுகள் மற்றும் கடனட்டைகள் என பல்வேறு துறைகளில் முகாமைத்துவ பதவி நிலைகளை அவர் வகித்துள்ளார்.

சர்வதேச வர்த்தகத்துறையில் பல ஆண்டு கால அனுபவத்தைக் கொண்டுள்ள அஜித் அவர்கள், 2016 இல் கார்கில்ஸ் வங்கியுடன் இணைந்து கொள்வதற்கு முன்பதாக, இலங்கை ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கியில் வர்த்தக சேவைகளுக்கான தலைமை அதிகாரி பதவியை வகித்துள்ளார்.

லசந்த மகேந்திரராஜா
Deputy Head -Business Banking
லசந்த மகேந்திரராஜா
Deputy Head -Business Banking

லசந்த மகேந்திரராஜா அவர்கள் மொத்த வங்கிச்சேவை, வாணிப சேவைகள், நிறுவன வங்கிச்சேவை, சில்லறை மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கடன், நடுத்தரநிறுவனங்கள், குத்தகை மற்றும் கிளை வங்கிச்சேவை ஆகிய துறைகளில் நிரூபிக்கப்பட்ட சாதனைகளுடன் 14 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

இந்திக்க பெர்னாண்டோ
தலைமை தகவல் அதிகாரி
இந்திக்க பெர்னாண்டோ
தலைமை தகவல் அதிகாரி

இந்திக பெர்னாண்டோ தகவல் தொழிநுட்பத்தில் 30 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைப் பெற்றுள்ளார் மற்றும் அவுஸ்திரேலியாவின் கர்டின் பல்கலைக்கழகத்தில் தகவல் முகாமைத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். தேசிய அபிவிருத்தி வங்கியில் 13 வருடங்கள் பணியாற்றிய இந்திக்க 2015இல் கார்கில்ஸ் வங்கியில் இணைந்தார். 2000ஆம் ஆண்டு ஏபிஎன் அம்ரோ வங்கியில் தனது வங்கிப் பணியைத் தொடங்கினார். தேசிய லொத்தர் சபை மற்றும் Saudi Aramco (அமெரிக்க எண்ணெய் நிறுவனம்) ஆகியவற்றில் அவரது முன் அனுபவம், அவரது மொத்த தகவல் தொழிநுட்ப வெளிப்பாட்டிற்கு மேலும் 8 ஆண்டுகள் சேர்க்கிறது.

ரஜினி பிரபாகரன்
உதவி பொது முகாமையாளர் கடன் நிர்வாகம் மற்றும் கருவூல பின் அலுவலகம்
ரஜினி பிரபாகரன்
உதவி பொது முகாமையாளர் கடன் நிர்வாகம் மற்றும் கருவூல பின் அலுவலகம்

ரஜினி பிரபாகரன் அவர்கள் சில்லறை வங்கிச்சேவை, திறைசேரி, சர்வதேச தொழிற்பாடுகள், செயற்திட்ட முகாமைத்துவம் மற்றும் முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அமுலாக்கம் ஆகிய துறைகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன், ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் கனடாவின் UFJ வங்கி ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். இலங்கை வங்கியாளர்கள் கற்கைநிலையத்தின் இணை அங்கத்தவரான அவர், இலங்கை தொழில்சார் வங்கியாளர்கள் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினருமாவார். அத்துடன் நிதியியல் சந்தைச் சங்கமான ACI இடமிருந்து ACI தொழிற்பாடுகளுக்கான சான்றிதழையும் அவர் பெற்றுள்ளார்.

சார்மணி குலதுங்க
மனிதவளத் துறை தலைமை அதிகாரி
சார்மணி குலதுங்க
மனிதவளத் துறை தலைமை அதிகாரி

மனிதவள முகாமைத்துவத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள ஷர்மனி குலதுங்க ஆடை உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பாடல் மற்றும் வங்கிச்சேவை போன்ற பல்வேறு தொழிற்துறைகளில் பணியாற்றியுள்ளார்.

