முகப்பு // Personal // Savings Accounts
Cargills Cash சேமிப்புக் கணக்கு
புதிய வழியில் வங்கிச்
சேவையை அனுபவியுங்கள்!
011 7 640 640

நீங்கள் உங்களுடைய பலசரக்குப் பொருட்களைத் தெரிவு செய்வதைப் போல வங்கிச்சேவை தற்போது மிக இலகுவாக்கப்பட்டுள்ளது.

நீங்கள் அறிந்துள்ளீர்களா?
 • இலங்கையில் முதன்முறையாக நீங்கள் எந்தவொரு கார்கில்ஸ் ஃபூட் சிட்டி விற்பனை நிலையத்திலும் பணத்தை வைப்புச் செய்யவோ அல்லது மீளப்பெறவோ முடிவதுடன், உங்களுடைய மொபைல் தொலைபேசியை உபயோகித்து பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியும்.
 • எந்தவொரு மொபைல் தொலைபேசிக்கும் நீங்கள் உடனடியாக பணத்தை அனுப்ப முடிவதுடன், எந்தவொரு கார்கில்ஸ் ஃபூட் சிட்டி விற்பனை நிலையத்தில் பணத்தை மீளப்பெறவும் முடியும்.
 • எந்தவொரு கார்கில்ஸ் ஃபூட் சிட்டி விற்பனை நிலையத்திலும் பணத்திற்கான உத்தரவாதம்
 • நீங்கள் விரும்பியவாறு எந்நேரமும், எங்கிருந்தும் பாதுகாப்பாகவும், உடனடியாகவும் உங்களது வங்கிக் கணக்கை செயல்படுத்த முடியும்.
 • நீங்கள் வீட்டில் இருந்தாலோ அல்லது பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு வெளியில் சென்றாலோ உங்களுக்கு மிகுந்த சௌகரியம்.
வேண்டிய தகைமைகள்
 • 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதைக் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
 • செல்லுபடியாகும் இலங்கை தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டு / சாரதி அனுமதிப் பத்திரத்தைக் கொண்டிருத்தல் வேண்டும்.
 •  
நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுவோம்

Cargills Cash மூலமாக வைப்புக்களை எவ்வாறு மேற்கொள்வது

 

 1. பதிவுசெய்யப்பட்ட உங்களுடைய மொபைல் இலக்கம் அல்லது நீங்கள் விரும்பும் கணக்கு இலக்கத்துடன், தொகையையும் குறிப்பிட்டு Cargills Cash வவுச்சரை பூர்த்தி செய்யுங்கள்.
 2. காசாளர் கொடுக்கல்வாங்கல் நடவடிக்கையை பூர்த்தி செய்தவுடன், அதனை உறுதிப்படுத்தும் வகையில் அச்சிடப்பட்ட ரசீது ஒன்று உங்களுக்கு வழங்கப்படும்.
 3. கணக்கினைப் பேணும் வாடிக்கையாளரது பதிவு செய்யப்பட்ட மொபைல் இலக்கத்திற்கு இது தொடர்பான எஸ்எம்எஸ் ஒன்று உடனடியாக கிடைக்கப்பெறும்.

 

Cargills Cash மூலமாக மீளப்பெறுதல்களை எவ்வாறு மேற்கொள்வது

 

