முகப்பு // Personal // Savings Accounts
வெளிநாட்டு நாணயக் கணக்குகள்
முதலீட்டை மேற்கொண்டு அது
பெருகுவதைப் பாருங்கள்!

உங்களது வெளிநாட்டு நாணயக் கணக்கு பல்கிப் பெருகட்டும்.

வதியாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்கு (NRFC)

Non-Resident Foreign Currency Account – வதியாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்கு (NRFC)

பின்வரும் தகைமையைக் கொண்டிருப்பின் நீங்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
 • நீங்கள் ஒரு இலங்கை பிரஜையாக இருந்துகொண்டு வெளிநாட்டில் தொழில் புரிந்தால் அல்லது,
 • வெளிநாட்டில் தொழில் புரிந்து விட்டு இலங்கை திரும்பிய பின்னர் 90 நாட்களுக்குள் அல்லது,
 • இலங்கையில் பிறந்த, தற்போது இலங்கை பிரஜை அல்லாமல் இலங்கைக்கு வெளியில் வசிக்கும் ஒருவராக இருந்தால் அல்லது,
  (Who had at one time been a Sri Lankan National).
 • ஏற்கனவே கொண்டுள்ள வதியாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்கிலிருந்து பணத்தை மாற்றம் செய்யும் போது
கணக்கின் வகைகள்
 • சேமிப்பு கணக்கு
 • நடைமுறைக் கணக்கு (டெபிட் அட்டை உண்டு / காசோலைப் புத்தகம் கிடையாது)
 • நிலையான வைப்பு
தேவைப்படும் ஆவணங்கள்
 • செல்லுபடியாகும் கடவுச்சீட்டு
 • தொழிலை உறுதிப்படுத்தும் ஆவணம்
 • குடியகல்வு வீசா
நாம் ஏற்றுக்கொள்ளும் வெளிநாட்டு நாணயங்கள்
 • அமெரிக்க டொலர்
 • ஸ்ரேலிங் பவுண்டு
 • யூரோ
விசேட வெளிநாட்டு முதலீட்டு வைப்புக் கணக்கு (SFIDA)

Special Foreign Investment Deposit Account (SFIDA) – 

விசேட வெளிநாட்டு முதலீட்டு வைப்புக் கணக்கு.

பின்வரும் தகைமைகளைக் கொண்டிருப்பின் நீங்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியும்
 • இலங்கைக்கு வெளியிலுள்ள ஒரு தனிநபர் அல்லது நிறுவனம்/இலங்கைக்கு வெளியில் வசிக்கும் இலங்கைப் பிரஜை
 • வெளிநாட்டு பிரஜை ஒருவர் அல்லது
 • இலங்கைக்கு வெளியில் வசிக்கும் இலங்கைப் பிரஜை ஒருவர் அல்லது,
 • இலங்கைக்கு வெளியில் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு நிறுவனம் அல்லது,
 • வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்
கணக்கின் வகைகள்
 • குறிப்பிடப்பட்ட வெளிநாட்டு நாணங்கள் அல்லது இலங்கை ரூபாவில் மேற்கொள்ளப்படுகின்ற நேர வைப்புக்கள் அல்லது சேமிப்பு கணக்குகள்
பாதுகாப்பு முதலீட்டுக் கணக்கு

Security Investment Account (SIA) – 

பாதுகாப்பு முதலீட்டுக் கணக்கு

 

பின்வரும் தகைமைகளைக் கொண்டிருப்பின் நீங்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
 • வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர் அல்லது,
 • இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஒரு நிறுவனம் அல்லது,
 • இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியில் வசிக்கும் வெளிநாட்டு பிரஜை அல்லது,
 • இலங்கையில் வசிக்காத இலங்கைப் பிரஜை அல்லது,
 • வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளும் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டுள்ள ஒருவர்.
கணக்கின் வகைகள்
 • சேமிப்பு கணக்கு
 • நடைமுறைக் கணக்கு
  (இலங்கை ரூபாவில் அல்லது குறிப்பிடப்பட்ட வெளிநாட்டு நாணயங்களில்)
வதிவோர் வெளிநாட்டு நாணயக் கணக்கு

Resident Foreign Currency Account (RFCA) –

வதிவோர் வெளிநாட்டு நாணயக் கணக்கு

பின்வரும் தகைமையைக் கொண்டிருப்பின் நீங்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும்
 • நீங்கள் இலங்கையில் வசிக்கும் ஒருவராக இருத்தல்.
கணக்கின் வகைகள்
 • நடைமுறைக் கணக்கு (டெபிட் அட்டை உண்டு / காசோலைப் புத்தகம் கிடையாது)
 • சேமிப்புக் கணக்கு
 • நேர வைப்புக்கள்
நாணயங்கள்
 • அமெரிக்க டொலர் (USD).
 • ஸ்ரேலிங் பவுண்டு (GBP).
 • யூரோ (EUR).
குறைந்தபட்ச வைப்பு
 • 100 அமெரிக்க டொலர் அல்லது அதற்கு சமமான தொகை
இலங்கையில் வசிக்கும் இலங்கைப் பிரஜை அல்லாதவர்களுக்கான வெளிநாட்டு நாணயக் கணக்கு

Resident Non-National Foreign Currency Account (RNNFC) – 

இலங்கையில் வசிக்கும் இலங்கைப் பிரஜை அல்லாதவர்களுக்கான வெளிநாட்டு நாணயக் கணக்கு

பின்வரும் தகைமைகளைக் கொண்டிருப்பின் நீங்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும்
 • தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ வதிவிட/தொழில் வீசாவில் இலங்கையில் வசிக்கும் இலங்கைப் பிரஜை அல்லாத ஒருவராக இருத்தல் வேண்டும்.
கணக்கின் வகைகள்
 • நடைமுறைக் கணக்குகள் (டெபிட் அட்டை உண்டு / காசோலைப் புத்தகம் கிடையாது)
 • சேமிப்புக் கணக்குகள்
 • நேர வைப்புக்கள்
நாணயங்கள்
 • அமெரிக்க டொலர் (USD).
 • ஸ்ரேலிங் பவுண்டு (GBP).
 • யூரோ (EUR).
வெளிநாட்டு நாணய ஊக்குவிப்பு

3 மாத நிலையான வைப்பு (அமெரிக்க டொலர்) – 3.25% வருடாந்த வட்டி

அடுத்தது என்ன?

உங்களை  வருத்தி நீங்கள் உழைத்த வெளிநாட்டு நாணயத்தை இது வரை இல்லாத வகையில் சேமித்து அதனைப் பெருக்குவதற்கு நாம் உதவுகின்றோம். ஆகவே இன்றே அதற்கு விண்ணப்பியுங்கள், எம்மை அழையுங்கள் அல்லது எம்முடன் உரையாடுங்கள்.

கார்கில்ஸ் வங்கி உங்களை வரவேற்கின்றது…
கார்கில்ஸ் வங்கி வழங்கும் வியக்கவைக்கும் வங்கிச்சேவைகளை அனுபவியுங்கள்

உங்களை நாமும் அறிந்துகொள்வோம்!
cargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.
OR
Inquiry Form