முகப்பு // Personal
கார்கில்ஸ் அட்டைகள்
Control
is in your hands
011 7 640 640

EMV இணக்கப்பாட்டு Chip மற்றும் PIN தொழில்நுட்பத்துடன்
இலங்கையில் முதன்முறையாக அறிமுகமாக்கப்பட்டுள்ள
தொடுகையின்றிய பற்று அட்டை (Debit Card) உங்களுக்கு மிகச் சிறந்த
சௌகரியத்தை வழங்குகின்றது.

நாங்கள் உங்களுக்கு வழங்குவது

தொடுகையின்றிய கொடுப்பனவுத் தொழில்நுட்பத்துடன் விரைவான

மற்றும் இலகுவாக பொருட்களைக் கொள்வனவு செய்யும் வசதி
மகத்தான பாதுகாப்பிற்கு EMV இணக்கப்பாட்டு Chip மற்றும் PIN
தொழில்நுட்பம்

3,000 இற்கும் மேற்பட்ட LankaPay உடன் இணைக்கப்பட்ட ATM
மையங்கள் மற்றும் சர்வதேசரீதியாக Cirrus, Maestro மற்றும் Mastercard
வலையமைப்புக்கள் மூலமாக 1 மில்லியனுக்கும் மேற்பட்ட ATM
மையங்களை உபயோகிக்கும் வசதி

38 மில்லியனுக்கும் மேற்பட்ட Mastercard விற்பனை மையங்களில் உபயோகிக்கும் வசதி

நீங்கள் கொடுக்கல்வாங்கல் செய்யும் வேளைகளில் SMS மூலமாக அவை உடனுக்குடன் அறியத்தரப்படல்

நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை

1. கட்டண விபர வழிகாட்டி

2. நிபந்தனைகள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

பற்று அட்டையைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறை
உங்களுடைய அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கு உங்களுக்கு அருகாமையில் உள்ள கார்கில்ஸ் வங்கிக் கிளைக்கு நேரடியாகச் சென்று எளிமையான விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து அதனைக் கையளிக்கவும். உங்களது பிரத்தியேக பற்று அட்டை (Debit Card)
மிகவும் விரைவாக உங்களது முகவரிக்கு நேரடியாக விநியோகிக்கப்படும்.
பொதுவாக எழுகின்ற வினாக்கள்

1.“கார்கில்ஸ் வங்கி மாஸ்டர் டெபிட் ஷாப்பிங் அட்டையை” எவ்வாறு பெற்றுக்கொள்வது?

நீங்கள் இதுவரை கார்கில்ஸ் வங்கியில் கணக்கு ஒன்றினை ஆரம்பிக்காதிருந்தால் கார்கில்ஸ் வங்கியில் கணக்கினை ஆரம்பிக்கும் விண்ணப்பத்தில் மாஸ்டர் டெபிட் ஷாப்பிங் அட்டைக்கு நீங்கள் வேண்டுகோள் விடுக்க முடியும். ஏற்கனவே உள்ள கணக்கின் சார்பில் மாஸ்டர் டெபிட் ஷாப்பிங் அட்டைக்கு வேண்டுகோள் விடுக்கின்றீர்கள் எனில் எந்தவொரு கார்கில்ஸ் வங்கிக் கிளைக்கும் நேரடியாகச் சென்று அதனை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

 

2.“கார்கில்ஸ் வங்கி மாஸ்டர் டெபிட் ஷாப்பிங் அட்டை” என்பது யாது?

உங்களுடைய கார்கில்ஸ் வங்கி மாஸ்டர் டெபிட் ஷாப்பிங் அட்டையானது உங்களுடைய கார்கில்ஸ் வங்கிக் கணக்கினை சர்வதேசரீதியாக எங்கிருந்தும் செயல்படுத்த உதவுகின்ற ஒரு அட்டையாகும். உங்களுடைய அட்டையை உபயோகித்து கொள்வனவுகள், ஷாப்பிங், பாவனைக் கட்டணப் பட்டியல் ஆகியவற்றிக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடிவதுடன், ATM இயந்திரங்கள் மூலமாக பணத்தை மீளப்பெறவும் முடியும்.

 

3.“கார்கில்ஸ் வங்கி மாஸ்டர் டெபிட் ஷாப்பிங் அட்டைக்கு” சேவைக்கட்டணங்கள் ஏதேனும் அறவிடப்படுகின்றனவா?