 1. பணத்தை மீளப்பெறுவதற்கு பதிவுசெய்யப்பட்ட உங்களுடைய மொபைல் இலக்கத்தை காசாளரிடம் தெரியப்படுத்தவும்.
 2. Cargills Cash மொபைல் வங்கிச்சேவை App இனுள் நீங்கள் உள்நுழைந்திருப்பதை உறுதி செய்யவும். உடனடி எஸ்எம்எஸ் செய்தி மற்றும் ஒரு-தடவை கடவுச் சொல் ஆகியன பதிவுசெய்யப்பட்ட உங்களது மொபைல் இலக்கத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
 3. ஒரு-தடவை கடவுச்சொல் கிடைக்கப்பெற்றவுடன், “பண மீளப்பெறுகை” கட்டத்தை கிளிக் செய்து, கொடுக்கல்வாங்கல் நடவடிக்கையை அங்கீகரிக்கவும்.
 4. கொடுக்கல்வாங்கல் நடவடிக்கையை காசாளர் பூர்த்தி செய்த பின்னர், பணம் மற்றும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் அச்சிடப்பட்ட ரசீது ஆகியன உங்களிடம் கையளிக்கப்படும்.
 5. கணக்கு வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் இலக்கத்திற்கு உடனடி எஸ்எம்எஸ் செய்தி ஒன்றும் அனுப்பி வைக்கப்படும்.

 

Cargills Cash மூலமாக எவ்வாறு கொள்வனவுகளை மேற்கொள்வது

 1. கொள்வனவுகளுக்கான கொடுப்பனவுகள் Cargills Cash மூலமாக மேற்கொள்ளப்படும் என காசாளருக்கு தெரியப்படுத்தி, பதிவு செய்யப்பட்ட மொபைல் இலக்கத்தை காசாளரிடம் வழங்கவும்.
 2. Cargills Cash மொபைல் வங்கிச்சேவை App இனுள் நீங்கள் உள்நுழைந்திருப்பதை உறுதி செய்யவும். உடனடி எஸ்எம்எஸ் செய்தி மற்றும் ஒரு-தடவை கடவுச் சொல் ஆகியன பதிவுசெய்யப்பட்ட உங்களது மொபைல் இலக்கத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
 3. ஒரு-தடவை கடவுச்சொல் கிடைக்கப்பெற்றவுடன், “கொள்வனவு” கட்டத்தை கிளிக் செய்து, கொடுக்கல்வாங்கல் நடவடிக்கையை அங்கீகரிக்கவும்.
 4. கொடுக்கல்வாங்கல் நடவடிக்கையை காசாளர் பூர்த்தி செய்த பின்னர், அதனை உறுதிப்படுத்தும் வகையில் அச்சிடப்பட்ட ரசீது ஆகியன உங்களிடம் கையளிக்கப்படும்.

கணக்கு வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் இலக்கத்திற்கு உடனடி எஸ்எம்எஸ் செய்தி ஒன்றும் அனுப்பி வைக்கப்படும்.

 

Cargills Cash மூலமாக எவ்வாறு பணத்தை அனுப்பி வைப்பது

 

 1. கார்கில்ஸ் வங்கி மொபைல் வங்கிச்சேவை App இனுள் உள்நுழையவும். நீங்கள் எங்கிருந்தும் பணத்தை அனுப்புவதற்கு பயனாளியின் மொபைல் இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் அனுப்ப வேண்டிய தொகை ஆகியவற்றை நீங்கள் பதிவு செய்தல் வேண்டும்.
 2. உங்களுக்கு (கணக்கு வாடிக்கையாளருக்கு) தனித்துவமான ‘கொடுக்கல்வாங்கல் குறிப்பு இலக்கம்” ஒன்று கிடைக்கப்பெறுவதுடன், நீங்கள் அதனை பயனாளிக்கு தெரியப்படுத்துதல் வேண்டும்.
 3. பயனாளி எந்தவொரு கார்கில்ஸ் ஃபூட் சிட்டி விற்பனை நிலையத்திற்கும் சென்று கொடுக்கல்வாங்கல் குறிப்பு இலக்கம், மொபைல் இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொகை ஆகியவற்றைக் குறிப்பிட்டு Cargills Cash வவுச்சரை பூர்த்தி செய்து காசாளரிடம் கையளிக்கவும்.
 4. பணம் மற்றும் உறுதிப்படுத்தும் வகையில் அச்சிடப்பட்ட ரசீது ஆகியவற்றைப் பயனாளி பெற்றுக்கொள்வார்.
நாமும் ஆரம்பிப்போம்

