முகப்பு // Personal // Loans
அயோமி மகளிர் தொழில்முனைவோர் கடன்
011 7 640 640
அறிமுகம்

பெண் தொழில்முயற்சியாளர்களுக்கான “அயோமி” கடன் திட்டமானது, இலங்கை முழுவதுமுள்ள பெண்களினால் தலைமை தாங்கி நடாத்தப்படும் நுண் வணிகங்கள் மற்றும் சிறு அளவிலான வணிகங்களை வலுப்படுத்துவதற்கான ஒரு மூலோபாய நிதிச் சேர்ப்புத் தயாரிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்தயாரிப்பானது, நிலையான தொழில்முயற்சி மற்றும் சமூக அபிவிருத்தி ஆகியவற்றை உறுதிப்படுத்தும் அதேவேளை, கட்டுப்படியாகும் நிதியுதவி மற்றும் மேம்பட்ட அணுகல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இலக்குச் சந்தை மற்றும் தகைமை

இலக்குத் தொகுதி

  • நுண் மற்றும் சிறு மட்டத்தில் பெண்களை உரிமையாளராகக் கொண்ட / பெண்களினால் தலைமை தாங்கி நடாத்தப்படும் அனைத்து வணிகங்கள்.
  • இத்தயாரிப்பானது சேவைத் துறை (கல்வி, சுற்றுலா, சுகாதாரம், நலவாழ்வு போன்றவை) மற்றும் உற்பத்தித் துறை (விவசாயம், உணவு பதப்படுத்துதல், தையல் கலை, கைவினைப் பொருட்கள் போன்றவை) உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கியதாகும்.
பெண்களினால் தலைமை தாங்கி நடாத்தப்படும் வணிகத்திற்கான வரைவிலக்கணம் (இலங்கை மத்திய வங்கியின் படி)

பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் வணிகங்கள் பெண்களினால் வழிநடத்தப்படும் வணிகமாகக் கருதப்படும்:

அ) 50% க்கும் அதிகமான உரிமையை பெண்கள் கொண்டிருத்தல். அல்லது

ஆ) பின்வரும் மூன்று அளவுகோல்களையும் பூர்த்தி செய்யும் வணிகங்கள்:

  1. 20% அல்லது அதற்கு மேற்பட்ட உரிமையைப் பெண்கள் கொண்டிருத்தல், மற்றும்
  2. முக்கிய தீர்மானம் எடுப்பவராக குறைந்தபட்சம் ஒரு பெண் இருத்தல், மற்றும் III. பணிப்பாளர் சபை காணப்படும் இடங்களில், அச்சபையில் 30% அல்லது அதற்கு மேற்பட்டோர் பெண்களாக இருத்தல்.
வகைப்படுத்துதல்

கட்டமைக்கப்பட்ட தொழில்முயற்சியாளர்கள் (Structured Entrepreneurs): செல்லுபடியாகும் வணிகப் பதிவு மற்றும் முறையான முகாமைத்துவப் பதிவுகளைக் கொண்டிருத்தல், நன்கு கட்டமைக்கப்பட்ட வணிகச் செயன்முறைகளுடன் இயங்குதல் மற்றும் அடிப்படை நிதி அறிக்கைகள் அல்லது நிதிப் பதிவுகளைப் பேணி வரும் பெண் தொழில்முயற்சியாளர்களாக இருத்தல்.

ஆரம்ப நிலை தொழில்முயற்சியாளர்கள் (Grass-root Entrepreneurs):

வீட்டினை அடிப்படையாகக் கொண்டு மிகச் சிறிய அளவில் இயங்கும் உத்தியோகபூர்வமற்ற தன்மை கொண்ட மற்றும் முறையான வணிகப் பதிவு இன்றி இயங்கும் பெண் தொழில்முயற்சியாளர்கள்.

கடன் அம்சங்கள்

கடன் தொகை

  • கட்டமைக்கப்பட்ட தொழில்முயற்சியாளர்களுக்கு: ரூபா. 100,000.00 – ரூபா. 5,000,000.00
  • ஆரம்பநிலை தொழில்முயற்சியாளர்களுக்கு: ரூபா. 100,000.00 – ரூபா. 1,000,000.00
  • பணித்திட்டச் செலவில் அதிகபட்சம் 80% வழங்கப்படும்.
வட்டி வீதம்

கடன் தொகை மற்றும் கடனுக்கான காலப்பகுதியின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட வட்டி விகிதக் கட்டமைப்பிற்கு அமைய வட்டி அறவிடப்படும்.

கடன் தொகை (ரூ.)  மீள்செலுத்தற் கால எல்லை & வட்டி வீதம் (நிலையான 5 ஆண்டுகள்)
1 வருடம் வரையில் 2- 3 வருடங்கள் வரையில் 3 – 5 வருடங்கள் வரையில்
10 இலட்சத்துக்குள் 10% 10.5% 12%
10 இலட்சத்துக்கு மேல் 11% 11.5% 13%
மீள்செலுத்தல்

அதிகபட்சமாக 60 மாதங்கள் (சலுகைக்காலம் உட்பட).

