முகப்பு // Personal // Services
மொபைல் வங்கிச்சேவை
நீங்கள் மொபைலில் இருந்து கொண்டே
மொபைல் வங்கிச்சேவையை மேற்கொள்ள முடியும்!

கார்கில்ஸ் வங்கி மொபைல் வங்கிச்சேவை மூலமாக சௌகரியமான உலகை அனுபவியுங்கள்.

5 நிமிடத்திற்குள் மிக இலகுவாக மொபைல் வங்கிச்சேவைக்கான சுய-பதிவை மேற்கொள்ளுங்கள்!

டிஜிட்டல் வங்கிச்சேவை

உங்களுடைய வங்கிக்கணக்கினை உங்களுடை மொபைல் மூலமாக முழுமையான கட்டுப்பாட்டினுள் பேணுங்கள்!!

கார்கில்ஸ் வங்கி “டிஜிட்டல் வங்கிச்சேவை” தனியொரு பயனர் அடையாளம் மற்றும் கடவுச்சொல்லுடன் வங்கியின் அனைத்து இணைய ஊடகங்களையும் (இணைய வங்கிச்சேவை, மொபைல் வங்கிச்சேவை – மொபைல் பயன்பாடு மற்றும் USSD வங்கிச்சேவை) பெற்றுக்கொள்ளும் சௌகரியத்தை உங்களுக்குத் தருகின்றது. இந்த தனித்தவமான அம்சமானது இலங்கையின் வங்கிச்சேவை தொழிற்துறையில் “Omni-Channel” எண்ணக்கருவுடன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சௌகரியத்தை வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது.

நீங்கள் ஒரு Android அல்லது Apple iOS பயனராகவும், கார்கில்ஸ் வங்கியில் சேமிப்பு அல்லது தனிப்பட்ட நடைமுறைக் கணக்குகளைப் பேணுபவராகவும் இருப்பின்,   மூலமாக கார்கில்ஸ் மொபைல் பயன்பாட்டை மிக இலகுவாக பதிவிறக்கம் செய்து இந்த வசதியை அனுபவிக்க முடியும்.

இப்போதே உபயோகிக்க ஆரம்பியுங்கள்

இப்போதே உபயோகிக்க ஆரம்பியுங்கள்

கார்கில்ஸ் வங்கி டிஜிட்டல் வங்கிச்சேவையில் பதிவு செய்து கொள்வதற்கு உங்களுக்கு அருகாமையிலுள்ள கார்கில்ஸ் வங்கி கிளைக்கு விஜயம் செய்யுங்கள் அல்லது கார்கில்ஸ் ஃபூட் சிட்டி விற்பனை மையத்திலுள்ள எமது வங்கியின் பிரத்தியேக பிரதிநிதி ஒருவரை சந்தியுங்கள்.

 

உங்களுக்கு தேவையானதெல்லாம்: வங்கியுடன் ஏற்கனவே பதிவு செய்து கொண்டுள்ள மொபைல் இலக்கமொன்றும், மின்னஞ்சல் முகவரியொன்றும் மட்டுமே.

 

ஒரு பணி தினத்திற்குள் இதனை பெற்றுக்கொள்ளும் தகவல் விபரங்களை (பயனர் அடையாளச் சொல் மற்றும் கடவுச்சொல்) நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். பயனர் அடையாளச் சொல் மின்னஞ்சல் மூலமாக உங்களுக்கு அறியத்தரப்படுவதுடன், ஒரு முறை உபயோகத்திற்கான கடவுச்சொல் நீங்கள் பதிவு செய்து கொண்டுள்ள உங்களது மொபைல் தொலைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும்.

 

உங்களுடைய மொபைல் தொலைபேசிக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற ஒரு முறை உபயோகத்திற்கான கடவுச்சொல் நீங்கள் விரும்பியவாறு வேறு ஒரு கடவுச்சொல்லுக்கு உடனடியாக மாற்றம் செய்யப்படல் வேண்டும்.

 

கீழே தரப்பட்டுள்ள கடவுச்சொல் தொடர்பான கொள்கைகளை உபயோகித்து, வலுவான கடவுச்சொல் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளவும்.

