Home // About Us
பணிப்பாளர் சபை உறுப்பினர்கள்
Inspired guidance.
Dedicated leadership.
ரஞ்சித் பேஜ்
பணிப்பாளர் சபைத் தலைவர் (பணிப்பாளர் சபை உறுப்பினர்கள்))
ரஞ்சித் பேஜ்
பணிப்பாளர் சபைத் தலைவர் (பணிப்பாளர் சபை உறுப்பினர்கள்))

திரு. ரஞ்சித் பேஜ் அவர்கள் சீடீ ஹோல்டிங்ஸ் பீஎல்சி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், குழும துணை நிறுவனமான கார்கில்ஸ் (சிலோன்) பீஎல்சி இன் பணிப்பாளர் சபை பிரதித் தலைவரும் ஆவார். உணவு சில்லறை வியாபாரம், உணவு சேவைகள் மற்றும் உற்பத்தி போன்ற துறைகளில் 30 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட முகாமைத்துவ அனுபவத்தை திரு. பேஜ் அவர்கள் கொண்டுள்ளதுடன், சுப்பர் மார்க்கட் என்ற எண்ணக்கருவை இலங்கை பொதுமக்கள் மத்தியில் அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும். நிலைபேற்றியல் கொண்ட வர்த்தகத்தில் அவர் ஒரு தீவிர செயற்பாட்டாளராக விளங்குவதுடன், தேசிய மற்றும் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி ஸ்தாபனம் போன்ற சர்வதேச அரங்குகளிலும் பல்வேறு நிகழ்வுகளுக்கு தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதற்காக சிறப்பு அதிதியாக அழைக்கப்பட்டுள்ளார்.

 

Senarath Bandara
Managing Director/CEO
Senarath Bandara
Managing Director/CEO

r. Senarath Bandara is a banking professional with a distinguished career spanning over 30 years at Bank of Ceylon and retired as its General Manager/Chief Executive Officer.

He has served on several Boards of subsidiaries and associate companies of BOC, in addition to Lanka Clear (Pvt) Ltd, Credit Information Bureau, and Lanka Financial Services Bureau Ltd.

He has also served as a member of the governing body of the Institute of Bankers of Sri Lanka; a member of the Council of Wayamba University of Sri Lanka, served as Chairman of the Asia-Pacific Rural Agriculture Credit Association (APRACA) – a regional association operating based out of Bangkok; Thailand; served as Vice Chairman of the Sri Lanka Bankers Association; and
was a past President of the Association of Professional Bankers of Sri Lanka.

Mr. Bandara has a BSc from the University of Kelaniya and a MBA from the Postgraduate Institute of Management, University of Sri Jayewardenepura, Postgraduate Executive Diploma in Bank Management-Institute of Bankers of Sri Lanka and an Advanced Management Program from Harvard Business School, USA. Mr. Bandara is a Fellow of the Institute of Bankers of Sri Lanka.

பீ எஸ் மாதவன்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட பணிப்பாளர்
பீ எஸ் மாதவன்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட பணிப்பாளர்

பட்டய முகாமைத்துவக் கணக்காளர்கள் கற்கை நிலையத்தின் (ஐக்கிய இராச்சியம்) மற்றும் இலங்கை பட்டய கணக்காளர்கள் கற்கை நிலையம் ஆகியவற்றின் ஒரு இணை உறுப்பினரான திரு. பிரபு மாதவன் அவர்கள், வர்த்தகத்துறையில் கலைமாணி பட்டத்தையும் பெற்றுள்ளார். நிதி, கணக்காய்வு, கணக்கியல் மற்றும் வரிவிதிப்பு துறைகளில் அவர் 19 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

அவர் கார்கில்ஸ் சிலோன் பீஎல்சி நிறுவனத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.