சலுகைக்காலம்: 6 மாதங்கள் வரை (பணித் திட்டத்தின் தன்மைக்கேற்ப).

பிணை வழங்கல் தேவைப்பாடுகள்

ஈட்டுறுதி (Collateral): அசையும்/அசையாச் சொத்துக்கள் அல்லது பிணையாளி.

  • ரூபா 0.5 மில்லியன் வரை – 02 உத்தரவாதிகள்.
  • ரூபா 0.5 மில்லியனுக்கு மேல் 0.999 மில்லியன் வரை – குறைந்தபட்சம் 1 உத்தரவாதி மற்றும் ஒரு சாதாரண வைப்பு (Simple lodgement).
  • 1 மில்லியன் அல்லது அதற்கு மேல் – அடமானம்

வயதுத் தகைமை கடன் முதிர்வடையும் திகதியில் கடன்பெறுநரின் அதிகபட்ச வயது 65 ஆக இருத்தல் வேண்டும்.

பரிசீலனை மற்றும் வழங்கல்

பரிசீலனை நேரம்: ஆவணங்கள் முழுமையடைந்து 7 வேலை நாட்களுக்குள்.

கடன் வழங்கல்: விநியோகத்தர் அல்லது வாடிக்கையாளரின் கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்படும்.

 

மேலதிக தயாரிப்பு நன்மைகள்

கோடிபதி (Kotipathi), திரிய (Diriya) அல்லது அபிமானி (Abhimani) சேமிப்புக் கணக்கினைத் திருப்திகரமான முறையில் பேணி வரும் விண்ணப்பதாரர்கள், தமது கடன் வசதிக்கு விதிக்கப்படும் நிலையான வட்டி வீதத்திலிருந்து 0.25% வட்டி குறைப்பினைப் பெறத் தகுதியுடையவர்களாவர். திருப்திகரமான கணக்கு என்பது பின்வருமாறு அமைய வேண்டும்:

  • கோடிபதி அல்லது திரிய கணக்கு: கடன் அங்கீகாரத்திற்கு முன்னதாக குறைந்தது 6 மாதங்கள் செயற்பாட்டில் இருத்தல் வேண்டும்.
  • அபிமானி கணக்கு: குறைந்தபட்ச மாதாந்த மீதி ரூபா. 10,000.00 ஆக இருத்தல் வேண்டும் மற்றும் குறைந்தது 1 வருடம் செயற்பாட்டில் அக்கணக்கு இருத்தல் வேண்டும். அத்துடன் கணக்கில் வழமையான கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற வேண்டும்.

“பொடிஹிட்டியோ” (Podihitiyo) சிறுவர் சேமிப்புக் கணக்கு:

அயோமி கடன்பெறுநரின் பிள்ளைகளுக்காக இக்கணக்குகள் ஆரம்பிக்கப்படும். இது குடும்பத்திற்குள் முற்கூட்டிய நிதி ஒழுங்குமுறைமையையும் எதிர்காலத்தை நோக்கிய சேமிப்பையும் ஊக்குவிக்கும்.

கிராமத்திலிருந்து வீட்டிற்கு” எனும் திட்டத்தில் பங்குபற்றுதல்:

தகுதியுள்ள பெண் தொழில்முயற்சியாளர்கள் “கிராமத்திலிருந்து வீட்டிற்கு” எனும் தளத்திற்கான அணுகலைப் பெறுவர். இதன் மூலம் கார்கில்ஸ் விற்பனை நிலையங்களில் தமது தயாரிப்புகளை நேரடியாக விளம்பரப்படுத்தவும், நீண்டகால வணிக அறிமுகத்தைப் பெறவும் முடியும்.

 

வணிக விபரம் பற்றிய விளம்பரம்:

வெற்றிகரமான கடன்பெறுநர்களை வங்கியின் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களில் காட்சிப்படுத்துவதன் மூலம் அவர்களது வணிகங்களுக்கு இலவச சந்தைப்படுத்தல் மற்றும் நம்பகத்தன்மை வழங்கப்படும்.

5 நிதி அறிவு மற்றும் வணிகத் திறன் மேம்பாடு:

கணக்கேடு பேணல், நிதித் திட்டமிடல் மற்றும் டிஜிட்டல் வங்கி அறிவு ஆகியவற்றை மேம்படுத்த, விவசாய மற்றும் நுண் நிதிப் பிரிவின் ஊடாகத் தொடர்புடைய தரப்பினருடன் இணைந்து தொடர்ச்சியான பயிற்சித் திட்டங்கள் ஒழுங்கு செய்யப்படும்.

