Home //
Media Centre
We’re in the news.
Read all about it...
வங்கியியல் தொலைநோக்குள்ள வங்கியாக கார்கில்ஸ் வங்கியானது தனது 11 வருடங்களை பூர்த்திசெய்கின்றது.
Wed, 6 Aug 2025

2025ஆம் ஆண்டு ஜூன் 30ம் திகதியில் தனது 11வது வருடப்பூர்த்தியை பெருமையூடன் கார்கில்ஸ் வங்கி கொண்டாடியது. கார்கில்ஸ் வங்கியானது இலங்கையில் நிதி சேவைகளுக்கான அணுகலை மீள் ஒழுங்கமைக்கும் வகையில் சகலரையூம் உள்ளடக்கிய மாற்றத்தை நோக்கிய அர்ப்பணிப்புடன் கூடிய வங்கிச் சேவையை கொண்டதாய் ஒரு தசாப்தத்தை கடந்த வங்கியாகத் தற்போது தடம்பதித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு இவ்வங்கி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து வங்கியூடன் இணைந்து கொண்ட இலங்கையர் ஒவ்வொருவரினது வாழ்விலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்வகையில் தனி இலக்கு கொண்ட வங்கியாக வளர்ச்சியடைந்து வருகின்றது. புதுமை மற்றும் அணுகல் என்பவற்றின் மீது கட்டமைக்கப்பட்டு இயங்கும் கார்கில்ஸ் வங்கியானது மக்களின் தினசரி வாழ்க்கை ஓட்டத்துடன் நெருங்கியதாக நிதி சேவைகளை மாற்றியமைக்கும் தனித்துவமான வங்கியியல் முறைமையை வழங்கியூள்ளது. நாடு முழுவதும் அமைந்துள்ள 26 கிளைகள் மற்றும் 530 க்கு மேற்பட்ட முகவர் வங்கியியல் மையங்கள் மூலம்இ வங்கிச் சேவைக்கான அணுகலை வழங்குவது மட்டுமல்லாமல்இ நகரங்கள்இ கிராமங்கள்இ தனி நபர் மற்றும் கூட்டுத்தாபனமென பல்வேறு சமூகத்துடன் தொடர்புபட்டதாய் உள்ளது.

சில்லறை மற்றும் வணிக வாடிக்கையாளர்களுக்காக திட்டமிட்டப்பட்ட தனிப்பயன் சேவைகளை இன்று கார்கில்ஸ் வங்கி வழங்குகின்றது. கார்கில்ஸ் வங்கியின் பல்பொருள் அங்காடி சேவையானது தினமும் சில்லறை வங்கிச் சேவைக்கான ஒரு வசதியான அணுகலை வழங்கும் அதேவேளையில்இ பணம் சேகரித்தல் மற்றும் மற்றும் பணத்தை முகாமை செய்வதற்கான தீர்வூகள் போன்ற கூட்டுத்தாபன சேவைகளையூம் வழங்குவதில் முக்கியமான பங்கினை கார்கில்ஸ் வங்கி வகிக்கின்றது.

இணைய வங்கி துறையில் கார்கில்ஸ் வங்கி தொடர்ந்து முதலீடு செய்து வருவதுடன்இ தனது பெறுமதியான வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பானஇ வினைத்திறனான மற்றும் நட்புறவான தளங்களை நாளாந்த பரிமாற்றங்களுக்கு வழங்குவதன் மூலம் மேலும் வலுப்படுத்தியூள்ளது. கார்கில்ஸ் வங்கியின் வெளிநாட்டுப் பணமாற்றுத் தளமானது எல்லைகளை தாண்டி குடும்ப மற்றும் பொருளாதார உறவூகளை வலுப்படுத்துவதாய் வெளிநாட்டில் இருக்கும் இலங்கையர்களுக்காக நம்பிக்கையூள்ள முறையில் பணத்தை வீட்டிற்கு அனுப்புவதற்கான ஒரு நம்பகமான தீர்வாக மாறியூள்ளதுஇ

கடந்த வருடம் புதிய சவால்கள் எதிர்நோக்கப்பட்டன. ஏனெனில் நிதித் துறையில் பல விடயங்கள் அதற்கு சவாலாக அமைந்தன. கார்கில்ஸ் வங்கி தனது விழுமியம் சார்ந்த செயற்பாடுகளை மையமாகக் கொண்டுஇ ஒரு உறுதிப்பாட்டுடன் இத்தகைய சவால்களைத் தீர்த்துக்கொண்டு வருகின்றது. மற்றும் தனது முன்னேற்றத்தில் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றது. தனது பங்குதாரர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுவதில் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றது. கடந்த 11 ஆண்டுகளாக வங்கியின் பயணம் அதன் மீள்திறனுக்குச் சான்றாக இருந்துவருகிறது. இது வெறுமனே முறைமைகள் மற்றும் கட்டமைப்புகளை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்படாமல் அதன் வாடிக்கையாளர்கள்இ பணியாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் நம்பிக்கை மற்றும் விசுவாசத்தையூம் அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது.

