முகப்பு // Personal // Savings Accounts
High Return Saver
அதிகம் அதிகமாக
பிரதிலாபங்கள்!

சேமிப்பிற்கு மறுவரைவிலக்கணம் வகுத்து, எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே வெகுமதியளிக்கின்றது.

நீங்கள் அறிந்துள்ளீர்களா?
 • வருடாந்தம் 4.85% வரையான வியக்கவைக்கும் வட்டி வீதம் உங்களுக்கு கிடைக்கப்பெறுகின்றது.
 • உங்களுடைய வட்டியை சராசரி கணக்கு மீதியின் அடிப்படையில் அல்லது நாளாந்தம் முடிவு மீதியின் அடிப்படையில் நாம் கணிப்பதுடன், அது மாத முடிவில் உங்களுடைய கணக்கில் சேர்ப்பிக்கப்படுகின்றது.
 • ரூபா 1,000/- என்ற ஆரம்ப வைப்புத் தொகையுடன் நீங்கள் கணக்கொன்றை மிக இலகுவாக ஆரம்பிக்க முடியும்.
 • குறைந்தபட்ச கணக்கு மீதியை நீங்கள் பேணத் தேவையில்லை.
 • 3,500 இற்கும் மேற்பட்ட Lankapay ATM மையங்கள் மூலமாக உங்களது கணக்கினை நீங்கள் தொழிற்படுத்த முடியும்.
 • நீங்கள் மாதம் தோறும் 4 தடவைகள் ATM மூலமாக இலவசமாக பணத்தை மீளப் பெற முடியும்.
 • நாம் உங்களுக்கு மாதாந்தம் இலத்திரனியல் கணக்குக்கூற்றுக்களை வழங்குவதுடன், அது உங்களுக்கு கூடுதல் சௌகரியத்தைத் தருகின்றது.
 • எமது இணைய மற்றும் மொபைல் வங்கிச்சேவைகள் ‘உங்களுடைய விரல் நுனிகளில் வங்கிச்சேவையை’ பெற்றுக்கொள்ள வழிவகுக்கின்றது.
வேறு என்ன?

‘Cargills Cash’ மூலமாக நீங்கள் வருடத்தில் 365 நாட்களும் மு.ப. 8.00 மணி முதல் பி.ப 10.00 மணி வரை திறந்துள்ள 400 இற்கும் மேற்பட்ட கார்கில்ஸ் ஃபூட் சிட்டி விற்பனை மையங்களினூடாக நீங்கள் தற்போது வைப்புச் செய்யவோ, மீளப்பெறவோ, பணத்தை அனுப்பவோ அல்லது பொருட்களைக் கொள்வனவு செய்யவோ முடியும்.

வேண்டிய தகைமைகள்;
 • 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயது உடையவராக இருத்தல்.
 • செல்லுபடியாகும் இலங்கை தேசிய அடையாள அட்டை/கடவுச்சீட்டு/சாரதி அனுமதிப் பத்திரத்தைக் கொண்டிருத்தல்.
வட்டி வீதங்கள்

 

நாளாந்த முடிவு மீதி வட்டி வீதம் p.a
ரூபா 25,000 இற்கு கீழ் 4.00%
ரூபா 25,000 – ரூபா 74,999 4.50%
ரூபா 75,000 – ரூபா 149,999 4.60%
ரூபா 150,000 – ரூபா 249,999 4.75%
ரூபா 250,000 இற்கு மேல் 4.85%
உங்களுக்கு தேவையானவை என்ன?
 • உங்களுடைய இலங்கை தேசிய அடையாள அட்டை/கடவுச்சீட்டு/சாரதி அனுமதிப்பத்திரத்தின் பிரதி
 • உங்களுடைய வதிவிட முகவரியை உறுதிப்படுத்துவதற்காக சமீபத்தைய பாவனைக் கட்டணப் பட்டியல்/வங்கிக்கூற்று

ஆகவே தற்போதே இதற்கு விண்ணப்பியுங்கள். எம்மை அழையுங்கள் அல்லது எம்முடன் உரையாடுங்கள். ‘High Return’ சேமிப்பு பயணத்தை நீண்டதாகவும், மிகவும் பயன்மிக்கதாகவும் நீங்கள் முன்னெடுக்க உங்களுக்கு உதவ நாம் காத்திருக்கின்றோம்.

கார்கில்ஸ் வங்கி உங்களை வரவேற்கின்றது…
கார்கில்ஸ் வங்கி வழங்கும் வியக்கவைக்கும் வங்கிச்சேவைகளை அனுபவியுங்கள்

உங்களை நாமும் அறிந்துகொள்வோம்!
cargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.
OR
Inquiry Form