ஆவணத் தேவைப்பாடுகள்

அயோமி” கடன் திட்டத்தின் கீழான அனைத்து விண்ணப்பங்களுக்கும் பொதுவான கட்டாய ஆவணங்கள் மற்றும் தயாரிப்பு சார்ந்த விசேட ஆவணங்கள் ஆகியவற்றுடன் இணைத்து சமர்ப்பிக்கப்பட வேண்டும்:

பொதுவான தேவைகள்

விண்ணப்பதாரருக்காக DTAP காப்புறுதி பெறப்பட்டு, அது கார்கில்ஸ் வங்கியின் பெயருக்கு மாற்றப்பட வேண்டும். வசதியை செயற்படுத்துவதற்குத் தேவையான ஏனைய அனைத்து ஆவணங்களும் நடைமுறையிலுள்ள கடன் கொள்கைகளுக்கு இணங்கப் பெறப்பட வேண்டும்.

தயாரிப்பு சார்ந்த விசேட தேவைகள்

 கட்டமைக்கப்பட்ட தொழில்முயற்சியாளர்களுக்கு

  • செல்லுபடியாகும் வணிகப் பதிவுச் சான்றிதழ் (BR).
  • குறைந்தபட்சம் 1 வருடம் வணிகச் செயற்பாட்டில் ஈடுபட்டு வருதல்.
  • நிதிப் பதிவுகள் அல்லது முகாமைத்துவ கணக்குகளைச் சமர்ப்பித்தல்.
  • பெற்றுள்ள கடன்கள் பற்றிய மீளாய்வு.
  • கடன் வழங்கப்படுவதற்கு முன்னர் செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) அவசியமாகும். TIN இல்லாத வாடிக்கையாளர்கள் ஆரம்பக் கட்டத்திலேயே அதனைப் பதிவு செய்வதற்கான உதவி அவர்களுக்கு வழங்கப்படும். செல்லுபடியாகும் TIN இலக்கம் அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய சான்று ஆவணம் இன்றி கடன் வழங்கப்படமாட்டாது.
செல்லுபடியாகும் வணிகப் பதிவுச் சான்றிதழ் (BR). • குறைந்தபட்சம் 1 வருடம் வணிகச் செயற்பாட்டில் ஈடுபட்டு வருதல். • நிதிப் பதிவுகள் அல்லது முகாமைத்துவ கணக்குகளைச் சமர்ப்பித்தல். • பெற்றுள்ள கடன்கள் பற்றிய மீளாய்வு. • கடன் வழங்கப்படுவதற்கு முன்னர் செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) அவசியமாகும். TIN இல்லாத வாடிக்கையாளர்கள் ஆரம்பக் கட்டத்திலேயே அதனைப் பதிவு செய்வதற்கான உதவி அவர்களுக்கு வழங்கப்படும். செல்லுபடியாகும் TIN இலக்கம் அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய சான்று ஆவணம் இன்றி கடன் வழங்கப்படமாட்டாது.
  • கார்கில்ஸ் வங்கியில் ஒரு சேமிப்புக் கணக்கைக் கொண்டிருத்தல் வேண்டும் (அபிமானி சேமிப்புக் கணக்கு வைத்திருப்பது விரும்பத்தக்கது).
  • வணிக வருமானத்தை எடுத்துக்காட்டும் வகையில் குறைந்தது 6 மாதங்கள் கணக்கில் தொடர்ச்சியான வைப்புகளைச் செய்திருத்தல் வேண்டும்.
  • கார்கில்ஸ் வங்கியின் கணக்கு ஊடாக வரும் வருமானம் ஆரம்பக் கடன் மதிப்பீட்டிற்குப் பயன்படுத்தப்படும்.
  • வணிகம் செயலில் இருத்தல் வேண்டும் (வீட்டினை அடிப்படையாகக் கொண்ட வணிகமாக, நுண் நிலை வணிகமாக, சந்தையை அடிப்படையாகக் கொண்ட வணிகமாக, சேவை அல்லது உற்பத்திசார் வணிகமாக).
  • கடன் வழங்கப்படுவதற்கு முன்னர் செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) அவசியமாகும். TIN இல்லாத வாடிக்கையாளர்கள் ஆரம்பக் கட்டத்திலேயே அதனைப் பதிவு செய்ய உதவி வழங்கப்படும். செல்லுபடியாகும் TIN இலக்கம் அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய சான்று ஆவணம் இன்றி கடன் வழங்கப்படமாட்டாது.

 

கார்கில்ஸ் வங்கி உங்களை வரவேற்கின்றது!
கார்கில்ஸ் வங்கி வழங்கும் வியக்கவைக்கும் வங்கிச்சேவைகளை அனுபவியுங்கள்
உங்களை நாமும் அறிந்துகொள்வோம்!
cargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.
OR
Inquiry Form