Home //
Media Centre
We’re in the news.
Read all about it...
கார்கில்ஸ் வங்கி குளியாப்பிட்டியில் தனது புதிய கிளையைத் திறந்துஇ அப்பிராந்தியத்தில் உள்ள விவசாய சமூகத்தின் வளர்ச்சிக்குத் துணைபுரிகின்றது.
Wed, 6 Aug 2025

நாடு முழுவதும் நிதி ரீதியான அணுகலை மேம்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டின் வெளிப்பாடாகஇ கார்கில்ஸ் வங்கி குளியாப்பிட்டியில் தனது 26 ஆவது கிளையைத் திறந்துள்ளது.

இப்புதிய கிளையின் திறப்பு விழாவில் கார்கில்ஸ் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஃ பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. செனரத் பண்டாரஇ சிரேஸ்ட முகாமைத்துவ சபையினர்இ ஊழியர்கள்இ மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் மற்றும் ஏனைய விசேட விருந்தினர்கள் கலந்து கொண்டனர். உள்ளுரைச் சேர்ந்த தொழில்முனைவோர்இ வணிகங்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு நம்பகமான மற்றும் திறமையான நிதி சேவைகளுடன் கூடிய சேவையினை வழங்குவதில் வங்கி கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வூ அதற்கான ஒரு வாய்ப்பை வழங்கியூள்ளது. மூலோபாய நோக்குடன் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்தப் புதிய கிளையானதுஇ வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற வகையிலான நட்புறவூ ரீதியான வங்கி அனுபவத்தை வழங்க உள்ளது.

கார்கில்ஸ் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஃ பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.செனரத் பண்டாரஇ இந்த விஸ்தரிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து  உரையாற்றும் சந்தர்ப்பத்தில்இ “கார்கில்ஸ் வங்கியில்இ வங்கிச் சேவையை அனைவரும் அணுகக்கூடியதாக மாற்றுவதே எமது தொலை நோக்காகும்இ மேலும் அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் குளியாப்பிட்டிய நகரில் இந்தக் கிளையைத் திறப்பது மற்றொரு படிக் கல்லாகும். நவீன முறையிலானஇ வினைத்திறனான வங்கித் தீர்வூகளைத் தேடும் தொழில்முனைவோர் மற்றும் வணிகங்கள் ஆகியவற்றைக் கொண்டு அமைந்த துடிப்பான சமூகத்தை இந்தப் பிரதேசம் கொண்டுள்ளது. எமது இருப்பை இங்கு நிறுவூவதன் மூலம்இ தனிநபர்கள் மற்றும் வணிகங்கள் செழித்தோங்குவதற்குத் தேவையான நிதிசார் உதவிகள் மற்றும் ஆதரவூகளை வலுப்படுத்துவதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.”

குளியாப்பிட்டிய கிளைஇ சேமிப்பு மற்றும் நடைமுறைக் கணக்குகள்இ கடன்கள்இ பணம் அனுப்புதல்இ கடன் அட்டைகள் மற்றும் டிஜிட்டல் வங்கி சேவைகள் உள்ளிட்ட முழு அளவிலான வங்கிச் சேவைகளை வழங்குகிறதுஇ மேலதிக வசதிக்காக 24ஃ7 நாட்கள் கொண்டு அமைந்த சுய சேவை வசதிகளுடன் சேவைகளை வழங்குகிறது. நவீன வசதிகள் மற்றும் அர்ப்பணிப்புள்ளஇ சேவை வழங்குதலை நோக்கமாகக் கொண்ட ஊழியர்களுடன்இ உள்ளுர் சமூகத்தில் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும்இ வரும் ஆண்டுகளில் நம்பகமான நிதியியல் பங்காளியாக மாறுவதற்கும் இந்தக் கிளை வடிவமைக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட வளர்ச்சிக்கும் வணிகம்சார் வளர்ச்சிக்கும் நிதியியல் சேவைகள் அதிகரித்த வகையில் முக்கியமானதாகி வருவதால்இ குளியாப்பிட்டிய பிரதேசம் போன்ற சமூகங்கள் நீண்டகால வெற்றிக்குத் தேவையான வங்கியியல் வளங்களை எளிதாக அணுகுவதை கார்கில்ஸ் வங்கியின் தொடர்ச்சியான கிளை விஸ்தரிப்புகள் உறுதி செய்கின்றன. இந்த விஸ்தரிப்பின் மூலம்இ புதுமையான மற்றும் அணுகுத் தன்மையூடன் கூடிய வங்கியியல் தீர்வூகள் மூலம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணைபுரிவதற்கான தனது உறுதிப்பாட்டை கார்கில்ஸ் வங்கி மீண்டும் உறுதிப்படுத்தியூள்ளது.

