முகப்பு // Personal // Loans
வீட்டுக் கடன்கள்
உங்களை
வரவேற்கின்றோம்!
011 7 640 640

உங்களுக்கென சொந்தமாக ஒரு வீட்டினைக் கொண்டிருப்பதற்கு நாம் உதவுகின்றோம்.

நீங்கள் அறிந்துள்ளீர்களா?
 • எமது திருப்பிச் செலுத்தும் காலம் 20 வருடங்கள் வரை நீண்டது.
 • நாம் உங்களுக்கு கவர்ச்சியான நிலையான மற்றும் மிதக்கும் வட்டி வீதங்களை வழங்குகின்றோம்.
 • உங்களுடைய கடனுக்கு ஆகவும் குறைந்த சட்டக் கட்டணங்களை நாம் அறவிடுகின்றோம்.
 • நீங்கள் வீட்டை நிர்மாணிக்கத் திட்டமிட்டால் அளவைப்பட்டியலின் (BOQ) 80% வரையான தொகை வரை நாம் வழங்குகின்றோம் (நிர்மாணத்திற்கு).
 • வீடொன்றை வாங்கும் போது கட்டாய விற்பனைப் பெறுமதியின் 75% வரையான தொகையை நாம் உங்களுக்கு வழங்கி உதவுகின்றோம்.
 • வெற்றுக்காணியொன்றை நீங்கள் வாங்கும் போது கட்டாய விற்பனைப் பெறுமதியின் 40% வரையான தொகையை நாம் உங்களுக்கு வழங்குகின்றோம்.
உங்களுக்குக் கிட்டும் நன்மைகள்
 • குடியிருப்புத் தேவைகளுக்கு வீடொன்றை வாங்குதல்
 • உங்களுக்குச் சொந்தமான நிலத்தில் வீடொன்றை நிர்மாணித்தல்
 • வெற்றுக்காணியை கொள்வனவு செய்தல் (ஒவ்வொரு விண்ணப்பத்தின் அடிப்படையிலும் வேறு வேறாக கருத்தில் கொள்ளப்படும்).
 • குடியிருப்பு நோக்கங்களுக்காக வெற்றுக் காணியொன்றைக் கொள்வனவு செய்து, வீடொன்றை நிர்மாணித்தல்
 • நீங்கள் ஏற்கனவே பகுதியளவில் நிர்மாணித்துள்ள வீட்டை முழுமையாகக் கட்டி முடித்தல்.
 • ஏற்கனவே உள்ள வீட்டை புனரமைத்தல், திருத்தம் செய்தல் அல்லது விஸ்தரிப்புச் செய்தல்

சம்பளத்தை ஈட்டுகின்ற தனிநபர்களுக்கு

நீங்கள் விண்ணப்பிக்கலாம்

21-55 வயதிற்கு இடைப்பட்டவராகவும், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/ஸ்தாபனம் ஒன்றில் ‘நிரந்தர’ ஊழியராக இருத்தல் வேண்டும்.

தேவையான ஆவணங்கள்
 • பூரணப்படுத்தப்பட்ட வீட்டுக் கடன் விண்ணப்ப படிவம்.
 • உங்களுடைய இலங்கை தேசிய அடையாள அட்டை/கடவுச்சீட்டு/சாரதி அனுமதிப்பத்திரத்தின் பிரதி.
 • வதிவிட முகவரியை உறுதிப்படுத்துவதற்கான அண்மித்த கட்டணப் பட்டியல் பிரதி.
 • கடைசி 3 மாதங்களுக்கான சம்பளப் பட்டியல்.
 • உங்களுடைய பதவி மற்றும் சம்பள விபரங்களை உறுதிப்படுத்தும் வகையில் உங்களுடைய தொழில்தருநரின் கடிதம்.
 • விற்பனை ஒப்பந்தம் (காணி/வீடு கொள்வனவாக அமையும் பட்சத்தில், அல்லது விற்பனை விலையைக் குறிப்பிட்டு விற்பனை செய்பவரிடமிருந்து உறுதிப்படுத்தல் கடிதம் ஒன்று)
 • வங்கியினால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அளவைப்பட்டியல்
 • உள்ளூராட்சி அதிகாரசபையால் அங்கீகரிக்கப்பட்ட கட்டட வரைவுத் திட்டம்
 • உள்ளூராட்சி அதிகாரசபையால் அங்கீகரிக்கப்பட்ட உறுதிப்பத்திரம் மற்றும் காணி அளவைத் திட்டம் ஆகியவற்றின் பிரதிகள்

