Home //
Safe Banking

CBL வாடிக்கையாளர்களுக்கான தகவல் பாதுகாப்பு விழிப்புணர்வு

 

இணைய வங்கிச் சேவை மற்றும் கைபேசி வங்கிச் சேவை என்பது உங்கள் வசதிக்கேற்ப வங்கிச் சேவை செய்வதற்கான எளிதான மற்றும் பாதுகாப்பான வழியாகும். இருப்பினும், பாரம்பரிய வங்கியில் எப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறோமோ, அதேபோன்று இணைய வங்கிச் சேவை மற்றும் கைபேசி வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தும்போதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

 

இணைய மோசடி என்றால் என்ன?

உங்கள் தகவலைப் பெறுவதற்கு யாரேனும் ஒரு சட்டரீதியான நபர் அல்லது அமைப்பாகக் காட்டி, உங்கள் வங்கிக் கணக்குகளில் மோசடியான பரிவர்த்தனைகளை நடத்தினால், அது இணைய மோசடியாகக் கருதப்படுகிறது. இணைய மோசடியின் பொதுவான முறைகள் மோசடி மின்னஞ்சல்கள், இணையதளங்கள் மற்றும் பாப்-அப் சாளரங்கள் அல்லது பிற சமூக பொறியியல் நுட்பங்களுடன் இவற்றின் கலவையாகும்.

சமூகப் பொறியியல் என்றால் என்ன?

சமூகப் பொறியியல் என்பது மக்களை கையாண்டு, அவர்களது இரகசிய தகவல்களை வெளியிடுவதாகும். குற்றவாளிகள் ஒரு நபரது பயனர் பெயர்கள், கடவுச்சொற்கள், கடனட்டை எண்கள் அல்லது வங்கித் தகவல்களைக் கொடுக்க வைத்து; அல்லது அவர்களின் கணினியை அணுகி, இந்தத் தகவலைப் பெறவும், மேலும் கணினியைக் கட்டுப்படுத்தவும் தீங்கிழைக்கும் மென்பொருளை நிறுவி ஏமாற்றுகிறார்கள்.

போலித்தனம் என்றால் என்ன?

உங்கள் நிதி நிறுவனத்தில் இருந்து வருவதாகக் கூறும் ஒருவரிடமிருந்து நீங்கள் தொலைபேசி அழைப்பைப் பெறுகிறீர்கள். அவை முறையானவை என்று பரிந்துரைக்கும் வகையில் உங்களின் கணக்குகள் மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பற்றி அவர்கள் உங்களுடன் பேசுகிறார்கள். இருப்பினும், அந்த நபர் உங்களைப் பற்றிய சில தகவல்களைக் கண்டுபிடித்த ஒரு அடையாளத் திருடராகும் என்பதுடன் அவர்கள் மோசடி செய்ய முயற்சிக்கலாம்.

இணையதூண்டிலிடல் என்றால் என்ன?

இணையத் தூண்டிலிடல் என்பது பயனர் பெயர்கள், கடவுச்சொற்கள், கடனட்டை எண்கள் அல்லது வங்கித் தகவல் போன்ற இரகசியத் தகவலை வழங்குவதற்காக, சட்டப்பூர்வமான நபர் அல்லது அமைப்பாகக் காட்டி, மின்னஞ்சல், தொலைபேசி அல்லது குறுஞ்செய்தி மூலம் ஒருவரைத் தொடர்புகொள்ளுவதாகும்.

இணையப் பயனர்களை போலி இணையத்தளத்திற்கு வழிநடத்தல் என்றால் என்ன?

இணையப் பயனர்களை போலி இணையத்தளத்தில் வழிநடத்தல் என்பது பயனர் பெயர்கள், கடவுச்சொற்கள், கடனட்டை எண்கள் அல்லது வங்கித் தகவல் போன்ற இரகசியத் தகவல் கோரப்படும் முறையான இணையதளங்களில் இருந்து மோசடியான இணையதளங்களுக்கு பயனர்களை திருப்பி விடுவதாகும்.