மேரியன் பேஜ்
சுயாதீனமற்ற நிறைவேற்று அதிகாரம் அற்ற பணிப்பாளர்
மேரியன் பேஜ்
சுயாதீனமற்ற நிறைவேற்று அதிகாரம் அற்ற பணிப்பாளர்

திருமதி மேரியன் பேஜ் அவர்கள் 1990 களில் Smith New Court, Lehman Bros ஊடாக Credit Lyonnais மற்றும் தற்போது Asiabox Consultancy Services இல் சேவையாற்றிய காலத்தில் கொழும்பு பங்குச்சந்தை தாராளமயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் மத்தியில் முதலீடு செய்வதற்கான சிறந்த ஒரு நாடாக இலங்கையை ஊக்குவிப்பதில் முன்னின்று செயற்பட்டு வந்துள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சிறப்பான தொழில் அனுபவம் மற்றும் ஆசிய நிதியியல் சந்தைகளில் பெற்றுள்ள நீண்ட கால அனுபவம் மற்றும் ஈடுபாடு காரணமாக உலகளாவில் முன்னணி முதலீட்டுத் துறைசார் முகாமைத்துவ நிறுவனங்களுடன் வலுவான உறவுமுறைகளை அவர் கட்டியெழுப்பியுள்ளார்.

 

திருமதி பேஜ் அவர்கள் ஐக்கிய இராச்சியத்தின் பட்டய முகாமைத்துவக் கணக்காளர்கள் கற்கைநிலையத்தின் இணை அங்கத்தவராவார்.

யுதிஷ்திரன் கனகசபை
சுயாதீனமற்ற, நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்
யுதிஷ்திரன் கனகசபை
சுயாதீனமற்ற, நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்

திரு. யுதி கனகசபை அவர்கள் இலங்கை பட்டய கணக்காளர்கள் கற்கைநிலையத்தின் சக அங்கத்தவராவார். இலங்கை, மாலைதீவு மற்றும் சிங்கப்பூரில் PricewaterhouseCoopers இல் 35 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ள அவர், 2017 மார்ச் 31 இல் PricewaterhouseCoopers இன் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான சிரேஷ்ட பங்காளர் என்ற பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். இலங்கை பட்டய கணக்காளர்கள் கற்கைநிலையத்தின் பல்வேறு சபைகளில் அவர் சேவையாற்றியுள்ளார்.

சுயாதீன, நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக அவர் தற்போது Ceylon Tobacco Company PLC இல் வாரிய கணக்காய்வுச் சபை மற்றும் தொடர்புபட்ட தரப்பினரின் கொடுக்கல்வாங்கல் சம்பந்தப்பட்ட சபையின் பணிப்பாளர் சபைத் தலைவராகவும், Millenium IT ESP (Pvt) Limited இன் வாரிய கணக்காய்வுச் சபையின் பணிப்பாளர் சபைத் தலைவராகவும் சேவையாற்றி வருகின்றார். அத்துடன் Cargills Ceylon PLC, Cargills Food Company Limited, Hunter & Company PLC, Lanka Canneries Limited மற்றும் EAP Holdings Limited ஆகிய நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராகவும், வாரிய கணக்காய்வுச் சபைகளின் அங்கத்தவராகவும் சேவையாற்றி வருகின்றார்.

2016 ஆகஸ்ட் முதல் 2018 டிசம்பர் 31 வரை யூனியன் வங்கியின் கணக்காய்வுச் சபையின் பணிப்பாளர் சபைத் தலைவராகவும் யுதி அவர்கள் சேவையாற்றியுள்ளார். 2018 பெப்ரவரி முதல் 2019 நவம்பர் வரை இலங்கை காப்புறுதி ஒழுக்காற்று ஆணைக்குழுவின் ஆணையாளராகவும் அவர் சேவையாற்றியுள்ளார்.