 

கட்டணத்தின் வகை                                          கட்டணம்

இணைந்து கொள்வதற்கான கட்டணம்    இலவசம்

மீள்-விநியோக கட்டணம்                   பிளாட்டினம் – ரூபா. 300/-, வேர்ல்ட் – ரூபா. 500/-

வருடாந்த கட்டணம்                             பிளாட்டினம் – ரூபா. 300/-, வேர்ல்ட் – ரூபா. 500/-

 

4.கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளுக்கு “கார்கில்ஸ் வங்கி மாஸ்டர் டெபிட் ஷாப்பிங் அட்டையை” எவ்வாறு தொழிற்படுத்திக் கொள்வது?

0117 – 640640 என்ற இலக்கத்தினூடாக எமது 24 மணி நேர வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொண்டு உங்களது “கார்கில்ஸ் வங்கி மாஸ்டர் டெபிட் ஷாப்பிங் அட்டையை” இலகுவாகத் தொழிற்படுத்திக் கொள்ள முடியும்.

 

5.கார்கில்ஸ் வங்கியில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் இருக்கும் பட்சத்தில் “கார்கில்ஸ் வங்கி மாஸ்டர் டெபிட் ஷாப்பிங் அட்டை” மூலமாக அவற்றுள் எந்தக் கணக்கை அடைந்து கொள்ள முடியும்?

உங்களது மாஸ்டர் டெபிட் ஷாப்பிங் அட்டையுடன் உங்களது கணக்குகளை இணைத்துக் கொள்ள முடியும். எந்தவொரு கார்கில்ஸ் வங்கி ATM அல்லது LankaPay வலையமைப்பு அடங்கலாக எந்தவொரு மாஸ்டர்காட் ஏற்புடைய ATM மூலமாக அடைந்துகொள்ளும் வகையில் ஒரு முதன்மை சேமிப்புக் கணக்கையும், ஒரு முதன்மை நடைமுறைக் கணக்கையும் நீங்கள் நியமிக்க முடியும். எனினும் விற்பனை நிலையங்களில் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு நீங்கள் ஒரு கணக்கை மட்டுமே நியமிக்க முடியும். எழுத்து மூலமான கோரிக்கையை முன்வைப்பதன் மூலமாக எந்தவொரு கார்கில்ஸ் வங்கிக் கிளையிலும் இந்த கணக்குகளை நியமிக்கும் ஏற்பாட்டை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

 

6.“கார்கில்ஸ் வங்கி மாஸ்டர் டெபிட் ஷாப்பிங் அட்டையை” எங்கு உபயோகிக்க முடியும்?

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மாஸ்டர்காட் ஏற்புடைய எந்தவொரு விற்பனை நிலையத்திலும் கொள்வனவுகளின் போது இந்த டெபிட் அட்டையை உபயோகிக்க முடியும்.

எந்தவொரு கார்கில்ஸ் வங்கி ATM அல்லது உள்நாட்டில் LankaPay வலையமைப்பின் கீழான ATM மற்றும் சர்வதேசரீதியாக மாஸ்டர்காட் ஏற்புடைய அனைத்து ATM இயந்திரங்களிலும் இந்த பற்று அட்டையை (Debit Card) உபயோகிக்க முடியும்.

 

 

7.“கார்கில்ஸ் வங்கி மாஸ்டர் டெபிட் ஷாப்பிங் அட்டை” மூலமான கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளின் போது கையொப்பம் இட வேண்டுமா அல்லது PIN இலக்கத்தை பதிவு செய்ய வேண்டுமா?

ATM மூலமான அனைத்து கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளுக்கும் PIN இலக்கத்தை பதிவு செய்ய வேண்டும். விற்பனை நிலையங்களில் கொடுப்பனவுகளை செலுத்துவதற்கு உபயோகிக்கும் போது மட்டுமே நீங்கள் கையொப்பத்தை இட வேண்டியுள்ளது. உங்களது மாஸ்டர் டெபிட் ஷாப்பிங் அட்டை உங்களது கைகளுக்கு கிடைக்கப்பெற்றவுடன் அதில் கையொப்பமிட வேண்டிய கட்டத்தில் நீங்கள் கையொப்பமிட்டுக்கொள்வதை உறுதி செய்து கொள்ளுங்கள். கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடாக சில விற்பனை நிலையங்களில் PIN இலக்கத்தைப் பதிவு செய்யுமாறு கோரப்படலாம்.

 

 

8.“கார்கில்ஸ் வங்கி மாஸ்டர் டெபிட் ஷாப்பிங் அட்டை” தற்போது Chip ஒன்றைக் கொண்டுள்ளமைக்கான காரணம் என்ன?