எவ்வாறு பதிவு செய்வதுஇணையத்தின் மூலமாக

 • தற்போது கார்கில்ஸ் வங்கி கணக்கு வாடிக்கையாளர்கள் அல்லது  மூலமாக கார்கில்ஸ் வங்கி மொபைல் App இனை பதிவிறக்கம் செய்து “Cargills Cash” இற்காக மிக இலகுவான பதிவு நடைமுறையை பூர்த்தி செய்ய முடியும்.
 • கார்கில்ஸ் வங்கியில் நீங்கள் ஏற்கனவே இணைய/மொபைல் வங்கிச்சேவைக்கான பதிவினை மேற்கொண்டிருந்ததால், அதே பயனர் அடையாளப் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உபயோகித்து கார்கில்ஸ் வங்கி மொபைல் App இனும் இலகுவாக உள்நுழைந்து கொள்ள முடியும். அந்த அளவிற்கு சுலபமானது.
 • நீங்கள் ஏற்கனவே பதிவினை மேற்கொண்டிரா விட்டால், உங்களுடைய ATM அட்டை இலக்கம் மற்றும் ATM PIN இலக்கம் ஆகியவற்றை மொபைல் வங்கிச்சேவை App இல் பதிவு செய்வதன் மூலமாக அதனை மேற்கொள்ள முடியும்.
 • விரைவான பதிவு நடைமுறையைப் பின்பற்றவும்.
 • உங்களுடைய மொபைலில் Cargills Cash இனை அனுபவித்து மகிழுங்கள்

 

எவ்வாறு பதிவு செய்வது நேரடியாக

 

 • இணையத்தின் மூலமான பதிவு நடைமுறையை முன்னெடுக்க விரும்பவில்லையா? அவ்வாறெனில் எந்தவொரு கார்கில்ஸ் வங்கிக் கிளைக்கும் நேரில் வருகை தாருங்கள், அல்லது எந்தவொரு கார்கில்ஸ் ஃபூட் சிட்டியிலுமுள்ள பிரத்தியேகமான வங்கிப் பிரதிநிதிகளில் ஒருவரிடம் நேரடியாக உரையாடுங்கள். எமது பணியாளர்கள் உங்களுக்கு உதவுவதற்கு மகிழ்வுடன் காத்திருக்கின்றனர்.
 • ‘Cargills Cash’ இற்காக உங்களை பதிவு செய்து கொண்ட பின்னர் அதில் உள்நுழைந்து கொள்வதற்காக மின்னஞ்சல் மூலமாக பயனர் அடையாளப் பெயரையும், உங்களுடைய மொபைல் மூலமாக ஒரு-தடவை கடவுச்சொல்லையும் நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்.
 • உங்களுடைய மொபைலில் Cargills Cash இனை அனுபவித்து மகிழுங்கள்.

 

எமது பங்காளர்கள்

பொதுவாக எழுகின்ற வினாக்கள்
Cargills Food City மையங்கள்

Cargills Food City இருப்பிடங்களைக் காண இங்கே கிளிக் செய்யவும்

அடுத்தது என்ன?

இன்றே விண்ணப்பியுங்கள், எமக்கு அழைப்பினை ஏற்படுத்துங்கள் அல்லது எம்முடன் உரையாடங்கள். நீங்கள் எப்போதும் பெற்றிராத வங்கிச்சேவை அனுபவத்தை உங்களுக்கு வழங்க நாம் காத்திருக்கின்றோம்.

கார்கில்ஸ் வங்கி உங்களை வரவேற்கின்றது!
கார்கில்ஸ் வங்கி வழங்கும் வியக்கவைக்கும் வங்கிச்சேவைகளை அனுபவியுங்கள்
உங்களை நாமும் அறிந்துகொள்வோம்!
cargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.
OR
Inquiry Form