மங்கள போயாகொட
நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்
மங்கள போயாகொட
நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்

நிதியியல் சேவைகள் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ள திரு. மங்கள போயாகொட அவர்கள் ஒரு சிரேஷ்ட வங்கியாளராவார். இலங்கை வங்கியில் தனது வங்கித்தொழிலை ஆரம்பித்த அவர், இலண்டன் மாநகரில் உள்ள இலங்கை வங்கிக் கிளையில் நான்கு வருட காலமாக தலைமை முகவராகவும் கடமையாற்றியுள்ளார். 1992 ஆம் ஆண்டில் ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் முதலீட்டு வங்கிச் சேவைப் பிரிவை ஆரம்பிக்கும் முகமாக வோல்டொக் மெக்கன்சி நிறுவனத்தில் நிலையான வருமான பிணையங்களுக்கான பொது முகாமையாளராக அவர் இணைந்து கொண்டார். அதன் பின்னர் யூனியன் வங்கியை ஸ்தாபிப்பதில் பங்களிப்பாற்றிய அவர், திறைசேரியின் தலைமை அதிகாரியாகவும் அங்கு கடமையாற்றியுள்ளார். 1997 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை டிஎஃப்சிசி வங்கியில் திறைசேரிப் பிரிவின் சிரேஷ்ட உதவித் தலைமை அதிகாரியாக கடமையாற்றியுள்ளார். 1999 ஆண்டு ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கியில் அதன் சர்வதேச சந்தைகளுக்கான தலைமை அதிகாரியாக இணைந்து கொண்ட அவர், அதன் பின்னர் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவி உயர்த்தப்பட்டார். 2003 ஆம் ஆண்டில் நஷனல் வெல்த் கோர்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராகவும்/பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.

 

திரு. போயாகொட அவர்கள் தற்சமயம் வெல்த் லங்கா மனேஜ்மென்ட் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவராகவும், சாஃபே ஹோல்டிங்ஸ் லிமிட்டெட், வெல்த் டிரஸ்ட் செக்கியுரிட்டீஸ் லிமிட்டெட், நியூ வேர்ல்ட் செக்குயிரிட்டீஸ் (பிரைவேட்) லிமிட்டெட், அசெட் டிரஸ்ட் மனேஜ்மென்ட் (பிரைவேட்) லிமிட்டெட், சிலோன் ஹோட்டல்ஸ் கோர்ப்பரேஷன் மற்றும் சியரா கொன்ஸ்ரக்ஷன் லிமிட்டெட் ஆகிய நிறுவனங்களின் பணிப்பாளராகவும் தற்போது கடமையாற்றி வருகின்றார்.

 

ஐக்கிய இராச்சியத்தின் ஐரிஷ் சர்வதேச பல்கலைக்கழகத்தில் (ஐரோப்பிய ஒன்றியம்) வர்த்தக நிர்வாகத் துறையில் அவர் முதுகலைப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

 

றிச்சர்ட் ஈபெல்
நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்
றிச்சர்ட் ஈபெல்
நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்

றிச்சர்ட் ஈபெல் அவர்கள் இலங்கை பட்டயக் கணக்காளர்கள் கற்கை நிலையம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் பட்டய முகாமைத்துவக் கணக்காளர்கள் கற்கை நிலையம் ஆகியவற்றின் சக உறுப்பினராவார். அத்துடன் ஐக்கிய இராச்சியம் பட்டய சந்தைப்படுத்தல் கற்கை நிலையத்தில் சந்தைப்படுத்தல் துறையில் டிப்ளோமா பட்டத்தையும் அவர் பெற்றுள்ளார்.

 

திரு. ஈபெல் அவர்கள் 1977 ஆம் ஆண்டில் ஒரு பட்டயக் கணக்காளராக தகைமை பெற்ற பின்னர் நிதி மற்றும் தொழிற்பாடுகள் துறையில் பல்வேறுபட்ட பதவி நிலைகளில் 38 ஆண்டு கால அனுபவத்தை பெற்றுள்ளார். அதில் 2009 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நிதிப் பணிப்பாளர் பதவி நிலையில் தனது பதவியை விலகிய 32 ஆண்டு கால ஹேலீஸ் பீஎல்சி நிறுவனத்தின் சேவை மற்றும் 2010 ஆம் ஆண்டின் நடுப்பகுதி முதல் 2012 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை லோட்ஸ்டார் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தில் பிரதம நிதியியல் அதிகாரியாக கடமையாற்றிய 2 வருட சேவை ஆகியன உள்ளடங்கியுள்ளன.