உங்களது தனிப்பட்ட தகவல் விபரங்களின் அந்தரங்கத்தைப் பேணுவதில் மாஸ்டர் டெபிட் ஷாப்பிங் அட்டை மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. Chip இசைவாக்கம் கொண்ட முனையத்தில் உபயோகிக்கப்படும் போது உங்களது அட்டையுடன் தொடர்புபட்ட தகவல் விபரங்களுக்கு மகத்தான அளவில் பாதுகாப்பினை அது வழங்குவதுடன், உலகெங்கிலும் விற்பனை நிலையங்களில் விரும்பி ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

9.தொடுகையின்றிய கொடுக்கல்வாங்கல் நடவடிக்கை எனப்படுவது யாது?

உங்களுடைய அட்டையை முனையத்தினுள் நுழைக்காது, தொடுகையின்றிய கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அட்டையை முனையத்திற்கு அருகில் கொண்டுவருவதன் மூலமாக அட்டையின் விபரங்களை முனையம் உள்ளெடுத்து உங்களுடைய கொடுக்கல்வாங்கல் நடவடிக்கையை நடைமுறைப்படுத்தும். கொள்வனவை மேற்கொள்ளும் போது மூன்றாம் தரப்பிடம் உங்களது அட்டையை கையளிக்கும் ஆபத்திலிருந்து இது உங்களை விடுவிக்கின்றது. தொடுகையின்றிய கொடுக்கல்வாங்கல் தொடர்பில் ஒவ்வொரு கொடுக்கல்வாங்கல் நடவடிக்கையின் தொகையும் ரூபா 5,000/- வரையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

10.“கார்கில்ஸ் வங்கி மாஸ்டர் டெபிட் ஷாப்பிங் அட்டை” தொலைந்து போனால் அல்லது களவாடப்பட்டால் என்ன செய்வது?

உங்களுடைய மாஸ்டர் டெபிட் ஷாப்பிங் அட்டை தொலைந்துபோனால் தயவு செய்து உடனடியாக 0117 – 646640 என்ற எமது 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை அழைப்பு நிலையத்தை தொடர்பு கொண்டு அதனை அறியத்தரவும். கார்கில்ஸ் வங்கிக் கிளைக்கு சென்றும் தொலைந்துபோன அல்லது களவாடப்பட்ட அட்டை தொடர்பில் நீங்கள் தெரியப்படுத்த முடியும்.

பற்று அட்டை (Debit Card) களவாடப்பட்டுவிட்டது என்று முறையாக அறியத்தரும் வரையில் அட்டை மூலமாக மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளுக்கும் வாடிக்கையாளரே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். அதனால், தொலைந்துபோன அல்லது களவாடப்பட்ட அட்டை தொடர்பில் வங்கியின் வாடிக்கையாளர் சேவை அழைப்பு நிலையத்திற்கு அல்லது வங்கிக்கு உடனடியாக அறியத்தருமாறு வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகின்றது.

 

 

11.“கார்கில்ஸ் வங்கி மாஸ்டர் டெபிட் ஷாப்பிங் அட்டை” மூலமாக ATM இயந்திரங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் மேற்கொள்ளக்கூடிய கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளின் தினசரி உச்ச எல்லை எவ்வளவு?

பிளாட்டினம் அட்டை

ATM மூலமாக மீளப்பெறக்கூடிய பணத்தின் உச்ச எல்லை ரூபா 80,000

விற்பனை நிலைய கொடுப்பனவுகளின் உச்ச எல்லை – ரூபா 150,000

வேர்ல்ட் அட்டை

ATM மூலமாக மீளப்பெறக்கூடிய பணத்தின் உச்ச எல்லை ரூபா 100,000

விற்பனை நிலைய கொடுப்பனவுகளின் உச்ச எல்லை – ரூபா 200,000

 

 

12.“கார்கில்ஸ் வங்கி மாஸ்டர் டெபிட் ஷாப்பிங் அட்டையின்” CVV இலக்கம் எனப்படுவது யாது?

மாஸ்டர் ஷாப்பிங் அட்டையின் பின்புறத்தில் கையொப்பம் இட வேண்டிய கட்டத்தின் முடிவிலுள்ள இறுதி மூன்று இலக்கங்களே அட்டையை சரிபார்க்கும் பெறுமானம் (CVV) எனப்படுகின்றது. CVV இலக்கத்தை மூன்றாம் தரப்பினருக்கு வெளிப்படுத்த வேண்டாம் என வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகின்றது.