இல. 88இ ஹெட்டிபொல வீதிஇ குளியாபிட்டிய என்ற முகவரியில் அமைந்துள்ள எமது புதிய கிளைஇ 08.04.2025 அன்று உத்தியோகபூர்வமாகத் திறக்கப்பட்டது. மேலும் பரந்துபட்ட சமூகத்திற்கு அனைவரையூம் உள்ளடக்கிய முறையிலான வங்கியியல் தீர்வூகளை வழங்குவதற்கான வங்கியின் தொடர்ச்சியான முயற்சிகளை இப்புதிய கிளை வலுப்படுத்துகிறது. மேலதிக தகவல்களுக்குஇ 0377390180-3 என்ற தொலைபேசி இலக்கததின் வாயிலாக எமது கிளைக்கு அழைப்பை மேற்கொள்ளுங்கள்இ அல்லது றறற.உயசபடைடளடியமெ.உழஅ என்ற இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.

கார்கில்ஸ் வங்கி பற்றி

டிஜிட்டல் செயன்முறை மூலம் இயக்கப்படும் இலங்கையின் அனைவரையூம் உள்ளடக்கிய சிறந்த வங்கியாக இருக்க வேண்டும் என்ற தொலைநோக்குடன்இ கார்கில்ஸ் வங்கியானது ஃபிட்ச் ரேட்டிங்ஸ் லங்கா நிறுவனத்தினால் யூ(டமய) மதிப்பிடப்பட்டுள்ளது. கார்கில்ஸ் குழுமத்தின் நிதிச் சேவைப் பிரிவாக இவ்வங்கி அமைந்துள்ளது. இது முழு அளவிலான வங்கிச் சேவைகளையூம் நிதி சேவைகளையூம் வழங்குகிறது. பணத்தை கையில் வைத்துக்கொள்ளாமல் கணக்குகளில் வைத்துக்கொண்டு செயற்படுகின்ற சமூகத்திற்கு நாடு தழுவிய ரீதியில் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்த கட்டணம் செலுத்தல் தீர்வூகளைக் கொண்டு இயக்கப்படும் தொலைநோக்கு பார்வையையூம் கார்கில்ஸ் வங்கி உள்வாங்கியூள்ளது.

கிளைகள்இ ஏ.டி.எம்கள் மற்றும் டிஜிட்டல் வசதிகளுக்கு மேலதிகமாகஇ நாடு முழுவதும் உள்ள 530 க்கும் மேற்பட்ட கார்கில்ஸ் பல்பொருள் அங்காடிகள் மூலமாகவூம் கார்கில்ஸ் வங்கியின் கணக்குகளை அணுகிக்கொள்ள முடியூம்இ இவை பல்பொருள் அங்காடியின் வங்கி சேவையின் மூலம் இலவச பண வைப்பு மற்றும் பண மீள்பெறுதல்களை வழங்குகின்றது.

கார்கில்ஸ் வங்கியானது கொழும்பில் உள்ள கொள்ளுப்பிட்டியில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது மற்றும் மைட்லேண்ட் கிரசென்ட்இ மஹரகமஇ பழைய மூர் வீதிஇ வத்தளைஇ கண்டிஇ பேராதெனியஇ நுவரெலியாஇ சிலாபம்இ கோட்டைஇ இராஜகிரியஇ இரத்தினபுரிஇ தனமல்விலஇ மாத்தறைஇ காலிஇ குருநாகல்இ கதுருவெலஇ வவூனியாஇ சுன்னாகம்இ யாழ்ப்பாணம்இ நாவலப்பிட்டிஇ நீர்கொழும்புஇ அநுராதபுரம்இ பண்டாரவளை மற்றும் கேகாலை ஆகிய இடங்களில் கிளைகளைக் கொண்டு இயங்குகின்றது. கணக்கு திறப்பு மற்றும் வாடிக்கையாளர் சேவை வழங்கல் போன்ற வங்கி செயல்பாடுகளைச் செய்யூம் வண்ணம் தேர்ந்தெடுக்கப்பட்ட கார்கில்ஸ் ஃபுட் சிட்டி விற்பனை நிலையங்களுக்குள் அமைந்துள்ள 29 கார்கில்ஸ் வங்கி சிறு சேவை நிலையங்களைக் கொண்டு கார்கில்ஸ் வங்கியின் கிளை வலையமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

உங்களை நாமும் அறிந்துகொள்வோம்!
cargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.
OR
Inquiry Form