சிறந்த முன்னேற்றப் பயணத்தின் ஒரு பகுதியாகஇ 2024 ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் நம்பிக்கை நிறுவனங்களுக்கான விருது வழங்கும் வைபவத்தில் “இவ் ஆண்டிற்கான தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் நிறுவனம்” என்ற மெரிட் பரிசுஇ 2024 ஆம் ஆண்டுக்கான ஊயூ இலங்கை வூயூபுளு பரிசுகளில் வெள்ளிப்பரிசு மற்றும் 2023ஃ24 ஆம் ஆண்டுக்கான ளுடுஐவூயூனு மக்கள் மேம்பாட்டு பரிசில் சிறப்பு கௌரவம் என கார்கில்ஸ் வங்கி பல பிரத்தியேக கௌரவிப்புகளை பெற்றுள்ளது. இவை வங்கியின் புத்தாக்கம்இ வெளிப்படைத்தன்மைஇ மற்றும் மக்களை முன்னேற்றுதல் போன்ற வங்கியின் முயற்சியை எடுத்துக்காட்டுகின்றன.

முன்னோக்கிப் பார்க்கையில்இ கார்கில்ஸ் வங்கியானதுஇ தனிநபர்கள்இ சிறு நிறுவனங்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் ஆகியவற்றின் காலத்திற்கேற்ற தேவைகளை நிவர்த்தி செய்வதன் மூலம் இலங்கையின் பொருளாதார மீளமைப்புக்கு பங்களிப்பதில் துணைநிற்கின்றது. உறுதியான மூலதனம் மற்றும் வளர்ச்சியை நோக்கிய ஒழுக்காற்று அணுகுமுறையூடன் செயற்படுவதனூடாகஇ நாட்டின் வளர்ச்சி பயணத்தில் பாரியளவில் கார்கில்ஸ் வங்கி பங்காற்றுகின்றது. சகலரையூம் உள்ளடக்கிய அபிவிருத்தியை உருவாக்கும் பரந்தளவிலான முயற்சியில் கார்கில்ஸ் வங்கி கடந்த ஆண்டுகளில் தனது சமூக மற்றும் நிலைத்தன்மை முயற்சிகளை விரிவாக்கியூள்ளது.

வங்கி தனது இரண்டாவது தசாப்தத்தில் நுழையூம் வேளையில்இ புதுப்பிக்கப்பட்ட நோக்கத்துடன் அதைச் செய்கிறது. புதுமைஇ ஆழமான வாடிக்கையாளர் ஈடுபாடு மற்றும் இலங்கை முழுவதும் வாழ்க்கையையூம் சமூகங்களையூம் மேம்படுத்த நிதி சேவைகளின் சக்தியில் உறுதியான நம்பிக்கையை ஏற்படுத்துதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வங்கியின் முன்னோக்கிய பயணம் வடிவமைக்கப்படும்.

வங்கியின் கடந்தகாலப் பயணத்தின் பிரதிபலிப்பு தொடர்பில்இ கார்கில் வங்கியின் முகாமையாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியான செனரத் பண்டார கூறுகையில் “நமது வங்கி 11 ஆண்டுகளை பூர்த்தித்துள்ள வேளையில்இ எமது வாடிக்கையாளர்கள்இ பங்குதாரர்கள்இ மற்றும் குழுவினர் எங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கை தொடர்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். எமது பயணம் சவால்; மற்றும் முன்னேற்றத்தால் வடிவமைக்கப்பட்டது. அவை அனைத்திலும் வங்கிச்சேவையை மேலும் இணக்கமானஇ அணுகக்கூடிய மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் மாற்றுவதற்கான எமது இலக்கை நோக்கி நாம் செயற்பட்டுள்ளோம். மேலும் இலங்கையின் எதிர்காலத்திலும் ஒரு பலமான மற்றும் பொறுப்புமிக்க நிதி நிறுவனமாக இருக்க நாம் முயற்சிப்பதுடன் எமது சகோதரர்களுடன்இ ஒன்றாக இணைந்து வளர்ச்சியை கட்டியெழுப்புவதில் நாம் உறுதிபூணுவோம்”.

உங்களை நாமும் அறிந்துகொள்வோம்!
cargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.
OR
Inquiry Form