முகப்பு // Personal // Loans
வைத்தியர்களுக்கான கடன்கள்
எம்மீது அக்கறை செலுத்தும்
உங்கள் மீது நாம் அக்கறை கொண்டுள்ளோம்!

நீங்கள் எங்கள் மீது அக்கறை செலுத்துகின்றவாறு உங்களுடைய தேவைகளை நாம் நிறைவேற்றுவோம்.

நீங்கள் அறிந்துள்ளீர்களா?
 • அதிகபட்சமாக ரூபா 10.0 மில்லியன் வரையான கடன்களை நாம் உங்களுக்கு வழங்குகின்றோம்.
 • எமது மீள்கொடுப்பனவுக் காலம் 7 வருடங்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எவர் விண்ணப்பிக்க முடியும்

இலங்கை மருத்துவர்கள் சங்கம், இலங்கை பல் மருத்துவர்கள் சங்கம் மற்றும் இலங்கை கால்நடை மருத்துவர்கள் சங்கம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு மருத்துவராகவும், நிலையான படிகளுடன் குறைந்தபட்சமாக ரூபா 30,000/- இற்கும் மேற்பட்ட மாதாந்த மொத்த சம்பளத்தை பெற்றுக்கொள்பவராகவும் இருத்தல் வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள்
 • முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட தனிப்பட்ட கடன் விண்ணப்பம்
 • உங்களுடைய தேசிய அடையாள அட்டையின் பிரதி.
 • வதிவிட முகவரியை உறுதிப்படுத்துவதற்கான அண்மித்த கட்டணப் பட்டியல் பிரதி
 • கடைசி 3 மாதங்களுக்கான சம்பளப் பட்டியல்.
 • கடைசி 3 மாதங்களுக்கான வங்கிக்கூற்று.
 • வைத்தியரின் தரத்தை உறுதிப்படுத்தும் கடிதம்.
 • வைத்தியர் அடையாள அட்டை.
 • உள்ளகப் பயிற்சி/கடமை அதிகாரி – உள்ளக அடையாள அட்டை.
 • பூர்வாங்க ஆவணங்கள் – இலங்கை மருத்துவர்கள் சங்க அடையாள அட்டையின் பிரதி/மருத்துவ சான்றிதழ்/வைத்தியசாலை அடையாள அட்டை.
 • தரம் II / தரம் I / நிர்வாகம் / வைத்திய நிபுணர் – இலங்கை மருத்துவர்கள் சங்கம் / இலங்கை பல் மருத்துவர்கள் சங்கம் / இலங்கை கால்நடை மருத்துவர்கள் சங்க அடையாள அட்டையின் பிரதி.
 • தனியார் பயிற்சியை உறுதிப்படுத்தும் வகையில் விண்ணப்பதாரியின் அல்லது வைத்தியசாலையின் கடிதம்.
இனியும் ஏன் தாமதம்?

ஆகவே தற்போதே இதற்கு விண்ணப்பியுங்கள். எம்மை அழையுங்கள் அல்லது எம்முடன் உரையாடுங்கள். உங்களுடைய அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் ஆகியவற்றைப் போற்றும் வகையில் கடனைப் பெற்றுக்கொள்ளும் இலகுவான வழியை நாம் உங்களுக்கு காண்பிப்போம்.

கார்கில்ஸ் வங்கி உங்களை வரவேற்கின்றது…
கார்கில்ஸ் வங்கி வழங்கும் வியக்கவைக்கும் வங்கிச்சேவைகளை அனுபவியுங்கள்

உங்களை நாமும் அறிந்துகொள்வோம்!
cargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.
OR
Inquiry Form