 

பாதுகாப்பு கட்டுப்பாடுகள்

கார்கில்ஸ் வங்கி இணைய வங்கிச் சேவை மற்றும் கைபேசி வங்கிச்சேவைகளில் பல மோசடிகளைத் தணிக்கும் நடவடிக்கைகளைக் கொண்டுள்ளது, இதில் பின்வருவன அடங்கும்.:

● பாதுகாப்பான அணுகல் மற்றும் பயனர் நம்பகத்தன்மையை சரிபார்த்தல்:

சரியான அடையாளத்திற்காக ஒரு தனிப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் சேர்க்கை கொடுக்கப்பட்டுள்ளது.

● தானியங்கி வெளியேறல் / அமர்வு நேரம் முடிவு

05 நிமிட செயலற்ற நிலைக்குப் பிறகு, உங்கள் கார்கில்ஸ் வங்கி இணைய வங்கி அமர்வு, அங்கீகரிக்கப்படாத அணுகலைத் தவிர்க்க உங்களைத் தானாகவே வெளியேற்றும்.

● கடவுச்சொல் மூடப்படல்

உங்கள் கடவுச்சொல்லை தொடர்ந்து ஆறு முறை தவறாக உள்ளிடப்பட்டால், உங்கள் அடையாளத்தை வங்கி சரிபார்க்கும் வரை நீங்கள் இணைய வங்கிச் சேவை “லாக் அவுட்(மூடப்படல்)” செய்யப்படுவீர்கள்.

● பாதுகாப்பான தரவு பரிமாற்றம் / குறியாக்கம் 

உங்கள் இணைய வங்கி அமர்வில் தகவலின் குறியாக்கம் பயன்படுத்தப்படுகிறது.

 

இணைய வங்கிச் சேவை மற்றும் கைபேசி வங்கிச் சேவையைப் பயன்படுத்துவதற்கான சிறந்த வழிகள்

  1. கடவுச்சொல்பாதுகாப்பு

உங்கள் கடவுச்சொல்லை பாதுகாப்பானதாக்குங்கள்

  • மற்றவர்கள்யூகிக்க கடினமாக இருக்கும் கடவுச்சொல்லை அமைக்கவும்.
  • எண்கள், சிறப்புஎழுத்துகள் மற்றும் பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களின் கலவையைப் பயன்படுத்தவும் (உதாரணமாக AzXd#185)
  • மற்றவர்கள்யூகிக்கக்கூடிய எண் அல்லது பெயரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். உதாரணமாக, குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் பிறந்த தேதிகளைத் தவிர்க்கவும்.
  • வெவ்வேறுகணக்குகளுக்கு ஒரே கடவுச்சொல்லைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

 

உங்கள் கடவுச்சொல்லை பாதுகாப்பானதாக வைத்திருங்கள்.

  • உங்கள்கடவுச்சொல்லை யாருக்கும் தெரிவிக்காதீர்கள்.
  • உங்கள்பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை எப்போதும் இரகசியமாக வைத்திருங்கள்.
  • கடவுச்சொல்லைஎழுதவோ பதிவு செய்யவோ கூடாது.
  • உங்கள்கடவுச்சொல்லை கணினிகள், கைபேசி அல்லது மற்றவர்களுக்குத் தெரியும்படி வைக்க வேண்டாம்.

 

உங்கள் கடவுச்சொல்லை பாதுகாப்பாக பயன்படுத்தவும்

  • உங்கள்கடவுச்சொல்லை உள்ளிடும்போது யாரும் உங்களைப் பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்தவும்.
  • உங்கள்கடவுச்சொல்லை தொலைபேசி அழைப்பில் தெரிவிக்க வேண்டாம்.
  • உங்கள்கடவுச்சொல்லை மின்னஞ்சலில் ஒருபோதும் சேர்க்க வேண்டாம்.
  • உங்கள்கடவுச்சொல்லை இணைய உலாவி அல்லது கைபேசியில் சேமிக்க வேண்டாம்.