ஹேமாஸ் குழுமத்தில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய அவர் பின்னர் Textured Jersey Lanka (MAS Holdings சகோதரத்துவ நிறுவனம்) மற்றும் பாரதி எயார்டெல் லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார். Informatics International Limited மற்றும் hSenid Software International ஆகிய இரண்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒட்டுமொத்த மனிதவளத் துறைக்கான தலைமைத்துவப் பதவியை வகித்துள்ள அவர், அந்த நிறுவனங்களின் சிரேஷ்ட மூலோபாய தலைமை அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். கார்கில்ஸ் வங்கியில் சேருவதற்கு முன்பு யூனியன் வங்கியில் அவர் கடமையாற்றியுள்ளார்.

மனிதவள மேம்பாட்டில் தொழில்முறை தகுதிகளுடன் முகாமைத்துவப் பட்டம் பெற்றுள்ள இவர், மனிதவள செயல்பாடுகள், திறமை மேம்பாடு, பணியாளர் ஈடுபாடு, பணியாளர் உறவுகள் மற்றும் மூலோபாய மனித வள மேலாண்மை ஆகியவற்றில் பரந்த அளவை நிர்வகிப்பதில் விரிவான அனுபவத்தைப் பெற்றுள்ளார்.

தொழிலாளர் ஒழுங்குமுறைகளில் சரளமான அறிவைக் கொண்டுள்ள இவர், தொழில்துறை உறவுகள் மற்றும் தொழிலாளர் தீர்ப்பாய வழக்குகளை நிர்வகிப்பதில் தனது நிபுணத்துவத்தை நிரூபித்துள்ளார். நவீன மனிதவள மேம்பாட்டு நடைமுறைகளில் அனுபவ தகுதியை நிர்ணயித்து திட்டமிடல், HAY வழிகாட்டுதல்களின்படி தொழில் மதிப்பீடுகள், கூட்டு மதிப்பெண் அட்டை போன்றவற்றில் அவர் ஆழமான, நேரடி அனுபவங்களைக் கொண்டுள்ளார்.

சமிலா அபேசூரிய
மீள்அறவீடுகள் பிரிவு தலைமை அதிகாரி
சமிலா அபேசூரிய
மீள்அறவீடுகள் பிரிவு தலைமை அதிகாரி

தொழில்சார்ரீதியாக ஒரு வங்கியாளரான சமிலா அபேசூரிய அவர்கள், தொழிற்துறையில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். சேகரிப்புக்கள் மற்றும் மீள் அறவீடுகள் துறையில் அவர் ஆழமான அனுபவத்தைக் கொண்டுள்ளார். கார்கில்ஸ் வங்கியுடன் இணைந்து கொள்வதற்கு முன்பதாக அவர் எச்எஸ்பிசி வங்கி, நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி மற்றும் பான் ஏசியா வங்கி ஆகியவற்றில் சேவையாற்றியுள்ளார். அவர் அவுஸ்திரேலியாவின் எடித் கோவன் பல்கலைக்கழகத்தில் வர்த்தக நிர்வாகத்துறையில் முதுமாணிப் பட்டம் பெற்றுள்ளார்.

துஷ்யந்தன் சோமசுந்தரம்
மத்திய விற்பனை பிரதானி
துஷ்யந்தன் சோமசுந்தரம்
மத்திய விற்பனை பிரதானி

10 வருட முகாமையாளர் அனுபவத்துடன், 13 வருடங்கள் வங்கியியல் அனுபவத்தை கொண்டவராக வங்கித் துறையில் செயல்திறனை வெளிப்படுத்தி விற்பனை நிபுணராக அனுபவத்தைக் கொண்டவராக மத்திய விற்பனை பிரதானி திரு. துஷ்யந்தன் சோமசுந்தரம் இருக்கின்றார்.  நேஷன்ஸ் ட்ரஸ்ட் பேங்க் பிஎல்சியில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் கார்கில்ஸ் வங்கி லிமிடெட் நிறுவனத்திற்கு மாறிய திரு. சோமசுந்தரம், வர்த்தக உறவு முகாமைத்துவம், குழு முகாமைத்துவம், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் போன்றவற்றில் வெளிப்பாட்டைக் கொண்டுள்ளார். அவர் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் (PCM) உறுப்பினராக உள்ளார். மலேசியாவின் ஆசியா இ பல்கலைக்கழகத்தில் சந்தைப்படுத்தலில் முதுமானி பட்டத்தையும், இலங்கை- கொழும்பில் வர்த்தக மற்றும் முகாமைத்துவத்திற்கான கேம்பிரிட்ஜ் கல்லூரியில் வர்த்தக நிர்வாக முதுமானிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

டில்ஹானி கஜநாயக்க
நிதி பிரதானி
டில்ஹானி கஜநாயக்க
நிதி பிரதானி

இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் சகஉறுப்பினரான டில்ஹானி கஜநாயக்க, ஜயவர்த்தன பல்கலைக்கழகத்தின் இளமானி கணக்கியல் (சிறப்பு) பட்டத்தினையும், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நிதியியலில் வர்த்தக நிர்வாக முதுமானிப் பட்டத்தையும் பெற்றிருக்கின்றார். அவரது கல்வி மற்றும் தொழில் வாழ்க்கை முழுவதும், இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவகத்தின் இறுதிப் பரீட்சையில் முதலாம் தரவரிசை விருது, இறுதியாண்டில் மிக உயர்ந்த ஒட்டுமொத்த GPAக்கான CIMA தங்கப் பதக்கம், இளமானி கணக்கியல் பிரிவில் முகாமைத்துவ கணக்கியல் துறையில் சிறந்த மாணவர், நிதியியலில் வர்த்தக நிர்வாக முதுமானிப் பட்டப்படிப்பின் போது முதலீட்டு முகாமைத்துவம் மற்றும் வர்த்தக புள்ளியியலில் சிறந்த செயல்திறன் உட்பட அவரது சிறந்த செயல்திறனுக்காக பல பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். கொமர்ஷல் பேங்க் ஆஃப் சிலோன் பிஎல்சி மற்றும் தேசிய அபிவிருத்தி வங்கி பிஎல்சி ஆகிய இரண்டு வங்கிகளில் 10 ஆண்டுகள் உட்பட நிதி அறிக்கை, கணக்காய்வு மற்றும் வரிவிதிப்பு ஆகியவற்றில் 17 ஆண்டுகளுக்கும் மேலான விரிவான அனுபவத்தை அவர் கொண்டுள்ளார். கார்கில்ஸ் வங்கியில் இணைவதற்கு முன்னர், டில்ஹானி இலங்கையின் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவில் நிதிப் பணிப்பாளராகப் பணியாற்றினார்.

கயந்த விஜேகோன்
இணக்க நடைமுறைகளுக்கான தலைமை அதிகாரி
கயந்த விஜேகோன்
இணக்க நடைமுறைகளுக்கான தலைமை அதிகாரி

கயந்த விஜேகோன் அவர்கள் இலங்கையில் ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கியில் தனது வங்கித் தொழிலை ஆரம்பித்திருந்ததுடன், அதன் பின்னர் 16 ஆண்டுகளாக வெளிநாட்டில் பணியாற்றியுள்ளார். சொத்துக்கள் தளத்தின் அடிப்படையில் மத்திய கிழக்கிலுள்ள மிகப் பாரிய வங்கியான Emirates NBD மற்றும் HSBC அடங்கலாக சர்வதேச வங்கிகளில் பணியாற்றியுள்ள அவர், இணக்கப்பாட்டு நடைமுறைகள் சார்ந்த பல்வேறு பதவிகளில் கடமையாற்றியுள்ளார். கார்கில்ஸ் வங்கியில் இணைந்து கொள்வதற்கு முன்பதாக HSBC இன் MENAT (மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா மற்றும் துருக்கி) பிராந்தியத்திற்கான நிதியியல் குற்றச்செயல் இணக்கப்பாடு/நிதியியல் குற்றச்செயல் அச்சுறுத்தல் கட்டுப்பாட்டு தொழிற்பாடுகள் பிரிவை அவர் முகாமைத்துவம் செய்துள்ளார்.

