கார்கில்ஸ் வங்கியில் அல்லது ஏனைய வங்கிகளில் கணக்கினைப் பேணுகின்றவர்களின் கணக்குகளுக்கு பணத்தினை அனுப்பி வைக்கவோ அல்லது எந்தவொரு கார்கில்ஸ் வங்கிக் கிளை மூலமாகவும் தமக்கு அனுப்பப்பட்ட பணத்தைப் பெற்றுக்கொள்ளவோ இச்சேவை இடமளிக்கின்றது. பயனாளிகள் தமக்கு அனுப்பி வைக்கப்பட்ட பணத்தை நாடளாவியரீதியிலுள்ள 500 இற்கும் மேற்பட்ட கார்கில்ஸ் ஃபூட் சிட்டி விற்பனை நிலையங்கள் மூலமாகவும் பெற்றுக்கொள்ள முடியும். இந்த கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை வருடத்தில் 365 நாட்களும் மு.ப. 8.00 மணி முதல் பி.ப 10.00 மணி வரை மேற்கொள்ள முடிவதுடன், தமக்கு அனுப்பப்பட்ட பணத்தை பெற்றுக்கொண்டவர்கள் கார்கில்ஸ் ஃபூட் சிட்டி விற்பனை நிலையங்களில் கொள்வனவுகளின் போது 5% தள்ளுபடி சலுகையையும் பெற்று அனுபவிக்க முடியும்.
கார்கில்ஸ் வங்கி பணம் அனுப்பல் சேவைகளை உபயோகிப்பதற்கு 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதைக் கொண்டிருத்தல் வேண்டும்.
குறைந்தபட்ச பணம் அனுப்பல் தொகை கட்டுப்பாடு எதுவும் கிடையாது.
எந்தவொரு கார்கில்ஸ் ஃபூட் சிட்டி விற்பனை நிலையத்திலும் ஒவ்வொரு தடவை பணத்தை மீளப்பெறும் போது அதிகபட்சமாக ரூபா 10,000 கொள்வனவு தொகைக்கு 5% தள்ளுபடி கிடைக்கப்பெறுகின்றது. (பணம் அனுப்பும் கொடுக்கல்வாங்கல் இடம்பெற்ற நாள் முதல் 7 தினங்களுக்கு செல்லுபடியாகும்)
1.கார்கில்ஸ் வங்கி பணம் அனுப்பல் சேவை எனப்படுவதன் விபரம் என்ன?
கார்கில்ஸ் வங்கியில் அல்லது ஏனைய வங்கிகளில் கணக்கினைப் பேணுகின்றவர்களின் கணக்குகளுக்கு பணத்தினை அனுப்பி வைக்கவோ அல்லது எந்தவொரு கார்கில்ஸ் வங்கிக் கிளை மூலமாகவும் தமக்கு அனுப்பப்பட்ட பணத்தைப் பெற்றுக்கொள்ளவோ இச்சேவை இடமளிக்கின்றது. பயனாளிகள் தமக்கு அனுப்பி வைக்கப்பட்ட பணத்தை நாடளாவியரீதியிலுள்ள 500 இற்கும் மேற்பட்ட கார்கில்ஸ் ஃபூட் சிட்டி விற்பனை நிலையங்கள் மூலமாகவும் பெற்றுக்கொள்ள முடியும். இந்த கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை வருடத்தில் 365 நாட்களும் மு.ப. 8.00 மணி முதல் பி.ப 10.00 மணி வரை மேற்கொள்ள முடிவதுடன், தமக்கு அனுப்பப்பட்ட பணத்தை பெற்றுக்கொண்டவர்கள் கார்கில்ஸ் ஃபூட் சிட்டி விற்பனை நிலையங்களில் கொள்வனவுகளின் போது 5% தள்ளுபடி சலுகையையும் பெற்று அனுபவிக்க முடியும்.
2.கார்கில்ஸ் வங்கி பணம் அனுப்பல் சேவைகளுக்கு கொடுக்கல் வாங்கல் உச்ச எல்லைகள் மற்றும் கட்டணங்கள் உள்ளதா?
கார்கில்ஸ் வங்கியின் மூலமாக நீங்கள் அதிகபட்ச தொகையான ரூபா 5.0 மில்லியன் வரை பணத்தைப் பெற்றுக்கொள்ள முடிவதுடன், பயனாளிகளிடமிருந்து நாம் அதற்கு எவ்விதமான தரகுக் கட்டணத்தையும் அறவிடுவதில்லை.
3.கார்கில்ஸ் வங்கி பணம் அனுப்பல் சேவையின் மூலமாக கிடைக்கும் நன்மைகள் எவை?
4.வங்கிக் கணக்கு ஒன்றைக் கொண்டிரா விட்டாலும் வங்கி ஒன்றுக்கு பணத்தை என்னால் அனுப்பி வைக்க முடியுமா?
ஆம். நீங்கள் அனுப்பி வைக்கும் பணத்தை பயனாளி பணமாகவே பெற்றுக்கொள்ள முடியும்.
5.இலங்கைக்கு பணத்தை அனுப்பி வைப்பதற்கான காரணத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமா?
வெளிநாட்டிலுள்ள அனைத்து நிதி சார்ந்த நிறுவனங்களும் தமக்கான KYC (உங்களது வாடிக்கையாளரை அறிந்து கொள்ளல்) / AML (சட்டவிரோத பணப்பரிமாற்றத்திற்கு எதிரான சட்டம்) தேவைப்பாடுகளைக் கொண்டுள்ளதுடன், அனைத்து கொடுப்பனவுகளும் அனுமதிக்கப்பட்ட வழிமுறைகளுக்கும், நோக்கங்களுக்கும் உட்பட்டதாக அமைதல் வேண்டும்.
6.பணம் அனுப்பும் சேவை வர்த்தகம் ஒன்றில் நான் ஈடுபட்டுள்ளேன். கார்கில்ஸ் வங்கியுடன் நான் வர்த்தகத்தொடர்புகளை ஏற்படுத்த முடியுமா?
தயவு செய்து கீழே கோரப்பட்டுள்ள விபரங்களை info@cargillsbank.com அல்லது kithmini.k@cargillsbank.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வையுங்கள். நாம் முடிந்த வரை விரைவாக உங்களுடன் தொடர்பினை ஏற்படுத்துவோம்.
7.நான் ஒரு வெளிநாட்டுப் பிரஜை, என்னால் இலங்கைக்கு பணத்தை அனுப்ப முடியுமா?
ஆம்.
8.பணம் அனுப்புவதற்கு வரிகள் ஏதேனும் அறவிடப்படுகின்றதா?
இல்லை.
9.கார்கில்ஸ் வங்கி பணம் அனுப்பல் சேவை மூலமாக அனுப்பப்படும் பணத்தை இலங்கையில் எவ்வளவு நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியும்?
இணையத்தளத்தின் அடிப்படையில் சேவை இடம்பெறுவதால் உடனடியாக பெற்றுக்கொள்ள முடியும்.
10.பணம் அனுப்பப்படும் போது நாணய மாற்று வீதம் எவ்வாறு பிரயோகிக்கப்படும்?
பணத்தை அனுப்பும் போது உள்ள நாணய மாற்று வீதங்களே பிரயோகிக்கப்படும். பணத்தை அனுப்புபவர் அதனை அனுப்பும் சமயத்தில் அனுப்பி வைக்கும் வங்கி அல்லது நாணய மாற்று நிறுவனத்துடன் நாணய மாற்று வீதங்களை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது.