Home //
எம்மைப் பற்றிய விபரங்கள்
நம்பிக்கையால் கட்டியெழுப்பட்டுள்ள
அனைவருக்கும் பரீட்சயமான ஒரு நாமம்
எமது குறிக்கோள்

ஒவ்வொரு இலங்கையர் மத்தியிலும் வளர்ச்சிக்கான உணர்வை வளர்த்து, அப்பயணத்தில் அனைவரையும் உள்ளிணைக்கும் வங்கியாக மாறுதல்.

நிலைபேற்றியல் கொண்ட அபிவிருத்தி
வர்த்தக சமூகப் பொறுப்புடமை
உள்ளடக்கம்
எமது இலட்சியம்

திறன்மிக்க மற்றும் புத்தாக்கமான தொழில்நுட்பத்தின் மூலமாக தனித்துவமான மற்றும் தொலைதூர அடைவைக் கொண்ட வலையமைப்பின் உதவியுடன் ஒவ்வொரு வாடிக்கையாளரையும் அவர்களது சௌகரியத்திற்கு ஏற்ற வகையில் அவர்களுடன் நேரடியாக தொடர்புபடுவதே எமது நோக்கம்.

 

மிகுந்த உற்சாக உணர்வைக் கொண்ட புத்தாக்கமான வங்கியாளர்களின் அணியின் மூலமாக தொழிற்துறை தர நடைமுறைகளை மேம்படுத்தி, சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளை வலுவூட்டுவதற்கு அணுசரனையளித்தல்.

 

வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் கொண்ட வலுவான நிதியியல் பெறுபேறுகள் மூலமாக எமது முதலீட்டாளர்களுக்கு நிலைபேற்றியல் கொண்ட பெறுமானத்தைத் தோற்றுவித்தல்.

எமது பாரம்பரியம்

Fou

கிராமப்புற மக்களை மேம்படுத்துவதன் மூலமாக எமது தேசத்தை வலுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் ஸ்தாபிக்கப்பட்டு, எமது நாடு ஒரு விவசாய சமுதாயம் என்ற அடிப்படையில், பண்டைய காலத்து அரசர்கள் முதல் தற்போதைய காலம் வரை கிழக்கின் விளைநிலம் என்ற புகழ்பெற்ற எமது நாட்டின் அதிர்ஷ்டங்கள் எப்போதும் விவசாயத்தை மையமாகக் கொண்டே வளர்ச்சியடைந்து வந்துள்ளன.

 

அவ்வாறாக கார்கில்ஸ் வங்கியின் இலச்சினையானது சுபீட்சம் மற்றும் இலங்கையின் விவசாயம் ஆகியவற்றின் அடையாளமாக உள்ள நெற்கதிர்களை முழுமையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இலச்சினையின் மேல்நோக்கிய அசைவானது சுபீட்சம் மற்றும் வளர்ச்சியைக் காண்பிக்கின்றது. சிவப்பு மற்றும் செம்மஞ்சள் வர்ணங்கள் பிரகாசமான எதிர்காலத்தைக் குறிக்கின்றன. அதை இன்னும் நெருக்கமாக உற்றுநோக்குவோமெனில் மக்கள் ஒருவர் பின் ஒருவராக நிற்கின்றமை ஒருவருக்கொருவர் உதவுவதைக் குறிப்பதுடன், மனித உணர்வின் பண்பின் முக்கியத்துவத்தைக் காண்பித்து, ஒருவரின் வெற்றியானது கார்கில்ஸ் வங்கியையும் உள்ளடக்கிய சமூகம் மற்றும் ஆதரவின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படுவதை விளக்குகின்றது. “மனித உணர்வுக்கு மதிப்பளிக்கும் வங்கிச்சேவை” என்ற மகுட வாக்கியமானது வெற்றியை நோக்கிய மக்களின் முயற்சி மற்றும் முன்னேற்றத்தை குறிக்கும் மனித உணர்வு மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையையும், எமது கோட்பாட்டையும் குறிக்கின்றது.

எமது பங்காளர்கள்

பொழுதுபோக்கு, விருந்தோம்பல் வர்த்தகம், அசைவற்ற ஆதன இருப்பு நிர்மாணம், உற்பத்தி, உணவு பதனிடல் மற்றும் சில்லறை வியாபாரம் ஆகிய துறைகளில் வர்த்தகத் தொழிற்பாடுகளைக் கொண்டுள்ளதுடன், கொழும்பு பங்குச் சந்தையில் நிரற்படுத்தப்பட்டுள்ள பல்துறை வர்த்தக பெரு நிறுவனங்களான கார்கில்ஸ் (சிலோன்) பீஎல்சி மற்றும் சிடீ ஹோல்டிங்ஸ் பீஎல்சி ஆகியன கார்கில்ஸ் வங்கியின் பெரும்பான்மை பங்குதாரர்களாக விளங்குகின்றன. பாரம்பரியங்கள் மற்றும் நெறிமுறைகளின் வலுவான அத்திவாரத்துடன் 1844 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு இலங்கை வர்த்தக நிறுவனமாக கார்கில்ஸ் சிலோன் பீஎல்சி திகழ்ந்து வருகின்றது.

 

தமது வர்த்தகநாமங்கள், நிதியியல் பெறுபேறு, சந்தைப்பங்கு மற்றும் முன்னோக்கு வியாபாரம் ஆகியவற்றில் முறையே தமது துறைகளில் உச்ச ஸ்தானம் வகித்து வருகின்ற நாட்டிலுள்ள முன்னணி நிறுவனங்களில் முதலீடுகளை மேற்கொண்டுள்ள கார்கில்ஸ் வங்கி அவற்றுடன் பங்குடமையை ஏற்படுத்தியுள்ளது. அவற்றுள் முக்கியமான நிறுவனங்கள் வருமாறு: ஊழியர் சேமலாப நிதியம், எம்ஜேஎஃப் பவுண்டேஷன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட், மெல்வா குறூப், ஏஐஏ ஹோல்டிங்ஸ் லங்கா (பிரைவேட்) லிமிட்டெட், ஃசொப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் பீஎல்சி, பீனிக்ஸ் வெஞ்சர்ஸ் லிமிட்டெட், எம்ஏஎஸ் கெப்பிட்டல் (பிரைவேட்) லிமிட்டெட், ஏசியன் அலையன்ஸ் இன்சூரன்ஸ் பீஎல்சி, றோஸ்வூட் (பிரைவேட்) லிமிட்டெட், லாலன் றபர் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்.

உங்களை நாமும் அறிந்துகொள்வோம்!
cargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.
OR
Inquiry Form