இடைவழியில் உள்ள உங்களுடைய பொருட்களுக்கும் அப்பால் உங்களுக்கு சேவையாற்றும் அர்ப்பணிப்புடன் நாம் உள்ளோம்
இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் என இரு தரப்பிற்கும் பலதரப்பட்ட வாணிப கடன்கள் மற்றும் திறைசேரி தீர்வுகளை கார்கில்ஸ் வங்கி வழங்கி வருவதுடன், உயர் மட்ட ஆபத்து முகாமைத்துவம் மற்றும் தொழிற்பாட்டு மேன்மையையும் பேணி வருகின்றது. வங்கி தொழிற்பட ஆரம்பித்த காலம் முதலாக கார்கில்ஸ் வங்கியின் சேவை வழங்கல்களில் வாணிப சேவைகள் முன்னிலை வகித்து வந்துள்ளன.
வங்கியின் வாணிப முகாமைத்துவ அணியானது மிகவும் ஆழமான சர்வதேச அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன், தேவைப்படும் பட்சத்தில் உரிய உதவிகளை வழங்க காத்திருக்கின்றது. கார்கில்ஸ் வங்கியின் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் சர்வதேச வாணிபம் தொடர்பான வர்த்தக அம்சங்களை புரிந்துகொண்டு, இலங்கையிலும், சர்வதேசரீதியான அங்கீகரிக்கப்படுகின்ற வங்கிகளுடனும் பல ஆண்டுகளாக வங்கிச்சேவை மற்றும் வாணிப கடன் வசதிகளை கட்டியெழுப்புவதற்கு உதவி வருகின்றனர். அவர்களுடைய அனுபவம், வாடிக்கையாளர்களுக்கு வர்த்தக வாய்ப்புக்களை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கு பல்வேறுபட்ட தொழில்சார் உதவிகளை வழங்க உதவுகின்றது.
இறக்குமதிகள்
ஏற்றுமதிகள்
கார்கில்ஸ் வங்கியில் அனைத்து வகையான வங்கி உத்தரவாதங்களும் கிடைக்கப்பெறுகின்றன.
எமது வாடிக்கையாளரின் வாணிபம் சார்ந்த அறிவை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதில் நாம் எப்போதும் கவனம் செலுத்தியுள்ளோம். வாடிக்கையாளர்களுடைய வர்த்தகத் தேவைகளை கலந்தாலோசித்து, அவர்களுடைய தேவைகளை விளங்கிக்கொள்வதற்காக நாம் அடிக்கடி அவர்களுடைய இடங்களுக்கு நேரடியாகச் சென்று, அதன் மூலமாக எமது அறிவைப் பகிர்ந்து, வாணிப வியாபாரம் தொடர்பாக அவர்கள் விளங்கிக்கொள்வதற்கு உதவி வருகின்றோம். பயிற்சி மற்றும் செயலமர்வுகள் மூலமாக அவர்களுக்கு நாம் உதவி வருகின்றோம்.
பல்வேறுபட்ட ஒழுங்குமுறைத் தேவைப்பாடுகள் மற்றும் அரசாங்க விதிமுறைகளுக்கு உட்படும் தேவையை இனங்காண வேண்டிய அதேசமயம் வாடிக்கையாளர் சேவை என்பதும் தலையாய முக்கியத்துவம் வாய்ந்தது என நாம் நம்புகின்றோம். கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளை துரித கதியில் நிறைவேற்றுவதை இலக்காகக் கொண்டு தொழிற்படும் நாம், வாடிக்கையாளர்களது வியாபாரத்தை வளர்ச்சி பெறச் செய்ய உதவி, ஆபத்தைக் குறைத்து, அவர்களது போட்டித்திறனை பேணுவதற்கு உதவுகின்றோம். கார்கில்ஸ் வங்கியின் வாணிப சேவைகள் மூலமாக வாடிக்கையாளர்களது தேவைப்பாடுகளை ஈடுசெய்யும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தீர்வுகளை அபிவிருத்தி செய்வதற்கு நாம் முயன்று வருகின்றோம்.