முகப்பு // Personal // Savings Accounts
Smart Teens சேமிப்புக் கணக்கு
011 7 640 640
அறிமுகம்

கார்கில்ஸ் வங்கியின் “ஸ்மார்ட் டீன்ஸ்” என்பது இளம் சேமிப்பாளர்கள் தங்கள் நிதிகளை நிர்வகிப்பதில் ஒரு சிறந்த தொடக்கத்தைப் பெறுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. “ஸ்மார்ட் டீன்ஸ்” சேமிப்புக் கணக்கு, அடிப்படை வங்கியியல் அம்சங்களை உள்ளடக்கிய அனுபவத்தை அளிக்கும் அதே வேளையில், சேமிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள பதின்ம வயதினர்களுக்கு உதவுகிறது. இது சேமித்தல், செலவழித்தல் மற்றும் கற்றல் ஆகியவற்றுக்கான சரியான உள்ளீடாக உள்ளதுடன், எதிர்காலத்தில் நிதி ரீதியாக சுயாதீனமடைவதற்கு அவர்களை இது தயார்படுத்துகிறது. இன்றே அவர்களை வலுவூட்டி அவர்களின் நாளையைப் பாதுகாத்திடுங்கள்.

முக்கிய அம்சங்கள்
  • இது பரிவர்த்தனை செய்யக்கூடிய கணக்கு ஆகும்.
  • விசேட வட்டி விகிதம்.
  • முற்படம் ஒட்டிய இலவச பற்று அட்டை.
  • பெற்றோரின் தொலைபேசி இலக்கத்துக்கு இலவச குறுஞ்செய்தி சேவை.
  • பதின்ம வயதினருக்கான இலவச இணைய வங்கி கைப்பேசி வங்கி வசதிகள்.
  • பெற்றோரின் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னியல் கணக்குக் கூற்று அனுப்புதல்.
தகைமை

கணக்கு திறக்கும் சந்தர்ப்பத்தில் இலங்கையில் வசிப்பவராகவும் 13 – 18 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

அவசியப்படும் ஆவணங்கள்
  • முறையாகப் பூரணப்படுத்தப்பட்ட சேமிப்புக் கணக்குக்கான விண்ணப்பம்.
  • பதின்ம வயதுடையவரின் பிறப்புச் சான்றிதழின் பிரதி ஒன்று/ பதின்ம வயதுடையவரின் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு இருப்பின் அல்லது செல்லுபடியான தேசிய அடையாள அட்டை இருப்பின் அதன் பிரதி .
  • பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டை இலக்கம் பொறிக்கப்பட்ட செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை/செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம்/செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஆகியவற்றின் பிரதி .
    அண்மைய பாவனைக் கட்டணச்சீட்டின் பிரதி ஒன்று (வங்கிக்கு வழங்கப்பட்ட முகவரி தேசிய
  • அடையாள அட்டை/ சாரதி அனுமதிப்பத்திரம்/ கடவுச்சீட்டு ஆகியவற்றில் குறிப்பிடப்பட்ட முகவரியில் இருந்து வித்தியாசப்படின்).
நியதிகளும் நிபந்தனைகளும்
  • கூட்டுக் கணக்குகள் திறக்க அனுமதி இல்லை.
  • கணக்குப் புத்தகங்கள் வழங்கப்படமாட்டாது.
  • குறைந்தபட்ச ஆரம்பநிலை வைப்பு ரூ.5,000/-
  • பேணப்பட வேண்டிய குறைந்தபட்ச மீதித் தொகை ரூ.2,500/-
  • ஏ.டி.எம். மூலம் நாளொன்றுக்குப் பெற முடியுமான மட்டுப்பட்ட தொகை ரூ.5,000/- , நாளாந்த POS & மின்னியல் வர்த்தகப் பரிவர்த்தனைத் தொகை ரூ.5,000/-
  • நிர்ணயமற்ற பணமீள் பெறுகைகள் அனுமதிக்கப்படமாட்டாது.
  • கார்கில்ஸ் டீன்ஸ் சேமிப்புக் கணக்கு தொடர்பான உற்பத்திஅம்சங்கள்/சலுகைகள் மற்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை எந்த நேரத்திலும் மாற்ற, சேர்க்க அல்லது திருத்த கார்கில்ஸ் வங்கிக்கு அதிகாரம் உள்ளது.
  • சாதாரண சேமிப்புகள் தொடர்பான மற்ற அனைத்து பொது விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் செயற்பாட்டு நடைமுறைகள் “ஸ்மார்ட் டீன்ஸ்” சேமிப்புக் கணக்கிற்கும் ஏற்புடையதாகும்.
  • இந்தக் கணக்கானது, உள்நாட்டு வருவாய் விதிமுறைகளில் நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்ட வரிகள் மற்றும் விதிப்பனவுகளுக்கு உட்பட்டதாகும்.
  • டீன் கணக்குக்கான எவ்வித கடன் வசதிகளும் வழங்கப்படமாட்டாது.
கார்கில்ஸ் வங்கி உங்களை வரவேற்கின்றது!
கார்கில்ஸ் வங்கி வழங்கும் வியக்கவைக்கும் வங்கிச்சேவைகளை அனுபவியுங்கள்
உங்களை நாமும் அறிந்துகொள்வோம்!
cargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.
OR
Inquiry Form