முகப்பு // Personal
வணிக மறுமலர்ச்சி பிரிவு
011 7 640 640

2024 ஆம் ஆண்டு 28.03.2024 ஆந் 2024 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க சுற்றறிக்கை மூலம் இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்களுக்கு அமைவாகஇ 2024 ஆம் ஆண்டில்இ வணிக மறுமலர்ச்சிப் பிரிவை ஒன்றை எமது வங்கி தொடங்கி வைத்துள்ளது. இந்த மூலோபாய முயற்சியானதுஇ எவ்வித முன்னோடியூமின்றி பேரண்டப் பொருளாதார நிலைமைகளால் மோசமாகப் பாதிக்கப்பட்ட வணிகங்களின் நிலையான பொருளாதார மறுமலர்ச்சியை எளிதாக்குவதையூம்இ அதே நேரத்தில் வங்கியின் சொத்துக்களின் தரத்தை மேம்படுத்துவதையூம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

வணிக மறுமலர்ச்சி பிரிவின் முக்கிய நோக்கம்இ நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் அல்லது எதிர்கொள்ளும் உடனடி ஆபத்தில் உள்ள செயற்படு தன்மை கொண்ட மற்றும் செயற்படாத கடன் பெறுநர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு இலக்கு நோக்கிய உதவியை வழங்குவதாகும். வருமானத்தில் குறிப்பிடத்தக்களவூ குறைவூஇ பணப்புழக்கக் கட்டுப்பாடுகள் காணப்படுகின்றமைஇ விற்பனையில் குறைவூஇ வணிக நடவடிக்கைகளுக்கு இடையூ+றுகள் ஏற்படுதல் அல்லது நிலவூம் பேரண்டப் பொருளாதார ஏற்ற இறக்கம் காரணமாக வணிக நடவடிக்கைள் தற்காலிகமாக தடைப்பட்டுள்ளமைஇ அவை அல்லாத வேறு சிக்கல்கள் போன்ற வகையிலான பல்வேறு காரணிகள் மூலம் இத்தகைய துயரநிலையானது ஏற்படலாம். நிதி ரீதியாக சிக்கலில் இருந்தாலும்இ அடிப்படையில் சாத்தியமான சாதகமான தன்மை காணப்படுகின்ற வணிகங்களில் இந்தப் புதிய பிரிவூ கவனம் செலுத்துகின்றது. இந்த நிறுவனங்கள் புத்துயிர் பெறுவதற்கான ஊக்குவிப்பை வழங்குவதும்இ அதன் மூலம் பரந்த பொருளாதார நடவடிக்கைகளைத் தூண்டுவதும்இ தேசிய பொருளாதார மீட்சிக்கு அர்த்தமுள்ள வகையில் பங்களிப்பதும் இதன் நோக்கமாகும்.

வணிகம் வலுவான முறையில் தொடர்வதை உறுதி செய்தல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துதல் என்ற நீண்டகால தொலைநோக்குப் பார்வையூடன்இ வணிக மறுமலர்ச்சி மற்றும் மறுவாழ்வூக்கான முற்போக்கான கலாச்சாரத்தைக் கொண்டு செயற்படுவதற்கு எமது வங்கி உறுதிபூண்டுள்ளது. இது சம்பந்தமாகஇ செயற்றிறன் குறைந்த வங்கியின் வாடிக்கையாளர்களைக் கண்காணித்தல்இ மதிப்பீடு செய்தல் அவர்களுக்கு ஆதரவூ அளித்தல் போன்ற விரிவான வழிமுறைகளை இந்தப் பிரிவூ நடைமுறைப்படுத்தவூள்ளது. ஒவ்வொரு நிறுவனத்தின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட மீள்நிதியளிப்பு வசதிகளையூம் இப்பிரிவூ வழங்கவூள்ளது. இத்தகைய தீர்க்கதரிசனமான அணுகுமுறை ஏற்கனவே உள்ள வேலைவாய்ப்பைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல்இ புதிய வாய்ப்புகளையூம் உருவாக்குவதோடு நீண்டகால ஸ்திரத்தன்மைக்குத் தேவையான நிலைபேறான பொருளாதார வளர்ச்சியை செயற்படச்செய்யவூள்ளது.

கார்கில்ஸ் வங்கி உங்களை வரவேற்கின்றது!
கார்கில்ஸ் வங்கி வழங்கும் வியக்கவைக்கும் வங்கிச்சேவைகளை அனுபவியுங்கள்
உங்களை நாமும் அறிந்துகொள்வோம்!
cargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.
OR
Inquiry Form