 • புதிய கடவுச்சொல்லானது குறைந்த பட்சமாக 8 எழுத்துக்களைக் கொண்டிருக்கவேண்டியதுடன், 15 எழுத்துக்களுக்கு மேற்படல் ஆகாது
 • எழுத்துக்கள், விசேட எழுத்துக் குறியீடுகள், இலக்கங்கள் மற்றும் விசைப்பலகை மேற்குறி மற்றும் கீழ்க்குறி ஆகியவற்றின் இணைப்பாக புதிய கடவுச்சொல் அமைதல் வேண்டும்.
 • விசேட எழுத்துக் குறிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன: – @ . + , / _
நீங்கள் எச்சேவைகளை அனுபவிக்க முடியும்?
 • “Cargills Cash” சேவைகளைப் பெற்றுக்கொள்ளல்
 • இலங்கையில் முதன்முறையாக எந்தவொரு கார்கில்ஸ் ஃபூட் சிட்டி விற்பனை மையத்திலும் பணத்தை வைப்புச் செய்யவோ அல்லது மீளப்பெறவோ மற்றும் உங்களுடைய மொபைல் தொலைபேசியை உபயோகித்து பொருட்களைக் கொள்வனவு செய்யவோ முடியும்.
 • நீங்கள் எந்த மொபைல் தொலைபேசிக்கும் பணத்தை உடனடியாக அனுப்பி வைக்க முடிவதுடன், எந்த கார்கில்ஸ் ஃபூட் சிட்டி விற்பனை மையத்திலும் பணத்தை மீளப் பெற முடியும்.
 • உங்களுடைய கணக்கு மீதி/கணக்கு கொடுக்கல்வாங்கல் விபரங்களை பார்ப்பதற்கு.
 • வரிசைகளில் காத்திருக்காது உங்களுடைய பாவனைக் கட்டணப் பட்டியல்களுக்கான கொடுப்பனவை மேற்கொள்வதற்கு/உங்களுடைய மொபைல் தொலைபேசிக்கு மீள்நிரப்பல் செய்வதற்கு.
 • பணப் பரிமாற்றம் செய்வதற்கு.
 • உங்களுக்கு சொந்தமான கார்கில்ஸ் வங்கிக் கணக்கு.
 • ஏனைய கார்கில்ஸ் வங்கிக் கணக்கு.
 • “SLIPS” இனை உபயோகித்து ஏனைய வங்கிக் கணக்கு.
 • “CEFT” இனை உபயோகித்து ஏனைய வங்கிக் கணக்கு.
 • ஏனைய வங்கிகளில் நீங்கள் கொண்டுள்ள கடனட்டை நிலுவைகளுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு.

 

உடனடி, எதிர்கால மற்றும் தொடர்ச்சியான பணப் பரிமாற்றம் என கிடைக்கப்பெறுகின்ற மூன்று தெரிவுகளுடன் உங்களுடைய பணப் பரிமாற்றங்களை அல்லது கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகளைத் திட்டமிடுங்கள்.

 • காசோலைப் புத்தமொன்றுக்கு விண்ணப்பியுங்கள்.
 • நிலையான கட்டளைகள் – நிலையான கட்டளை அறிவுறுத்தல்களை சமர்ப்பித்து, தற்போதுள்ள நிலையான கட்டளைகளைப் பார்வையிடுங்கள்.
 • இலத்திரனியல் கூற்றுக்கள் / எஸ்எம்எஸ் உடனடி செய்திகளுக்கான கோரிக்கையை முன்வையுங்கள்.
USSD அடிப்படையிலான மொபைல் வங்கிச்சேவை

#323# இனை டயல் செய்வதன் மூலமாக தற்போது நீங்கள் உங்களது வங்கிக் கணக்குகளை அடையப் பெற முடியும்.

 

மொபைல் வங்கிச்சேவை – USSD வடிவமானது அனைத்து மாதிரியான தொலைபேசிகளுக்கும் இசைவாக்கம் கொண்டதுடன், இந்த வசதி டயலொக் வலையமைப்பின் மூலமாகக் கிடைக்கப்பெறுகின்றது. இந்த வசதியை அடையப் பெறுவதற்கு விசேடமான மொபைல் App ஏதும் அல்லது மொபைல் இணைய தரவு வசதி ஏதும் தேவையில்லை.

 

எவ்வாறு பெற்றுக்கொள்வது:

 • அருகாமையிலுள்ள கார்கில்ஸ் வங்கிக் கிளையில் உங்களது மொபைல் வங்கிச்சேவை விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பியுங்கள்.
 • நீங்கள் பதிவு செய்துள்ள மொபைல் இலக்கத்திற்கு ஒரு முறை உபயோகத்திற்கான கடவுச்சொல் கிடைக்கப்பெறும்.
 • #323# இனை இலகுவாக டயல் செய்து ஒரு முறை உபயோகத்திற்கான கடவுச்சொல்லை நீங்கள் விரும்புகின்ற ஒரு புதிய கடவுச்சொல்லுக்கு உடனடியாக மாற்றிக் கொள்ளுங்கள்.

 

USSD மொபைல் வங்கிச்சேவை சிறப்பம்சங்கள்:

 • உங்களுடைய அனைத்து கணக்குகளினதும் கணக்கு மீதி மற்றும் சுருக்கக் கூற்று
 • Cargills Cash பணம் மீளப் பெறுதல்/கொள்வனவு
 • Cargills Cash பணம் அனுப்புதல்
பொதுவாக எழுகின்ற வினாக்கள்
கார்கில்ஸ் வங்கி உங்களை வரவேற்கின்றது…
கார்கில்ஸ் வங்கி வழங்கும் வியக்கவைக்கும் வங்கிச்சேவைகளை அனுபவியுங்கள்

உங்களை நாமும் அறிந்துகொள்வோம்!
cargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.
OR
Inquiry Form