சுய தொழில் புரிகின்ற தனிநபர்களுக்கு

நீங்கள் விண்ணப்பிக்கலாம்

18-55 வயதிற்கு இடைப்பட்டவராகவும், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளராக, பங்காளராக அல்லது பணிப்பாளராக சொந்தமாக வியாபாரத்தை முன்னெடுப்பதுடன், மாதாந்தம் குறைந்தபட்சமாக ரூபா 50,000/= இலாபத்தை ஈட்டுபவராகவும், 3 வருடங்களுக்கும் மேலாக அவ்வியாபாரத்தை முன்னெடுத்து வருபவராகவும் இருத்தல் வேண்டும்.

தேவையான ஆவணங்கள்
 • பூரணப்படுத்தப்பட்ட வீட்டுக் கடன் விண்ணப்ப படிவம்.
 • உங்களுடைய இலங்கை தேசிய அடையாள அட்டை/கடவுச்சீட்டு/சாரதி அனுமதிப்பத்திரத்தின் பிரதி.
 • வதிவிட முகவரியை உறுதிப்படுத்துவதற்கான அண்மித்த கட்டணப் பட்டியல் பிரதி.
 • வியாபாரக் கூட்டிணைப்புச் சான்றிதழின் பிரதி
 • கடைசி 6 மாதங்களுக்கான வங்கிக் கணக்குக் கூற்றுக்களின் பிரதிகள் – நிறுவனம் மற்றும் தனிப்பட்ட
 • கடைசி 2 வருடங்களுக்கான வரிக் கொடுப்பனவு ரசீதுகளின் பிரதிகள்
 • கடைசி 2 வருடங்களுக்கான கணக்காய்வு செய்யப்பட்ட கணக்கு விபரங்களின் பிரதிகள்
 • வரையறுக்கப்பட்ட பொறுப்புடமை நிறுவனங்களாக இருக்கும் பட்சத்தில் படிவம் 48, நிறுவன யாப்பு மற்றும் நோக்குப் பத்திரங்கள்
 • விற்பனை ஒப்பந்தம் (காணி/வீடு கொள்வனவாக அமையும் பட்சத்தில், அல்லது விற்பனை விலையைக் குறிப்பிட்டு விற்பனை செய்பவரிடமிருந்து உறுதிப்படுத்தல் கடிதம் ஒன்று)
 • வங்கியினால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அளவைப்பட்டியல்
 • உள்ளூராட்சி அதிகாரசபையால் அங்கீகரிக்கப்பட்ட கட்டட வரைவுத் திட்டம்
 • உள்ளூராட்சி அதிகாரசபையால் அங்கீகரிக்கப்பட்ட உறுதிப்பத்திரம் மற்றும் காணி அளவைத் திட்டம் ஆகியவற்றின் பிரதிகள்
இனியும் ஏன் தாமதம்?

இப்போதே விண்ணப்பியுங்கள், எங்களை அழையுங்கள் அல்லது எங்களுடன் உரையாடுங்கள். உங்களுக்கென சொந்தமாக வீடொன்றைக் கொண்டிருப்பதற்கு தேவையான இலகுவான வழியை நாம் உங்களுக்கு ஏற்படுத்தித் தருவோம்.

 

கார்கில்ஸ் வங்கி உங்களை வரவேற்கின்றது!
கார்கில்ஸ் வங்கி வழங்கும் வியக்கவைக்கும் வங்கிச்சேவைகளை அனுபவியுங்கள்
உங்களை நாமும் அறிந்துகொள்வோம்!
cargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.
OR
Inquiry Form