Home //
Media Centre
We’re in the news.
Read all about it...
2025 ஆம் ஆண்டின் முதலாவது அரையாண்டினில் வரிக்குப் பின்னரான ரூ.240 மில்லியன் இலாபத்தினை ஈட்டிய கார்கில்ஸ் வங்கி
Mon, 22 Sep 2025

நிதிசார் சிறப்பம்சங்கள்

  • 2025 ஆம் ஆண்டின் முதலாவது அரையாண்டில் வரிக்கு முன்னரான இலாபம் – 158 மில்லியன் ரூபா அதிகரிப்புடன் ரூ.464 மில்லியன்
  • நிகர கட்டணம் மற்றும் தரகு வருமானமானது 55 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
  • ஏனைய உள்ளடக்க வருமானங்கள் ஊடாக நியாயப் பெறுமதியில் நிதி ஆதனங்களது மதிப்பு நீக்கத்திலிருந்தான நிகர பெறுகைகள் ரூ.83 மில்லியன்களினால் அதிகரித்துள்ளது.
  • வங்கியானது நன்கு மூலதனங் கொண்டதும் பணப்புழக்கமுடையதாகவும் காணப்பட்டது.
  • மொத்த மூலதன விகதம் 18.06%
  • திரவ உள்ளடக்க வீதமானது 174.93% ரூபாயாக காணப்பட்டதுடன்  அனைத்துப் பணங்களும் 138.68% காணப்பட்டது.
  • நிகர நிலையான நிதியளித்தல் வீதமானது  127.71% .
  • மொத்த சொத்துக்கள் 4.2 பில்லியன் ரூபாவினால் வளர்ச்சியடைந்துள்ளது.

30 ஜுன் 2025 அன்று முடிவடைந்’த ஆறு மாதங்களுக்கான கார்கில்ஸ் வங்கியின் பெறுபேறுகளானவை2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இலாபத்தில் ரூ.104 மில்லியன் அதிகரிப்பை பிரதிபலித்தது. 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் வரிக்குப் பின்னரான இலாபம் 240 மில்லியன் ஆகும். 2024 ஆம் ஆண்டின் முதலாம் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் 2025 முதலாம் அரையாண்டின் 1836 மில்லியன் ரூபா நிகர வட்டி வருமானமானது 178 மில்லியனால் அதிகரித்துள்ளது. NIM இலான குறைவானது இலங்கை மத்திய வங்கியின் கொள்கை பணிப்புகளுக்கு இணங்க சந்தை வட்டி வீதங்களிலான மெல்லிய குறைப்பினால் ஏற்பட்டதாகும். வங்கியானது சந்தை நிலைமைகளை பிரதிபலிக்க வைப்புகள் மற்றும் முற்பணங்களை மீள்விலையிடுவதிலும் NIM இனை வினைத்திறனான முறையில் முகாமைத்துவம் செய்வதிலும் தொடர்ந்தும் கவனம் செலுத்துகின்றது.

30 ஜுன் 2025 ஆம் ஆண்டுடன் முடிவடைந்த ஆறு மாதங்களுக்கான 440 மில்லியன் எனும் நிகர கட்டணங்கள் மற்றும் தரகு வருமானமானது அதற்கிணையான 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 55 மில்லியன் வளர்ச்சியாகும். வர்த்தக தொகுப்புக்களை மேம்படுத்துவதற்கான உறுதிப்படுத்தப்பட்ட முயற்சிகள், கடனுடன் தொடர்புடைய கட்டண வருமானம், அட்டை மற்றும் பெற்றுக்கொள்ளல் தொடர்புடைய கட்டண வருமானம் மற்றும் மேம்படுத்தப்பட்ட வெளிநாட்டு பணவலுப்பல்கள் வருமானம் என்பன இப்பதிவுசெய்யப்பட்ட 14% வளர்ச்சிக்கு பங்களித்த பிரதான காரணிகளாகும்.

மீளாய்விலுள்ள ஆறு மாத காலப்பகுதியில் நிதி ஆதனங்களின் மதிப்பு நீக்கங்களின் மீது பெற்றுக்கொள்ளப்பட்ட மூலதனமானது ஏனைய வருமான போக்குகளை 361 மில்லியன் ரூபாய்களை அடையும் வகையில் 83 மில்லியன் ரூபாய்களினால் வலுப்படுத்தியது. இலாபம் அல்லது நட்டம் ஊடாக நியாயப் பெறுமதியில் நிதி ஆதனங்களிலிருந்தான நிகர வருமானமானது 2025 ஆம் ஆண்டின் முதலரையாண்டில் 67 மில்லியன்களை அடையும் வகையில் 113 மில்லியன்களினால் குறைவடைந்தது. சமாந்திரமாக, 2025 ஆம் ஆண்டின் முதலரையாண்டு மொத்த ஏனைய வருமானது 477 மில்லியனை அடைந்து 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 44 மில்லியன் அல்லது 8% இனால் குறைவடைந்துள்ளது.