ஒரு தடவைக்கான கடவுச்சொல்லைப்(OTP) பகிர வேண்டாம்

  • கார்கில்ஸ்வங்கியில் பதிவு செய்யப்பட்ட உங்கள் கைபேசி எண் அல்லது மின்னஞ்சலுக்கு மட்டுமே OTP அனுப்பப்படும்.
  • உங்கள்கைபுசி எண் அல்லது மின்னஞ்சலைப் புதுப்பிப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள், இதன் மூலம் உங்கள் OTPயைப் பெறலாம்.
  • உங்கள்OTPயை யாருடனும் பகிர வேண்டாம். 

 

  1. பாதுகாப்பானஅணுகல்
  • பொதுகணினிகள், பகிரப்பட்ட கைபேசி அல்லது பொது Wi-Fiயை வழியாக இணைய வங்கி அல்லது கைபேசி வங்கிச் சேவையை அணுகுவதைத் தவிர்க்கவும்.
  • cargillsbank.com இணையதளமுகவரியை நேரடியாக உள்ளிடவும். எங்களின் இணையதளத்தை அணுகவோ அல்லது மின்னஞ்சல்கள் அல்லது இணையதளங்களில் உள்ள எந்தவொரு ஹைப்பர்லிங்க்கள் அல்லது இணைப்புகள் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவலை (உங்கள் கடவுச்சொல் உட்பட) வழங்கவோ வேண்டாம்.
  • ‘https’ முன்னொட்டுடன்தொடங்குவதை உறுதிசெய்ய, இணையதள URLஐச் சரிபார்க்கவும். பொதுவான ‘http’ முன்னொட்டு (அதாவது ‘s’ இல்லாமல்) பாதுகாப்பானது அல்ல.
  • புகழ்பெற்றமூலங்களிலிருந்து மட்டுமே கைபேசிப் பயன்பாடுகளைப் பதிவிறக்கவும் (உதாரணமாக Apple App Store, Google Play).
  • உங்கள்கைபேசி பயன்பாட்டில் இல்லாதபோது கடவுச்சொல் அல்லது பேட்டர்ன் (pattern) மூலம் எப்போதும் பூட்டி வையுங்கள்.
  • உங்கள்இணைய வங்கிச் சேவையை அணுகும்போது உங்கள் கணினி அல்லது மொபைல் ஃபோனை கவனிக்காமல் விட்டுவிடாதீர்கள்.
  • பயன்பாட்டிற்குப்பிறகு உடனடியாக வெளியேற நினைவில் கொள்ளுங்கள். உலாவியை மூடுவது உங்களை வெளியேற்றாது. “வெளியேறு” பொத்தானைக் கிளிக் செய்து, உங்கள் கணக்குத் தகவலைப் பாதுகாக்க வெளியேறும் நடைமுறைகளைப் பின்பற்றவும்.

 

  1. வங்கியிலிருந்துசெய்திகள்
  • கணக்குஎண்கள், PIN எண்கள் அல்லது கடவுச்சொற்கள் போன்ற இரகசிய தகவல்களைக் கோரி கார்கில்ஸ் வங்கி மின்னஞ்சலில் செய்தி அனுப்பாது. அத்தகைய கோரிக்கையை நீங்கள் பெற்றால், உடனடியாக கார்கில்ஸ் வங்கி வாடிக்கையாளர் சேவையை + 94 11 7640 640 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
  • அறிவிப்புநோக்கங்களுக்காக நீங்கள் செல்லுபடியாகும் கைபேசி எண் மற்றும் தொடர்பு எண்ணை வழங்க வேண்டும். இந்த எண்களில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், உடனடியாக வங்கிக்குத் தெரிவிக்கவும்.
  • ஒவ்வொருநிதி பரிமாற்றத்திற்குப் பிறகும் உங்களுக்கு அனுப்பப்பட்ட SMS அறிவிப்பைச் சரிபார்க்கவும்.
  • உங்கள்இணைய வங்கிச் சேவையை யாராவது அணுகியதாக நீங்கள் சந்தேகித்தால் அல்லது சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளை நீங்கள் கவனித்திருந்தால், உடனடியாக கார்கில்ஸ் வங்கியை + 94 11 7640 640 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
  • உங்களுக்குஏதேனும் சந்தேகம் இருந்தால் அல்லது ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) SMS அல்லது மின்னஞ்சல் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பெற்றால், உடனடியாக கார்கில்ஸ் வங்கியை + 94 11 7640 640 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
  • உங்கள்கணக்குகளை அவ்வப்போது சரிபார்த்து எச்சரிக்கைகள் மற்றும் அறிக்கைகளை மதிப்பாய்வு செய்யவும்.