 

ஐக்கிய இராச்சியம் பட்டய முகாமைத்துவக் கணக்காளர்கள் கற்கை நிலையத்தின் இலங்கைக் கிளையின் முன்னாள் தலைமை அதிகாரியான அவர், இலங்கை பட்டயக் கணக்காளர்கள் கற்கை நிலையத்தில் தர நிர்ணய சபையின் ஒரு அங்கத்தவராகவும் கடமையாற்றி வருகின்றார். 2014 ஜுன் மாதத்தில் கணக்காய்வுச் சபையை ஸ்தாபிப்பதில் பங்கேற்றுள்ள அவர், அதன் மூலமாக கடந்தகாலங்களில் கணிசமான செயற்பாடுகளை ஆற்றியுள்ள பல முன்னெடுப்புக்களில் தீவிரமாக பங்குபற்றியுள்ளார்.

 

திரு. ஈபெல் அவர்கள் ஃபின்லேஸ் கொழும்பு பீஎல்சி மற்றும் சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் பீஎல்சி ஆகிய நிறுவனங்களில் அதிகாரமற்ற சுயாதீன பணிப்பாளராக அவற்றின் பணிப்பாளர் சபையில் அங்கம் வகித்து வருவதுடன், அந்த இரு நிறுவனங்களினதும் கணக்காய்வுச் சபைகளுக்கு தலைமை வகித்து வருகின்றார். அதற்கு முன்பதாக தங்கொட்டுவ போர்சலின் பீஎல்சி மற்றும் லாஃப்ஸ் கெப்பிட்டல் லிமிட்டெட் ஆகிய நிறுவனங்களின் பணிப்பாளர் சபையில் அதே பதவி நிலைகளை அவர் வகித்துள்ளார்.

முஹமட் உஸ்மான் ஃபைஸால் சாலி
நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்
முஹமட் உஸ்மான் ஃபைஸால் சாலி
நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்

திரு. ஃபைஸால் சாலி அவர்கள் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் வங்கிச்சேவை/நிதித்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட மற்றும் வேறுபட்ட அனுபவங்களைக் கொண்டுள்ளதுடன், இலங்கையில் தேசிய அபிவிருத்தி வங்கியின் வீடமைப்பு வங்கி மற்றும் அமானா வங்கி ஆகிய 2 புதிய வங்கிகளை ஸ்தாபித்து, அவற்றின் வர்த்தகத் தொழிற்பாடுகளை முன்னெடுப்பதில் விசேட திறமைகளைக் கொண்டுள்ளார். 13 ஆண்டுகளாக சிரேஷ்ட முகாமைத்துவ பதவிகளையும், 13 ஆண்டுகளாக முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவிகளையும் அவர் வகித்துள்ளார். ஏஎன்இஸட் கிறின்லேஸ் வங்கியில் வர்த்தக மற்றும் வணிக வங்கிச்சேவைப் பிரிவின் தலைமை அதிகாரியாகவும், தேசிய அபிவிருத்தி வங்கியில் பிரதம தொழிற்பாட்டு அதிகாரியாகவும், தேசிய அபிவிருத்தி வங்கியின் வீடமைப்பு வங்கியில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பணிப்பாளராகவும்/பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும், அமானா இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிட்டெட்டில் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் மற்றும் அமானா வங்கி பீஎல்சி இல் முகாமைத்துவப் பணிப்பாளராகவும்/பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார்.