மொத்த செயற்பாட்டு செலவீனமானது 2024 ஆம் ஆண்டின் முதலாம் அரையாண்டின் 1,592 மில்லியன் ரூபாயிலிருந்து 2025 முதலரையாண்டில் 1,883 மில்லியன் ரூபாய்களாக 15% இனால் அதிகரித்துள்ளது. சந்தை நிலைமைகளை பிரதிபலிக்கும் முகமாக சம்பளங்களிலான மீளாய்விற்குட்பட்ட பணியாள்தொகுதியின் அதிகரிப்புடன் தனிநபர் செலவுகள் 16% இனால் அதிகரித்துள்ளன. ஏனைய செயற்பாட்டு செலவீனங்கள் கிளை வலையமைப்பு, சந்தைப்படுத்தல் மற்றும் தொழிற்சார் நிபுணத்துவ கட்டணங்கள் உள்ளிட்ட நிர்வாக செலவுகளின் காரணமாக 19% இனால் அதிகரித்தது. 66.59% எனும் வங்கியின் வருமானத்திற்கான செலவு விகிதமானது 2024 இன் 58.23% இலிருந்தான அதிகரிப்பினை பிரதிபலித்தது.

கடன் பெறுநர்களின் நிலையினை கவனமாக பகுப்பாய்தலும் மேம்படுத்தப்பட்ட பேரினப் பொருளாதார சூழலை கருத்திற்கொள்ளலும் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் பெறுபேறுகள் என்பவற்றினால், குறைநிரப்பு கட்டணங்கள் 180 மில்லியன்களாக காணப்பட்டதுடன், 2024 முதலாமரையாண்டிலான 440 மில்லியன் ரூபாவிலிருந்து 59% குறைவினையும் பிரதிபலித்தது. வங்கியின் கட்டம் 3 கடன்கள் (கட்டம் 3 குறைநிரப்பின் நிகரம்) மொத்தக் கடன்கள் விகிதத்தில் 7.85% ஆக நின்றதுடன் கட்டம் 3 இன் வழங்கல்கலானது 2025 ஜுன் 30 அன்றளவில் 45.04% இனை உள்ளடக்கியிருந்தது.

வங்கியானது இலங்கை மத்திய வங்கியினால் பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச தேவைப்பாடுகளுக்குள்ளான மூலதன போதுமான தன்மை மற்றும் திரவ சொத்துக்களின் விகிதத்தை நன்குப் பேணியிருந்தது. மொத்த மூலதன விகிதமானது 18.06% ஆக நின்றதுடன் அனைத்து திரவநிலை தொடர்புடைய விகிதங்களையும் குறைந்தபட்ச ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளை விட அதிகமாக இருந்தது.

30 ஜுன் 2025 அன்றளவில் வங்கியின் மொத்த சொத்துக்களானது 84.5 பில்லியன் ரூபாய்களாக காணப்பட்டதுடன் 2025 முதலாமரையாண்டின் போது 4.2 பில்லியன் அல்லது 5% அதிகரிப்பினை பிரதிபலித்தது. 46.1 ரூபாவிலிருந்து 56.4 பில்லியன் ரூபா எனும் 10.3 பில்லியன் அல்லது 22% வளர்ச்சியினை வெளிப்படுத்தியிருந்தமையானது எமது முன்னிலைகளின் பாராட்டத்தகுந்த செயற்பாடுகளுக்கு சான்றாக விளங்கியது. ஏனைய உள்ளடக்கிய வருமானம் ஊடான நியாய பெறுமதியில் அளவிடப்பட்ட நிதிச் சொத்துக்களானவை 4.6 பில்லியன் அல்லது 20% வீழ்ச்சியடைந்து 17.8 பில்லியன் ரூபாய்களை அடைந்தது. அதிகரிக்கப்பட்ட கடன் தேவைப்பாடுகள் தொடர்பில் கடன் புத்தக வளர்ச்சிக்கு நிதியளிக்க அதனது செயற்பாடுகளை பகுதியளவில் மறுஒதுக்கீடு செய்திருந்தது. இலாபம் அல்லது நட்ட பெறுகைகளின் பகுதிகள் மற்றும் முதிர்ச்சியினை அணுகும் மற்றொரு பகுதியின் சுருக்கங்களின் பேறாக ஏனைய உள்ளடக்க வருமானங்கள் ஊடான நியாயப் பெறுமதியிலான மற்ற உள்ளடக்கம் ஊடான வருமானமான ஒதுக்கானது 30 ஜுன் 2025 அன்றளவில் 297 மில்லியன் ரூபாவிற்கு வீழ்ச்சியடைந்தது. வாடிக்கையாளர் வைப்பானது 2024 ஆம் ஆண்டின் முடிவிலான 59.4 பில்லியனிலிருந்து அறிக்கையிடும் திகதியில் 58.9 பில்லியன் எனும் 1% இனால் குறிப்பிடத்தக்களவில் குறைவடைந்துள்ளது.

உங்களை நாமும் அறிந்துகொள்வோம்!
cargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.
OR
Inquiry Form