சமந்தா பகோடா
வர்த்தக வங்கித் தலைவர்
சமந்தா பகோடா
வர்த்தக வங்கித் தலைவர்

திரு. சமந்தா பாகொட, ஹட்டன் நேஷனல் வங்கியில் தனது வங்கிப் பணியை ஆரம்பித்து 23 ஆண்டுகால வங்கியியல் வெளிப்பாட்டைக் கொண்டிருக்கின்றார். தனிப்பட்ட நிதிச் சேவைகள், பருப்பொருளாதார, SME & பெருநிறுவன கடன், மீட்டெடுப்புகள், கிளை மற்றும் பிராந்திய வங்கியியல், வணிக மேம்பாடு, மனிதவள மற்றும் நிர்வாகம் போன்ற துறைகளில் அவர் அனுபவம் பெற்றவர், அவர் வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் MBA (தகுதி) பட்டம் பெற்றுள்ளார் – UK, PGD. வங்கி தகவல்தொடர்பு, SME கடன் திறன் மதிப்பீட்டு சான்றிதழ் ஒமேகா Inc.-, USA, PIM-USJ இலிருந்து நிர்வாக மேலாண்மை மேம்பாட்டிற்கான சான்றிதழ், அமெரிக்கன் கல்லூரியில் OB & HRM இல் டிப்ளோமா, வங்கி மற்றும் நிதியில் டிப்ளோமா மற்றும் இன்ஸ்டிடியூட் இன் அசோசியேட் உறுப்பினர் SL (AIB) வங்கியாளர்கள் என்பவற்றைப் பெற்றுள்ளார்.

கௌசி பெர்னாண்டோ
அட்டை சேவைகளின் தலைவர்
கௌசி பெர்னாண்டோ
அட்டை சேவைகளின் தலைவர்

திருமதி கௌஷி பெர்னாண்டோ, கடனட்டை கொடுப்பனவுகள், கடனட்டை நிதி/செயல்பாடுகள் மற்றும் வங்கி மற்றும் நிதித் துறையில் வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றில் 18 ஆண்டுகளுக்கும் மேலான விரிவான அனுபவம் பெற்றவர். 2005 இல் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், கார்கில்ஸ் வங்கியில் சேர்வதற்கு முன்பு அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்ட்ஸ் மையத்தில் பணியாற்றினார். திருமதி பெர்னாண்டோ பெட்ஃபோர்ட்ஷயர் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும், வணிக நிர்வாகிகள் சங்கத்தில் டிப்ளோமாவும் [ABE] மற்றும் லண்டன் பிசினஸ் ஸ்கூலில் நிதி மேலாண்மையில் டிப்ளோமாவும் பெற்றுள்ளார்.

குசலா கருணாரத்ன
உள் தணிக்கைத் தலைவர்
குசலா கருணாரத்ன
உள் தணிக்கைத் தலைவர்

குசலா கருணாரத்ன 22 வருடங்களுக்கும் மேலான அனுபவம் மற்றும் வங்கியியல் மற்றும் நிதித்துறையில் உள்ளுர் மற்றும் சர்வதேச அளவில் ஒட்டுமொத்த வெளிப்பாட்டைக் கணக்கிடுகிறார். அவர் வங்கியில் இணைவதற்கு முன்னர் மாலைத்தீவு மொரிஷியஸ் கொமர்ஷல் வங்கியின் நிதி முகாமையாளராக பணியாற்றினார் மற்றும் முன்னர் இலங்கை கொமர்ஷல் வங்கியில் பணியாற்றியுள்ளார். அவர் பட்டய முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனம் (CIMA-UK) மற்றும் இலங்கை வங்கியாளர்கள் நிறுவனம் (IBSL) ஆகியவற்றின் இணை உறுப்பினராக உள்ளார். அவர் பட்டய உலகளாவிய முகாமைத்துவ கணக்காளர்கள் (CGMA) உறுப்பினராகவும் உள்ளார். குசலா கார்டிஃப் மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தில் (ஐக்கிய இராச்சியம்) சிறப்புடன் நிதித்துறையில் எம்பிஏ படித்துள்ளார். அவரது நிபுணத்துவம் IS கணக்காய்வு, தடயவியல் விசாரணைகள் போன்றவற்றில் மேலும் விரிவடைகிறது. அவர் இலங்கை பட்டய கணக்காளர்கள் நிறுவனம்  இன் தகவல் அமைப்பு தணிக்கையில் டிப்ளோமா மற்றும் CBSL இன் திறைசேரி நடவடிக்கைக்கான சான்றிதழைப் பெற்றுள்ளார்.