 

 

13.“கார்கில்ஸ் வங்கி மாஸ்டர் டெபிட் ஷாப்பிங் அட்டை” தொடர்பான பிரச்சனைகள் அல்லது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதற்கு யாரைத் தொடர்பு கொள்வது?

எமது 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை இலக்கமான 0117 – 640 640 இனைத் தொடர்பு கொண்டோ அல்லது எந்தவொரு கார்கில்ஸ் வங்கிக் கிளைக்கும் நேரடியாக செல்வதன் மூலமாகவோ அதனைத் தீர்த்துக்கொள்ள முடியும்.

 

14.“கார்கில்ஸ் வங்கி மாஸ்டர் டெபிட் ஷாப்பிங் அட்டையின்” ATM இயந்திர PIN இலக்கத்தை மாற்றம் செய்து கொள்ள முடியுமா?

ஆம், எமது எந்தவொரு கார்கில்ஸ் வங்கி ATM இயந்திரங்களையும் உபயோகித்து உங்களுடைய ATM இயந்திர PIN இலக்கத்தை மாற்றம் செய்து கொள்ள முடியும்.

 

 

15.“கார்கில்ஸ் வங்கி மாஸ்டர் டெபிட் ஷாப்பிங் அட்டைக்கு” புதிய ATM இயந்திர PIN இலக்கமொன்றை எவ்வாறு பெற்றுக்கொள்வது?

ஆம். நீங்கள் வாடிக்கையாளர் சேவை அழைப்பு நிலையத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு புதிய PIN ஒன்றைக் கோர முடியும். வங்கியில் பதிவுசெய்யப்பட்டுள்ள வாடிக்கையாளரின் மொபைல் இலக்கத்திற்கு காற்று மூலமான குறியீடு (OTAC) அனுப்பி வைக்கப்படும். எந்தவொரு கார்கில்ஸ் வங்கி ATM இயந்திரம், Cargills Cash மொபைல் வங்கிச்சேவை விண்ணப்பம் அல்லது இணைய வங்கிச்சேவை விண்ணப்பத்தின் மூலமாக PIN இலக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு OTAC உபயோகிக்கப்படல் வேண்டும்.

 

16.“கார்கில்ஸ் வங்கி மாஸ்டர் டெபிட் ஷாப்பிங் அட்டை” வெகு விரைவில் காலாவதியாகவுள்ளது. புதிய மாஸ்டர் டெபிட் ஷாப்பிங் அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டுமா?

அட்டையின் காலாவதி திகதிக்கு முன்பதாக பதில் அட்டை உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

 

 

17.“கார்கில்ஸ் வங்கி மாஸ்டர் டெபிட் ஷாப்பிங் அட்டையின்” ATM இயந்திர PIN இலக்கம் முடக்கப்பட்டால் பின்பற்ற வேண்டிய நடைமுறை யாது?

PIN இலக்கம் 3 தடவை தவறாக பதிவு செய்யப்படுதல் போன்ற பாதுகாப்பு நோக்கங்களுக்காக மட்டுமே ATM இயந்திர PIN இலக்கம் முடக்கப்படும். புதிய PIN இலக்கமொன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கு வாடிக்கையாளர் சேவை நிலையத்தை அழைத்து புதிய OTAC குறியீட்டைப் பெற்று அதன் மூலமாக நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

 

 

18.சேதமடைந்த “கார்கில்ஸ் வங்கி மாஸ்டர் டெபிட் ஷாப்பிங் அட்டைக்கு” பதிலாக வேறு அட்டையை எவ்வாறு பெற்றுக்கொள்வது?

தயவுசெய்து உங்களுக்கு அருகாமையிலுள்ள கார்கில்ஸ் வங்கிக் கிளைக்கு விஜயம் செய்யுங்கள்.

 

 

19. புதிதாக விண்ணப்பித்த “கார்கில்ஸ் வங்கி மாஸ்டர் டெபிட் ஷாப்பிங் அட்டையின்” நிலைமை தொடர்பில் எவ்வாறு அறிந்துகொள்வது?

எமது 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை இலக்கமான 0117 – 640 640 இனைத் தொடர்பு கொள்ளவு

கார்கில்ஸ் வங்கி உங்களை வரவேற்கின்றது!
கார்கில்ஸ் வங்கி வழங்கும் வியக்கவைக்கும் வங்கிச்சேவைகளை அனுபவியுங்கள்
உங்களை நாமும் அறிந்துகொள்வோம்!
cargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.
OR
Inquiry Form