தங்காலையில் உள்ள முல்கிரிகல ரஜ மஹா விஹாரையில் நடைபெற்ற “அருணலோக பொசன் 2025” நினைவேந்தல் நிகழ்வில்இ கார்கில்ஸ் வங்கி தனது 11 வது ஆண்டு நிறைவை நீர் தானம் வழங்கி வைத்தும் நீர்த் தாங்கிகளை நன்கொடையாக அளித்தும் நினைவூ கூர்ந்தது. கார்கில்ஸ் வங்கி பொசன் தினத்தன்று பக்தர்களுக்கு குடிநீர் போத்தல்களை வழங்கியது. அத்தோடு புனித அனுஷ்டானங்களின் போது யாத்ரீகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்குத் துணைபுரிவதற்காக 2 நீர் தாங்கிகளை நன்கொடையாக வழங்கியது. இந்த முயற்சி சமூக ஈடுபாடு மற்றும் மேம்பாட்டிற்கான வங்கியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலித்தது.
இத்தகைய சமூக மேம்பாட்டு முயற்சிகள் வங்கியின் 11 வது ஆண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும். கடந்த 11 ஆண்டுகளில்இ வங்கி சீராக வளர்ந்துஇ இலங்கையின் மிகவூம் முற்போக்கான நிதி நிறுவனங்களில் ஒன்றாக அதன் அடையாளத்தை வடிவமைத்துள்ளது. இந்த முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில்இ கார்கில்ஸ் வங்கி வரையறுக்கப்பட்ட கால அளவூ கொண்டதும் உயர் வருவாமனத்தை ஈட்டித் தரக்கூடியதுமான நிலையான வைப்புத் திட்டங்கள்இ பிரத்தியேக அட்டை விளம்பரங்கள்இ கவர்ச்சிகரமான கடன் திட்டங்கள்இ ஆண்டுவிழா குலுக்கல் பரிசுகள் மற்றும் வடிவமைக்கப்பட்ட முதலீட்டு திட்டமிடல் நடைமுறைகள் உள்ளிட்ட விசேட சலுகைகளின் தொகுப்பை வங்கி அறிமுகப்படுத்தவூள்ளது. இந்த முயற்சிகள் ஒவ்வொன்றும் இலங்கையர்களின் நிதிப் பயணங்களில் பொருத்தமான மற்றும் உண்மையான பெறுமானத்தை வழங்கும் வங்கித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதே வங்கியின் நோக்கமாகும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில்இ கார்கில்ஸ் வங்கியின் நிர்வாகப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியூமான செனரத் பண்டார கருத்துத் தெரிவிக்கையில்இ “பொசன் என்பது ஆழமான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலகட்டமாகும்இ மேலும் எங்களை வழிநடத்தும் விழுமியங்களில் இது வேரூன்றியூள்ளது. கார்கில்ஸ் வங்கி தனது கதவூகளைத் திறந்து இந்த ஜூன் மாதத்துடன் 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதுஇ மேலும் நாங்கள் செயற்படவூம் கொண்டாடவூம் செய்யூம் இச்சந்தர்ப்பத்தில்இ நாங்கள் முன்னோக்கிப் பார்த்துஇ எமது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வாழ்க்கையை உண்மையிலேயே வளப்படுத்தும் நோக்கம் சார்ந்த தீர்வூகளை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறௌம். கார்கில்ஸ் வங்கியில்இ முன்னேற்றம் என்பது புதுமையை விட அதிகமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறௌம். இது சமூகத்துடனான பிணைப்புஇ பொறுப்பு மற்றும் பகிரப்பட்ட வளர்ச்சி பற்றியதாகவூம் இருக்க வேண்டும். நன்றியூணர்வூ மற்றும் உறுதிப்பாட்டுடன் எமது 2வது தசாப்த சேவையில் முன்னேறிச் செல்லும் இச்சந்தர்ப்பத்தில்இ அனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்வதையிட்டு நாம் பெருமைப்படுகிறௌம்.”
இந்த முயற்சிகள் மூலம்இ இலங்கையர்களின் கூட்டு அபிலாஷைகளை மேம்படுத்த முயற்சிக்கும் ஒரு உண்மையான நிதிப் பங்காளராக கார்கில்ஸ் வங்கி தனது அடையாளத்தை வலுப்படுத்த முயல்கிறது. கடந்த தசாப்தத்திலும்இ எதிர்காலத்திலும்இ கார்கில்ஸ் வங்கி தான் சேவை செய்யூம் சமூகங்களுடன் இணைந்து வளர்ச்சிகாண வேண்டும் என்ற தனது வாக்குறுதியை தொடர்ந்தும் நிறைவேற்றி வருகிறது.
கார்கில்ஸ் வங்கி பற்றி
டிஜிட்டல் செயல்படுத்தலால் இயக்கப்படும் இலங்கையின் அனைவரையூம் உள்ளடக்கிய வங்கியாக இருக்க வேண்டும் என்ற தொலைநோக்குடன்இ கார்கில்ஸ் வங்கி ஃபிட்ச் ரேட்டிங்ஸ் லங்காவால் யூ(டமய) மதிப்பீட்டைப் பெற்றுள்ள கார்கில்ஸ் குழுமத்தின் நிதிச் சேவைப் பிரிவாகும்இ இது முழு அளவிலான வங்கி மற்றும் நிதி சேவைகளை வழங்குகிறது. கிளைகள்இ ஏ.டி.எம் கள் மற்றும் டிஜிட்டல் வசதிகளுக்கு மேலதிகமாகஇ கார்கில்ஸ் வங்கி கணக்குகளை நாடு முழுவதும் உள்ள கார்கில்ஸ் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலமாகவூம் அணுகலாம்இ மேலும் கார்கில்ஸ் பண சேவையின் உதவியூடன் அனைத்து 530 கார்கில்ஸ் சில்லறை விற்பனை நிலையங்களிலும் இலவச பண வைப்பு மற்றும் மீளப் பெறுதல்களை அனுபவிக்க முடியூம்.
கார்கில்ஸ் வங்கி கொழும்பில் கொள்ளுப்பிட்டியைத் தலைமையிடமாகக் கொண்டுஇ மைட்லண்ட் கிரசன்ட்இ மஹரகமஇ பழைய மூர் வீதிஇ வத்தளைஇ கண்டிஇ பேராதனைஇ நுவரெலியாஇ சிலாபம்இ கோட்டைஇ இராஜகிரியஇ இரத்தினபுரிஇ தனமல்விலஇ மாத்தறைஇ காலிஇ குருணாகல்இ கதுருவெலஇ நாவலப்பிட்டியஇ யாழ்ப்பாணம்இ நீர்கொழும்புஇ அனுராதபுரம்இ பண்டாரவளைஇ குளியாப்பிட்டிய மற்றும் கேகாலை ஆகிய கிளைகளைக் கொண்டும் இயங்குகின்றது. வங்கியின் கிளை வலையமைப்பு 29 கார்கில்ஸ் வங்கி மினி சேவைப் புள்ளிகள் மூலம் வலுப்படுத்தப்பட்டுள்ளதுஇ அவை தேர்ந்தெடுக்கப்பட்ட கார்கில்ஸ் பல்பொருள் அங்காடி விற்பனை நிலையங்களுக்குள் அமைந்துள்ளனஇ அவை கணக்குத் திறப்பு மற்றும் வாடிக்கையாளர் துணை வழங்கல் போன்ற வங்கிச் செயற்பாடுகளை மேற்கொள்கின்றன.

