கார்கில்ஸ் வங்கிஇ கதுருவெலையிலுள்ள தனது கிளையைஇ 2024 ஜுலை 29 முதல் 13ஃ2இ வைத்தியசாலை சந்திஇ பொலன்னறுவை என்ற சௌகரியமாக அணுகக்கூடிய முகவரிக்கு இடம்மாற்றியூள்ளது. வாடிக்கையாளர்களின் சௌகரியத்தை மேம்படுத்திஇ பிராந்தியத்தில் தனது அடிச்சுவட்டை விரிவூபடுத்துவதில் அதன் தற்போதைய அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாக இந்த மூலோபாய நகர்வை கார்கில்ஸ் வங்கி முன்னெடுத்துள்ளது. நவீனஇ தாராளமான இட வசதி கொண்ட மற்றும் வரவேற்கத்தக்கதொரு சூழலை இப்புதிய கிளை வழங்குகின்றது. மேம்பட்ட வசதிகள் மற்றும் சேவைகளுடன் தனிநபர் மற்றும் வணிக வாடிக்கையாளர்கள் என இரு தரப்பினரதும் சேவைகளை சிறப்பாக நிறைவேற்றுவதற்கு இந்த இடமாற்றம் வங்கிக்கு இடமளிக்கின்றது. கார்கில்ஸ் வங்கி இப்புதிய அமைவிடத்திற்கு இடம்மாற்றம் செய்யப்பட்டுஇ ஜுலை 29 அன்று உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட நிகழ்வில் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரிஃமுகாமைத்துவப் பணிப்பாளர் திரு. செனாரத் பண்டார உள்ளிட்ட வங்கியின் உயர் அதிகாரிகள்இ பணியாளர்கள் மற்றும் மதிப்பு மிக்க வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
“கதுருவெலை கிளை புதிய இடத்திற்கு மாற்றம் செய்யூம் எமது தீர்மானம்இ எமது வாடிக்கையாளர்களுக்கு தலைசிறந்த வங்கிச்சேவை அனுபவத்தை வழங்குவதில் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றதுஇ” என்று கார்கில்ஸ் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரிஃமுகாமைத்துவப் பணிப்பாளர் திரு. செனாரத் பண்டார அவர்கள் குறிப்பிட்;டார். “கதுருவெலையிலுள்ள சமூகத்துடன் ஒன்றிணைந்து வளர்ச்சி கண்டுள்ள நிலையில்இ மக்களுக்கு தொடர்ந்தும் மகத்தான நிதிச் சேவைகளை வழங்கிஇ புதிய வாய்ப்புக்களைத் தோற்றுவிப்பதற்கு நாம் ஆவலாக உள்ளோம். இப்பிரதேசத்தில் விவசாயத் துறை மீது நாம் விசேட கவனம் செலுத்தவூள்ளதுடன்இ இப்பிரதேசத்திற்கு பிரதானமாகவூள்ள இத்துறை சிறப்பான வளர்ச்சி வாய்ப்பினைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு இலங்கையரின் வளர்ச்சிக்குமான உணர்வை வளர்த்துஇ உள்நாட்டு சமூகம் மற்றும் அப்பிரதேசத்தைக் கடந்துசெல்பவர்கள் அனைவருடனும் எமது கூட்டாண்மையை மேம்படுத்துவதில் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த இடம்மாற்றம் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இலங்கையில் அனைவரையூம் அரவணைத்துஇ உள்ளடக்குவதில் மிகச் சிறந்த வங்கி என்ற ரீதியில்இ எமது விசுவாசம்மிக்க மற்றும் புதிய வாடிக்கையாளர்களை புதிய இடத்தில் அமைந்துள்ள எமது கிளைக்கு வருகை தந்துஇ கார்கில்ஸ் வங்கியின் தனித்துவமான அனுபவத்தை அனுபவித்து மகிழ வரவேற்பத்தில் நாம் ஆவலாக உள்ளோம்!இ” என்று குறிப்பிட்டார்.