விமல் லசந்த கருணாராச்சி
ஆபத்து தலைவர்
விமல் லசந்த கருணாராச்சி
ஆபத்து தலைவர்

திரு. விமல் கருணாராச்சி அவர்கள் 18 வருடங்களுக்கும் மேலான முற்போக்கான அனுபவத்தைக் கொண்ட தொழில் வங்கியாளராக உள்ளார். பல வங்கிகளுக்கு வெவ்வேறு திறன்களில் சேவை செய்துள்ள அவர், ஒருங்கிணைந்த இடர் மேலாண்மை மற்றும் நிர்வாகம், சில்லறை வங்கி மற்றும் கார்ப்பரேட்/எஸ்எம்இ கடன் ஆகியவற்றில் குறிப்பிட்ட வெளிப்பாட்டைப் பெற்றுள்ளார். கார்கில்ஸ் வங்கியில் இணைவதற்கு முன்னர், அவர் இலங்கை வணிக வங்கியின் பிரதான இடர் அதிகாரியாக சேவையாற்றினார், வங்கி மற்றும் அதன் துணை நிறுவனங்களின் மொத்த இடர் முகாமைத்துவ செயற்பாட்டை நிர்வகித்தார். அவர் எம்எஸ்சி பட்டம் பெற்றவர். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பிரயோக நிதியியல் மற்றும் இந்தியாவின் பட்டய நிதி ஆய்வாளர்களிடமிருந்து MBA. அவர் IBSL வங்கி மற்றும் நிதித்துறையில் டிப்ளோமா மற்றும் திறைசேரி மற்றும் இடர் முகாமைத்துவத்தில் முதுகலை டிப்ளோமா பெற்றுள்ளார்.

தர்ஷன ஜயசூரிய
டிஜிட்டல் துறையின் தலைவர்
தர்ஷன ஜயசூரிய
டிஜிட்டல் துறையின் தலைவர்

திரு. தர்ஷன ஜயசூரிய ஒரு அனுபவமிக்க தகவல் தொழினுட்ப நிபுணராவார். அவர் உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நிறுவனங்களில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு புகழ்பெற்ற தொழிலாளி ஆவார். முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் லங்கா மற்றும் செல்டெல் லங்கா ஆகியவற்றில் 17 ஆண்டுகளாக முதன்மை தகவல் அதிகாரியாக/தகவல் தொழினுட்பத்தின் தலைவராக பணியாற்றியுள்ளார். தொலைத்தொடர்பு, மென்பொருள் மேம்பாடு மற்றும் வங்கித் தொழில் தொடர்பான தகவல் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத் துறையில் அவருக்கு விரிவான அனுபவம் உள்ளது. அவர் வெளிநாடுகளில் உள்ள உலகளாவிய மென்பொருள் நிறுவனங்களிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார். திரு. ஜெயசூர்யா நோர்வேயின் Trondheim, அறிவியல் மற்றும் தொழினுட்ப பல்கலைக்கழகத்தில் MSc மற்றும் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக மேலாண்மை முதுகலை நிறுவனத்தில் MBA, இந்திய தொழினுட்பக் கழகத்தின் நிர்வாக டிப்ளோமாக்கள் மற்றும் எம்.பி.ஏ. இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் என்பவற்றைப் பெற்றுள்ளார்.

Chinthaka Jayanath
Head of Treasury
Chinthaka Jayanath
Head of Treasury

Mr Chinthaka Jayanath, Head of Treasury started his Banking career with Seylan Bank Plc in 1996. He counts over 27 years of experience in Banking and Finance. During his Banking career he has served in branches, Treasury Back Office and for the last 17 years served in Treasury Front Office holding senior positions prior to joining Cargills Bank Ltd in 2023. He is an Associate Member of Institute of Bankers of Sri Lanka (IBSL), holds an MBA from University of Wales (UK), Diploma in Applied Banking and Finance – IBSL, ACI Dealing Certificate, Diploma in Treasury Portfolio and Risk Management (IBSL), Diploma in Credit Management (IBSL).

உங்களை நாமும் அறிந்துகொள்வோம்!
cargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.
OR
Inquiry Form