 

  1. மின்னஞ்சல்பாதுகாப்பு
  • உங்கள்கணக்குத் தகவல் மற்றும்/அல்லது கடவுச்சொல்லைக் கோரும் சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்களை அல்லது தெரியாத அனுப்புநர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களைத் திறப்பதைத் தவிர்க்கவும். நீங்கள் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சலைத் திறந்திருந்தால், அதில் உள்ள இணைப்பு அல்லது இணைப்பைத் திறக்க வேண்டாம். மின்னஞ்சலை உடனடியாக நீக்கவும்.

 

  1. இணையபொருள் கொள்வனவு பாதுகாப்பு

சில எளிய விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் வங்கி அட்டையைப் பயன்படுத்தி பாதுகாப்பான மற்றும் வசதியான இணைய பொருள் கொள்வனவினை நீங்கள் அனுபவிக்கலாம்:

  • உங்கள்வங்கி அட்டை விவரங்களை உள்ளிடும்போது “பாதுகாப்பான” இணையப் பக்கங்களை மட்டும் பயன்படுத்தவும். உங்கள் உலாவியின் கீழ் வலது மூலையில் பூட்டப்பட்ட பூட்டு இருந்தால் அல்லது முகவரி ‘https’ என்று தொடங்கினால், ‘s’ என்பது பாதுகாப்பானது.
  • பாதுகாப்பானகணினியைப் பயன்படுத்துங்கள் (உதாரணமாக குறியாக்கம், வைரஸ் பரீட்சிக்கும் மென்பொருள், ஃபயர்வோல் (பாதுகாப்புச் சுவர்), ஸ்பைவேர் (உளவுநிரல்) எதிர்ப்பு மென்பொருள் மற்றும் அதுபோன்ற பாதுகாப்புகள்).
  • புகழ்பெற்றஇணைய அங்காடிகளைப் பயன்படுத்தவும். எடுத்துக்காட்டாக, இணைய அங்காடியில் மீள வழங்கல் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கை உள்ளதா எனச் சரிபார்க்கவும்.
  • சேவையைஅணுக கடவுச்சொல்லைப் பயன்படுத்த வேண்டியிருந்தால், அது எளிதில் அடையாளம் காணக்கூடியதாக இல்லை என்பதை உறுதிசெய்வதுடன், அதை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம்.
  • உங்கள்வங்கி அட்டை அறிக்கையில் அங்கீகரிக்கப்படாத கட்டணம் தோன்றினால், உடனடியாக கார்கில்ஸ் வங்கி வாடிக்கையாளர் சேவையை + 94 11 7640 640 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

 

  1. உங்கள்கடன் / வரவு அட்டையைப் பாதுகாத்தல்
  • உங்கள்வங்கி அறிக்கைகளைத் தவறாமல் சரிபார்த்து, ஏதேனும் சந்தேகத்திற்குரிய மோசடி நடவடிக்கை இருந்தால் உடனடியாக வங்கிக்குத் தெரிவிக்கவும்.
  • உங்கள்அட்டையை தொலைத்துவிட்டாலோ அல்லது அது திருடப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டாலோ, உடனடியாக உங்கள் வங்கியில் புகார் செய்து, காணாமல் போன அட்டையை இரத்துச்செய்யவும்.
  • ஒவ்வொருசில மாதங்களுக்கும் உங்கள் தனிப்பட்ட அடையாள எண் (PIN) மற்றும் கடவுச்சொல்லை மாற்றவும்.
  • வங்கியில்மாத்திரம் ATMகளை பயன்படுத்துங்கள்.
  • இணையப்பரிவர்த்தனைகளுக்கு பொது திறந்த வலையமைப்புக்களை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம்.
  • கடன்/வரவுஅட்டை கட்டணங்களுக்கு நம்பகமான மற்றும் பாதுகாப்பான தளங்களைப் பயன்படுத்தவும்.
  • கடன்/வரவுஅட்டையின் படங்களை ஒருபோதும் பகிர வேண்டாம்.
  • இணையப்பயன்பாடுகளில் கடன்/வரவு அட்டை விவரங்களைச் சேமிப்பதைத் தவிர்க்கவும்.