புதிய இடத்தில் அமைந்துள்ள இக்கிளைஇ நீட்டிக்கப்பட்ட டெலர் கருமபீடங்கள்இ வாடிக்கையாளர்கள் காத்திருப்பதற்கான தாராளமான இட வசதிஇ ஏடிஎம் சேவைகள்இ காசோலை வைப்புக்கள்இ மேம்படுத்தப்பட்ட சுய-சேவை தெரிவூகள் அடங்கலாக பல்வேறுபட்ட வசதிகளை வழங்குகின்றது. கனிவூம்இ அறிவூம் கொண்ட கார்கில்ஸ் வங்கி அணியிடமிருந்துஇ தற்போது மிகவூம் சௌகரியமான ஏற்பாட்டுடன் அதியூயர் தராதரம் கொண்ட சேவையை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்க முடியூம். கார்கில்ஸ் வங்கி கதுருவெலை கிளை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையூம்இ சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையூம் வங்கி நடவடிக்கைகளுக்காக திறந்திருக்கும்.
இலங்கையில் அனைவருக்கும் மிகவூம் அணுகக்கூடியதாக வங்கிச்சேவையை மாற்றியமைக்க வேண்டும் என்ற இலக்கில் கார்கில்ஸ் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளதுடன்இ அந்த இலக்கினை அடைவதற்கு வங்கி முன்னெடுத்துள்ள பல்வேறு படிகளில் ஒன்றாக இந்த கிளை இடம்மாற்றம் காணப்படுகின்றது.
கார்கில்ஸ் வங்கி தொடர்பான விபரங்கள்
டிஜிட்டல் இடமளிப்பு மூலமாக இலங்கையின் மிகவூம் அரவணைப்புடனான வங்கியாக மாறவேண்டும் என்ற குறிக்கோளுடன் இயங்கி வருகின்ற கார்கில்ஸ் வங்கிஇ குவைஉh சுயவiபௌ டுயமெய இடமிருந்து யூ(டமய) என்ற கடன் தரப்படுத்தலைப் பெற்றுள்ளதுடன்இ கார்கில்ஸ் குழுமத்தின் நிதியியல் சேவைகள் பிரிவாகஇ முழுமையான வங்கி மற்றும் நிதியியல் சேவைகளை வழங்கி வருகின்றது. நாடளவில் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட கொடுப்பனவூத் தீர்வூகளை முன்னெடுத்துஇ பௌதிக பண வடிவ பயன்பாட்டிலிருந்து டிஜிட்டல் பண வடிவ பயன்பாட்டுக்கு மாறுகின்ற நோக்குடன் இவ்வங்கி இயங்கி வருகின்றது.
கிளைகளுக்கு புறம்பாகஇ யூவூஆ மையங்கள் மற்றும் டிஜிட்டல் வங்கிச்சேவை மார்க்கங்களையூம் கொண்டுள்ளதுடன்இ நாடளவிலுள்ள கார்கில்ஸ் சில்லறை வர்த்தக மையங்கள் மூலமாகவூம் கார்கில்ஸ் வங்கிக் கணக்குகளை அணுகிஇ கார்கில்ஸ் பண சேவையின் (ஊயசபடைடள ஊயளா ளுநசஎiஉந) துணையூடன் 470 க்கும் மேற்பட்ட கார்கில்ஸ் சில்லறை வர்த்தக மையங்களில் எவ்விதமான கட்டணங்களுமின்றி பண வைப்புக்கள் மற்றும் பணம் மீளப்பெறல் செயல்பாடுகளை அனுபவித்து மகிழலாம்.
கொழும்புஇ கொள்ளுப்பிட்டியில் கார்கில்ஸ் வங்கியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளதுடன்இ மெயிட்லான்ட் கிறெசென்ட்இ மகரகமைஇ பழைய சோனகத் தெருஇ வத்தளைஇ கண்டிஇ பேராதனைஇ நுவரெலியாஇ சிலாபம்இ கோட்டைஇ இராஜகிரியஇ இரத்தினபுரிஇ தனமல்விலஇ மாத்தறைஇ காலிஇ குருணாகல்இ கருதுவெலைஇ வவூனியாஇ சுன்னாகம்இ யாழ்ப்பாணம்இ நாவலப்பிட்டிஇ நீர்கொழும்புஇ அனுராதபுரம் மற்றும் பண்டாரவளை ஆகிய இடங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது. கணக்கொன்றை ஆரம்பித்தல் மற்றும் வாடிக்கையாளர் உதவிச் சேவை போன்ற ஏனைய வங்கிச்சேவை தொழிற்பாடுகளை முன்னெடுக்கக்கூடிய வகையில் தெரிவூ செய்யப்பட்ட கார்கில்ஸ் பூட் சிட்டி வியாபார மையங்களில் அமைந்துள்ள 30 கார்கில்ஸ் வங்கி மினி சேவை மையங்களின் பக்கபலத்தையூம் வங்கியின் கிளை வலையமைப்பு கொண்டுள்ளது.