ருவினி பெர்னாண்டோ
நிறைவேற்றுஅதிகாரமற்றசுயாதீனபணிப்பாளர்
ருவினி பெர்னாண்டோ
நிறைவேற்றுஅதிகாரமற்றசுயாதீனபணிப்பாளர்

ருவினி பெர்னாண்டோ அவர்கள் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ மேற்பட்டப்படிப்பு கற்கைநிலையத்தில் சிறப்பு சித்தியுடன் முதுமாணி (MBA) பட்டம் பெற்றுள்ளதுடன், ஐக்கிய இராச்சியத்தின் முகாமைத்துவ பட்டயக் கணக்காளர்கள் கற்கை நிலையத்தில் (CIMA) சக அங்கத்தவராகவும் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் அங்கீகரிக்கப்பட்ட பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தின் (ACCA) சக அங்கத்தவராகவும் உள்ளார். இலங்கை வர்த்தக சம்மேளனத்தில் நிதி மற்றும் மூலதனத்திற்கான தேசிய நிகழ்ச்சிநிரல் சபையில் அவர் தற்போது ஒரு அங்கத்தவராக உள்ளதுடன், 2001 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதித்துவத்துடன் தொழிற்துறை கொள்கை வகுப்பு சபையாக இலங்கையில் சுற்றுலாத்துறையை மீள்ஊக்குவிக்கும் செயற்திட்ட சபையில் அங்கத்தவராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.

Carson Cumberbatch Group இன் முதலீட்டு முகாமைத்துவ நிறுவனமான Guardian Fund Management Limited இன் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பணிப்பாளராகவும் ருவினி அவர்கள் கடமையாற்றியுள்ளார். Ceylon Guardian Investment Trust PLC மற்றும் அதன் பல துணை நிறுவனங்களின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் அவர் கடமையாற்றியுள்ளதுடன், 12 ஆண்டுகளாக Carsons Group இன் முதலீட்டுத் துறைக்கு தலைமை வகித்துள்ளார். அனுமதி பெற்ற மூன்று நம்பிக்கை அலகு நிதியங்களை நிர்வகிக்கின்ற ஒரு நம்பிக்கை அலகு முகாமைத்துவ நிறுவனமான Guardian Acuity Asset Management Limited இன் இணை பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.

ருவினி பெர்னாண்டோ அவர்கள் தற்போது கொழும்பு PricewaterhouseCoopers (PwC) நிறுவனத்தில் PPP ஆலோசனை மற்றும் ஒப்பந்த மூலோபாயங்கள் துறை பணிப்பாளராக கடமையாற்றுவதுடன், அந்நிறுவனத்தின் நிதி திரட்டல் ஆணைகள் அடங்கலாக ஒப்பந்த மூலோபாயங்கள், மூலதன செயற்திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு நடைமுறை துறைக்கு தலைமை வகித்து வருகின்றார்.

அமெந்ரா டி சில்வா
கம்பனி செயலாளர்
அமெந்ரா டி சில்வா
கம்பனி செயலாளர்

2018 மே 1 ஆம் திகதியன்று கம்பனி செயலாளராக நியமிக்கப்பட்ட அவர், வங்கித் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளார். சட்டத்தரணியான அவர், International Compliance Association இடமிருந்து இணக்கப்பாட்டு (Compliance) துறையில் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுள்ளார். இலங்கை தேசிய அபிவிருத்தி வங்கியில் சட்ட அதிகாரியாகவும், ஹற்றன் நஷனல் வங்கியில் சட்டத் துறை (நிறுவன) முகாமையாளராகவும் அவர் கடமையாற்றியுள்ளார். வங்கியில் இணைந்து கொள்வதற்கு முன்பாக தேசிய அபிவிருத்தி வங்கியில் இணக்க தொழிற்பாடுகளுக்கான தலைமை அதிகாரியாக அவர் கடமையாற்றியுள்ளார்.

உங்களை நாமும் அறிந்துகொள்வோம்!
cargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.
OR
Inquiry Form