 

  1. பாதுகாப்பானATM பயன்பாடு
  • வங்கியுடன்தொடர்புடைய ATMகளை மட்டுமே பயன்படுத்துங்கள்; எரிவாயு நிலையங்கள் போன்ற சாத்தியமான “ஸ்கிம்மிங்” இடங்களிலிருந்து விலகி இருங்கள்.
  • உங்கள்பரிவர்த்தனையைத் தொடர்வதற்கு முன், உங்களுக்குச் சிறிய சந்தேகத்தைத் தூண்டக்கூடிய எவராலும் கண்காணிப்பிலிருந்து பாதுகாக்க சுற்றிப் பாருங்கள்.
  • உங்கள்பரிவர்த்தனைக்கான இரசீதை எப்போதும் கோருங்கள். உங்கள் இரசீதுகளை உங்கள் மாதாந்த அறிக்கைகளுடன் ஒப்பிடுங்கள்.
  • உங்கள்ATM அட்டை தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ, உடனடியாக உங்கள் வங்கிக்குத் தெரிவிக்கவும். ATM இயந்திரம் அல்லது ATM அட்டையின் அங்கீகரிக்கப்படாத பயன்பாடு குறித்து உங்கள் வங்கிக்கும் உங்கள் உள்ளூர் பொலிஸாருக்கும் உடனடியாகப் புகாரளிக்கவும்.
  • சந்தேகத்திற்கிடமானஎதையும் நீங்கள் கண்டால், உடனடியாக உங்கள் பரிவர்த்தனையை இரத்துச் செய்துவிட்டு வெளியேறவும். பரிவர்த்தனை உண்மையில் இரத்துச் செய்யப்பட்டதா என்பதை விரைவில் உங்கள் நிதி நிறுவனத்துடன் உறுதிப்படுத்தவும்.
  • இயந்திரத்தில்அட்டை இறுகிக் கொண்டால், உடனடியாக வங்கியை அழைத்து அதைப் புகாரளிக்கவும்.
  • ATM பயன்படுத்தும்போதுயாரையும் உள்ளே நுழைய விடாதீர்கள்.
  • ATMஇல்அட்டையை மறந்து வைத்து விட்டுவிடாதீர்கள்.
  • ATMஇல்உங்கள் நேரத்தை குறைக்கவும். உங்கள் அட்டையை தயாராக வைத்திருங்கள். நீங்கள் ஒரு உறையைப் பயன்படுத்தி வைப்பிலிடுகின்றீர்கள் என்றால், நீங்கள் ATMஇற்குச் செல்வதற்கு முன் உறையை நன்கு மூடவும்.
  • உங்கள்தனிப்பட்ட அடையாள எண்ணை (PIN) தட்டச்சு செய்யும் போது, ​​ATM விசைப்பலகையை மறைக்க உங்கள் மற்ற கையைப் பயன்படுத்தவும்.

 

தொடர்பு விபரங்கள்:

  • அலுவலகம் : இல. 696, காலி வீதி, கொழும்பு 04, இலங்கை.
  • தொலைபேசி : +94 11 7 640 640 (தலைமையகம் / உதவிசேவை)
  • மின்னஞ்சல் : customersupport@cargillsbank.com

 

கார்கில்ஸ் வங்கி உங்களை வரவேற்கின்றது!
கார்கில்ஸ் வங்கி வழங்கும் வியக்கவைக்கும் வங்கிச்சேவைகளை அனுபவியுங்கள்
உங்களை நாமும் அறிந்துகொள்வோம்!
cargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.
OR
Inquiry Form