
இலங்கை ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள அபிவிருத்தி மற்றும் விசேட செயற்திட்டப் பிரிவினால் அமுலாக்கம் செய்யப்பட்டுள்ள தேசிய விவசாய வர்த்தக அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்திற்கு (NADeP) விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்திடமிருந்து (IFAD) கிடைக்கப்பெறும் கடன் வசதியின் மூலமாக நிதியுதவியளிக்கப்பட்டு வருகின்றது. தனியார் துறை நிறுவனங்கள் (நிறுவனங்கள், பங்குடமைகள் மற்றும் தனி வர்த்தக முயற்சிகள்) அல்லது விவசாயிகளை அடிப்படையாகக் கொண்ட அமைப்புக்கள் ஆகியவற்றுடன் கூட்டிணைந்துள்ள இந்நிகழ்ச்சித்திட்டமானது சிறு அளவிலான விவசாய உற்பத்தியாளர்களை இலக்காகக் கொண்டு பெறுமதிச் சங்கிலி மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்தல் இணைப்புக்களை உருவாக்கும் பங்குடமை முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.
NADEP இன் கீழ் அனர்த்தத்திற்கு பின்னரான பொருளாதார மீட்சிக் கடன் (PEARL) நிகழ்ச்சித்திட்டம்
சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் வரட்சி ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்களுக்கு/சிறு தொழில் நிறுவனங்களுக்கு அனர்த்தத்திலிருந்து மீளும் முயற்சிகளுக்கு உதவும் நோக்குடன் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இயங்கும் செயற்திட்ட முகாமைத்துவப் பிரிவினால் “அனர்த்தத்திற்கு பின்னரான பொருளாதார மீட்சிக் கடன்” திட்டம் (PEARL) அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்திடமிருந்து (IFAD) அதற்கான நிதியுதவி அளிக்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியின் பிராந்திய அபிவிருத்தித் திணைக்களம் இக்கடன் திட்டத்தின் செயற்பாட்டு முகவராகத் தொழிற்படுகின்றது.
இக்கடன் திட்டத்தை அமுல்படுத்துவதற்கான முதலாவது தொகையாக, இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு 3.4 மில்லியன் அமெரிக்க டொலர் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. 2017 ஆகஸ்ட் மாதத்தின் முடிவில் இந்த நிதி பூரணமாக பங்கீடு செய்யப்படுமென செயற்திட்ட முகாமைத்துவப் பிரிவு எதிர்பார்த்திருந்தது. இந்நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்துவதற்கான இரண்டாவது கட்ட நிதி 2017 செப்டெம்பர் முடிவில் இக்கடன்திட்டத்திற்காக ஒதுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு அமைவாக 2017 ஒக்டோபர் முடிவில் கடன் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் மொத்த தொகையையும் வங்கிகள் பங்கீடு செய்யவுள்ளன.
இத்திட்டத்தின் நோக்கம்
சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் வரட்சி ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்கள்/சிறு தொழில் நிறுவனங்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை அல்லது வருமானத்தை ஈட்டும் செயற்பாடுகளை மீளவும் ஆரம்பிப்பதற்கு தேவையான நிதியை வழங்கி, அனர்த்தத்திற்கு பின்னரான மீட்சி முயற்சிகளுக்கு கடனாளிகளுக்கு (தனிநபர்கள் அல்லது ஒரு குழு) ஆதரவளிப்பதே இக்கடன்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.
NADeP செயற்திட்டத்தின் முன்னரும், பின்னரும் மாட்டுக் கொட்டகைகள்
NADeP மூலமாக விவசாயிகளுக்கு பால் கறக்கும் இயந்திரங்கள் மற்றும் புல்வெட்டும்; கருவிகள் வழங்கப்பட்டுள்ளன
தொழிற்பாட்டுப் பிரதேசங்கள்
வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள்
கேகாலை, இரத்தினபுரி, காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, நுவரெலியா, களுத்துறை, கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களை இத்திட்டத்திற்காக செயற்திட்ட முகாமைத்துவப் பிரிவு தெரிவு செய்துள்ளது.
எனினும் முழு நாடுமே வரட்சியால் பாதிக்கப்பட்டதாக இச்செயற்திட்ட நோக்கத்திற்காக கருத்தில் கொள்ளப்பட்டது.
இக்கடன் திட்டத்தின் அடிப்படை அம்சங்கள்
1.) அதிகபட்ச உப-கடன் எல்லை: ரூபா 150,000/=
2.) தகைமை:
மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு/மற்றும் வரட்சியால் பாதிக்கப்பட்டு தமது தொழிற்பாடுகளை மீளவும் ஆரம்பிப்பதற்கு நிதி தேவைப்பட்ட எந்தவொரு வர்த்தக நிறுவனங்கள்/சிறு தொழில் நிறுவனங்கள்.
3) மறுகடன்: தனியார் நிதி நிறுவனத்தால் பங்கீடு செய்யப்பட்ட தொகையில் 100% வரை உப கடன்களை இலங்கை மத்திய வங்கி மறுகடனாக வழங்கும்.
4) வட்டி வீதம்;
தனியார் நிதி நிறுவனங்களுக்கு: ஆண்டுக்கு 3.25 சதவீதம்
முடிவுக் கடனாளிகளுக்கு: ஆண்டுக்கு 6.50 சதவீதம்
5) இணை ஈடு: வர்த்தக நிறுவனங்களின்/சிறு தொழில் நிறுவனங்களின் செயற்பாடுகளின் சாத்தியத்திற்கு முன்னுரிமையளிக்கப்படல் வேண்டும். மேலும், தனியார் நிதி நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற ஏனைய இரு கடனாளிகள் அல்லது இரு தனிப்பட்ட உத்தரவாதமளித்தவர்களின் இருவருக்கிடையிலான கூட்டு உத்தரவாதம் போன்ற மாற்று இணை ஈடுகளும் இதன் கீழ் கருத்தில் கொள்ளப்படுகின்றன.
அழிவினால் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சி செயற்திட்டங்களின் தொழிற்பாடுகளை மீளவும் ஆரம்பிப்பதற்காக புதிய மற்றும் ஏற்கனவே உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கபடுகின்றது.
தொழிற்பாட்டுப் பிரதேசங்கள்
நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும்
விண்ணப்பிப்பதற்கு நீங்கள் கொண்டிருக்க வேண்டிய தகைமைகள்
வட்டி வீதம்
ஆண்டுக்கு 8%
நீங்கள் கடனாப் பெற்றுக்கொள்ளக்கூடிய தொகை
மீள்கொடுப்பனவு தவணைக் காலம்
06 மாத சலுகைக் காலம் உட்பட 60 மாதங்கள் (சலுகைக் காலத்தின் போது வட்டி அறவிடப்படும்)
பாதுகாப்பு உத்தரவாதங்கள்
அசையாத மற்றும் அசையும் சொத்துக்களை பாதுகாப்பு உத்தரவாதமாக அடமானம் வைப்பதையும் வங்கி ஏற்றுக்கொள்கின்றது.
ஒவ்வொரு விவசாயிக்கும் உதவும் முயற்சியை கார்கில்ஸ் வங்கி ஊழியர்கள் முன்னெடுத்துச் செல்கின்றனர் – அவர்கள் எங்கு தொலைவில் இருந்தாலும் அது எமக்கு பொருட்டல்ல!