முகப்பு // Personal // Loans
சொத்து மீதான கடன்
உங்களுடைய சொத்தின்
பெறுமானத்தை வெளிப்படுத்துவோம்
011 7 640 640

உங்களுடைய சொத்து பெறுமதி மிக்கது. அதன் மூலம் பயன் பெற்றுக்கொள்ள நாம் உங்களுக்கு உதவுவோம்.

எந்த தேவைகளுக்காக
 • வீட்டை புனரமைத்தல்/தளபாடங்களை ஏற்பாடு செய்தல்
 • அசையா/அசையும் சொத்துக்களை கொள்வனவு செய்தல்
 • வீடு/கட்டடம்
 • வெற்றுக் காணி
 • வாகனம் (பதிவு செய்யப்பட்டது / பதிவு செய்யப்படாதது)
 • இயந்திரம் மற்றும் / அல்லது உபகரணம்
 • கல்வி
 • மருத்துவம்/வைத்தியசாலை அனுமதி
சம்பளத்தைப் பெறுகின்றவர்களுக்கு
வேண்டிய தகைமைகள்

18-55 வயதிற்கு உட்பட்டவராகவும், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/ஸ்தாபனம் ஒன்றில் ‘நிரந்தர’ ஊழியராகப் பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள்
 • முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட சொத்து மீதான கடன் விண்ணப்பம்.
 • உங்களுடைய தேசிய அடையாள அட்டையின் பிரதி.
 • வதிவிட முகவரியை உறுதிப்படுத்துவதற்கான அண்மித்த கட்டணப் பட்டியல் பிரதி
 • கடைசி 3 மாதங்களுக்கான சம்பளப் பட்டியல்.
 • உங்களுடைய பதவி நிலை மற்றும் சம்பள விபரங்களை உறுதிப்படுத்தும் வகையில் தொழில்தருநரின் கடிதம்.
 • விற்பனை ஒப்பந்தம் (காணி/வீடு கொள்வனவு எனில், அல்லது விற்பனை விலையைக் குறிப்பிட்டு, விற்பனை செய்பவரிடமிருந்து கடிதம்).
 • வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற உத்தேச தொகைப் பட்டியல்
 • உள்நாட்டு அதிகார சபையால் அங்கீகரிக்கப்பட்ட நிர்மாணத் திட்டம்.
 • உறுதி மற்றும் உள்நாட்டு அதிகார சபையால் அங்கீகரிக்கப்பட்ட அளவைத் திட்டத்தின் பிரதி.
சுயதொழில் புரிபவர்களுக்கு
வேண்டிய தகைமைகள்

18-55 வயதிற்கு உட்பட்டவராகவும், உரிமையாளர், பங்காளர் அல்லது பணிப்பாளராக உங்களது சொந்த வியாபாரத்தை முன்னெடுப்பவராகவும், குறைந்தபட்ச மாதாந்த இலாபமாக ரூபா 50,000/= இனை சம்பாதிப்பவராகவும், 3 வருடங்களுக்கும் மேலாக வியாபாரத்தை முன்னெடுத்துச் செல்பவராகவும் இருத்தல் வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள்
 • முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட சொத்து மீதான கடன் விண்ணப்பம்.
 • உங்களுடைய தேசிய அடையாள அட்டையின் பிரதி.
 • வதிவிட முகவரியை உறுதிப்படுத்துவதற்கான அண்மித்த கட்டணப் பட்டியல் பிரதி.
 • வியாபாரப் பதிவுச் சான்றிதழ்.
 • கடைசி 6 மாதங்களுக்கான வங்கிக் கூற்றின் பிரதிகள் – வியாபாரத்தினதும், தனிப்பட்டதும்.
 • கடைசி 2 ஆண்டுகளுக்கான வரிக் கொடுப்பனவு ரசீது பிரதிகள்.
 • கடைசி 2 ஆண்டுகளுக்கான கணக்காய்வு செய்யப்பட்ட கணக்கறிக்கைகள்.
 • வரையறுக்கப்பட்ட பொறுப்புடமை நிறுவனங்களாக இருப்பின் படிவம் 48, நிறுவனத்தின் பதிவுக் குறிப்பு மற்றும் நிறுவனத்தின் நோக்குக் குறிப்பு.
 • விற்பனை ஒப்பந்தம் (காணி/வீடு கொள்வனவு எனில், அல்லது விற்பனை விலையைக் குறிப்பிட்டு, விற்பனை செய்பவரிடமிருந்து கடிதம்).
 • வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற உத்தேச தொகைப் பட்டியல்
 • உள்நாட்டு அதிகார சபையால் அங்கீகரிக்கப்பட்ட நிர்மாணத் திட்டம்.
 • உறுதி மற்றும் உள்நாட்டு அதிகார சபையால் அங்கீகரிக்கப்பட்ட அளவைத் திட்டத்தின் பிரதி.
இனியும் ஏன் தாமதம்?

ஆகவே தற்போதே இதற்கு விண்ணப்பியுங்கள். எம்மை அழையுங்கள் அல்லது எம்முடன் உரையாடுங்கள். குழப்பம், தயக்கம் மற்றும் சிரமம் இன்றி கடனைப் பெற்றுக்கொள்ளும் இலகுவான வழியை நாம் உங்களுக்கு காண்பிப்போம்.

கார்கில்ஸ் வங்கி உங்களை வரவேற்கின்றது!
கார்கில்ஸ் வங்கி வழங்கும் வியக்கவைக்கும் வங்கிச்சேவைகளை அனுபவியுங்கள்
உங்களை நாமும் அறிந்துகொள்வோம்!
cargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.
OR
Inquiry Form